திருமணமான எல்லா புருஷன்மார்களுக்கும் வேதாகமம் தரும்
"முதல் கட்டளை" என்ன தெரியுமா?
"புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு,
தன் மனைவியோடே இசைந்திருப்பான்" (ஆதியாகமம் 2:24) என்ற கட்டளையே ஆகும்.
ஆதியாகமம் 2-ஆம் அதிகாரத்தில் இந்த முதல் கட்டளை பிறந்த சமயம், ஆதாமுக்கு
'பிரிந்து விட்டுவருவதற்கென' ஒரு தகப்பனும் தாயும் இல்லாதவனாகவே
இருந்தான்!
ஆகவே, ஆதாமுக்குப் பின்பு திருமணமாகப்போகும் நமக்காகவே
"இந்த முதல் கட்டளையை"
தேவன் தந்தார் என்பதை நாம் தெளிவாய் விளங்கிக்
கொள்ள முடிகிறது!!!
ஆனால், துரதிருஷ்டவசமாய் இந்தியாவில் நடக்கும் எண்ணற்ற திருமணங்களில்
கணவன் அல்லது புருஷன்மார்கள் இந்த கட்டளைக்கு கீழ்ப்படிவதே இல்லை!
கிறிஸ்தவர் அல்லாத கணவன்மார்கள் தங்கள் மனைவியோடு இசைந்திருப்பதைவிட
தங்கள் பெற்றோர்களோடு அதிகமாய் பிணைக்கப்பட்டு கிடப்பதை நாம்
விளங்கிக்கொள்ள முடிகிறது!
ஆனால், இந்த விஷயத்தில்
கிறிஸ்தவரல்லாத இந்திய கலாச்சாரத்தை,
கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதை நாம் என்னவென்று சொல்வது?!
ஆம், நம் தேசத்திற்கு தேவன் காட்ட விரும்பும் "நல்ல திருமண மாதிரியை"
இந்த கிறிஸ்தவர்கள் காட்டத் தவறிவிட்டார்கள்!!
இங்கு முக்கியமானது, நம் பெற்றோர்களை சரீரபிரகாரமாக அவர்களைவிட்டுப்
பிரிவதல்ல. . . மாறாக, அவர்களின் பாச உணர்வுகளிலிருந்து நம்மைப்
பிரித்துக்கொள்வதே மிக முக்கியமாகும்!
ஆம், ஒரு புருஷன்தன் மனைவிக்குவிசுவாசமாய் நடந்துகொள்வதையே இப்போது
முதன்மையாக கொள்ளவேண்டும். . .
அதேபோல், தன் அந்தரங்க பாச-உணர்வில்தன் மனைவியிடமே
பிணைக்கப்பட வேண்டும், தன் பெற்றோர்களிடத்தில் அல்ல!!
அதைப்போவவே, ஒரு மனைவியும் "தன் தகப்பன் வீட்டை மறந்துவிட வேண்டும்"என்றே
கட்டளையிடப்பட்டிருக்கிறாள் (சங்கீதம் 45:10).
ஓர் மெய் சீஷனாய் தன் குருவாகிய ஆண்டவரைப் பின்பற்றுவதற்குத் தடங்கலாக,
இன்று நம் இந்தியாவிலுள்ள அனேக கிறிஸ்தவர்கள் தங்கள் பெற்றோர்களிடம்
அசாதாரணமான பாசப் பிணைப்பில் சிக்குண்டு கிடக்கிறார்களே!!
நம் ஆண்டவரின் சீஷத்துவ கட்டளைக்கு மறுத்து அவரைப் பின்பற்றாத
விசுவாசிகள் ஏராளமாய் இருக்கிறார்கள்! தங்கள் தாயின் கண்ணீரைக் கண்டோ
அல்லது பெற்றோர்களின். . . "உனக்கு நாங்கள் என்னவெல்லாம் செய்தோம்
தெரியுமா?. . ." போன்ற மனம்
நெகிழச்செய்யும் வார்த்தைகளைக் கேட்டோ இவர்கள் அந்த பாசத்தில்
நிலைகுலைந்து ஆண்டவரின் கட்டளைக்கு
கீழ்ப்படியாதவர்களாய் போகிறார்கள்.
இவ்வாறாக, "நாங்கள் இயேசுவின் சீஷர்களாய் இருப்பதற்கு
அருகதையற்றவர்கள்!" என்பதை இவர்களே கூவி பறைசாற்றுகிறார்கள்!
தங்கள் மனுஷீகமான அன்பிற்காக, இயேசு செய்ததுபோல் பட்டயத்தை
பயன்படுத்தாதவர்கள், ஒத்தவேஷம்
தரிக்கிறவர்களாய் மாறி. . . தங்கள் நீண்டகால அனுபவத்தில் ஆவிக்குரிய பெருநஷ்டம்
அடைந்தவர்களாயும் மாறிவிடுகிறார்கள்!
தங்கள் பெற்றோர்களுக்கு முன்பாக 'உருவிய பட்டயத்தோடு' எதிர்கொண்ட செயல்,
லேவியின் புத்திரர்களுக்கு மிகுந்த வேதனையான
செயலாகத்தான் இருந்தது! ஆகிலும் அச்செயலை தங்கள் ஆண்டவருக்காகவே
நிறைவேற்றினார்கள்.
இவ்வாறு, தேவனுக்குப் பயந்து அவருடைய நாமத்தை கனம் பண்ணியதற்காக
லேவியர்களுக்கு ஆண்டவர் அருளிய பாக்கியம் என்ன தெரியுமா?
"தேவனுடைய உடன்படிக்கையின்படியான ஜீவனையும், சமாதானத்தையும். . .
அவனுக்கு கட்டளையிட்டார்!" (மல்கியா 2:4,5).
ஆம்,லேவி உபயோகித்த 'பட்டயமே' இந்த தெய்வீக சமாதானத்தை அவனுக்கு வழங்கியது!!
தமிழ் வடிவம் :
டி. ரத்தினகுமார்
தகப்பன்-தாய் ‘பாசப்பிணைப்பு’ துண்டிக்காமல், நல்ல குடும்பம் இல்லை! - சகரியா பூணன்
0
April 14, 2016
Tags