லெபனான்

லெபனோன் வேதாகமத்தில் லீபனோன் என்று அழைக்கப்படுகின்றது. கி.பி 1981க்கு
பின்புதான் தற்போதுள்ள நானடு லெபனோன் என்று அழைக்கப்பட்டது. முதலாவது
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்தது. கி.பி 1941 சுதந்திரம் பெற்றது.
லெபனானுக்கு கிழக்கேயும் வடக்கேயும் சிரியா, மேற்கே மத்திய தரைக்கடல்,
தெற்கே இஸ்ரவேல் இதன் எல்லையாக அமைந்துள்ளது.
சில புள்ளி விபரங்கள்:
*.பரப்பளவு : சுமார் 10 400 சதுர கிலோ மீட்டர்
*.மக்கள் தொகை: சுமார் 32 இலட்சம்
*.அரேபியர்: 86%
*.அரேபியர்: 53%
*.கிறிஸ்தவர்: 38,7
*.தேசரிய மொழி: அரேபி
*.கல்வி கற்றோர்: 70%
*.வருட வருமானம்: 800 டாலர்
*.தலைநகரம்: பெய்ரூட்
*.மக்கள் தொகை: 14,18,000

இரண்டு மலைத்தொடர்களுக்கு மத்தியிலுள்ள அழகான பள்ளத்தாக்கு நாடு லெபனான்.
சுமார் 120 கி.மீ நீளமும் 16 கி.மீ அகலமும் உள்ளது. இந்த பள்ளத்தாக்கு
பெக்கா என்று அழைக்கப்படுகின்றது.
உபாகமம் 1: 7,ல் லீபனோன் என்று முதலாவதாக வருகின்றது. லீபனோன்
ஆசீர்வாதத்திற்கு அடையாளமாக பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. எருசலேம்
தேவாலயத்திற்கு தேவையன கேதுரு மரங்களை சாலமோன் இராஜா இங்கிருந்து
கொண்டுவந்தான். இந்த கேதுரு மரங்கள் இன்னமும் லெபனானில் காண
முடியும்.புதிய ஏற்பாட்டுக்காலத்தில் லெபனான் பெனிக்கே (பொனிசீயா) என்று
அழைக்கப்பட்டது. (அப்போஸ்தலர் 11:19)

கேபால் - பைப்லோஸ் (Byblos)
தற்போதுள்ள இதன் பெயர் பைப்லோஸ். இது லெபனானின் தலைநகரமான பெய்ரூட்டிற்கு
வடக்கே 40கி.மீ தூரத்தில் மத்திய தரைக்கடல் கரை ஓரத்தில் அமைந்துள்ளது.
வேதாகம நாட்களில் இது கேபால் என்று அழைக்கப்பட்டது. சங்கீத் 83:6. யோசுவா
13: 5ல் கிப்லியர் என்று இந்த ஊரார்களை அழைத்தனர். 1இராஜாக்களில் கிபலி
ஊரார் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எருசலேம் தேவாலய வேலைக்கு
செய்வதற்கு தேவையான மரங்களை சேகரிப்பதில் உதவி செய்தனர். இந்த
பட்டணத்தின் மதில்கள் கி.மு 2900ல் கட்டப்பட்டவை.

ஆதி காலத்தில் எழுதுவதற்கு பயன்பட்ட பப்பைரஸ்(Papyrus)என்ற
நாணற்செடியிலிருந்து ஆயத்தமாக்கப்பட்ட ஓலை இந்த ஊரில்தான்
தயாரிக்கப்பட்டது. இந்த ஊரின் பெயர் பைப்லோஸ்(Byblos)என்று பார்த்தோம்.
எனவே அந்த ஊரிலிருந்து தயாரிக்கப்பட்ட பப்பைரஸ்(Papyrus)ஓலையில்
எழுதப்பட்ட நூல்களை இந்த ஊரின் பெயரைக்கொண்டு பிப்லியா(Biblia)என்று
கிரேக்கர்கள் அழைக்தனர். வேதாகமும் இந்த முறையில் எழுதப்பட்டபோது
பிப்லியா என்று பெயர் சூட்டினர். இந்த வார்த்தையிலிருந்துதான் ஆங்கில
வார்த்தையான் பைபிள்(BIBLE)வந்தது. இதன் பொருள் புத்தகங்களின்
புத்தகம்(Book of Books).எல்லா புத்தகங்களுக்கும் மேலானது. என்பது
பொருள். ஆரம்ப நாட்களில் அநேக வேதாகம பிரதிகள் இந்த ஊரிலிருந்து தான்
கையினால் எழுதப்பட்டு அனுப்பப்பட்டது. எனவே இந்த ஊர் புத்தகத்தின் ஊர்
என்று அழைக்கப்படுகிறது.
சீதோன்
பெய்ரூட்டிலிருந்து தெற்கே சுமார் 48 கி.மீ தூரத்திலிருக்கிறது சீதோன்.
கானானியரின் வடக்கு எல்லையாய் சீதோன் இருந்தது (ஆதியாகமம் 10 :19).
யோசுவா இதை பெரிய சீதோன் என்று அழைக்கிறார் (யோசுவா 11 :8 ).
சீதோனியர் இஸ்ரவேலரை ஒடுக்கினர் (நியாயாதிபதிகள் 10 :12 ).
சீயோனின் ராஜாவாகிய எத்பாகாலின் மகளான யேசபேலை, ஆகப் விவாகம் செய்ததின்
நிமித்தம் விக்கிர ஆராதனை இஸ்ரவேலுக்குள் நுழைந்தது (1 ராஜாக்கள் 16 :31
-33 ). இந்த பட்டணத்தின் பாவத்தை இயேசு கண்டித்து பேசினார் (மத்தேயு 11
:21 -24 ). கி.மு 351 ல் பெர்சியர் இந்த பட்டணத்தை முற்றுகையிட்டனர்.
இந்த நகர மக்கள் சரணடைவதற்கு பதில் நகரத்திற்கு தாங்களே தீவைத்து 40 000
மாண்டனர். இயேசு கிறிஸ்துவும் தம் பயணத்தில் இதன் எல்லை வரை வந்தார்
(மத்தேயு 15 :21 , மாற்கு 7 :24 ) . சீரோபெனிக்கேய பெண்ணின் மகளை அசுத்த
ஆவியிலிருந்து விடுவித்தார். ஏரோதுவிடம் இந்த நகரத்தார் வந்தனர்
(அப்போஸ்தலர் 12 :20 ). பவுல் ரோமாபுரிக்கு கைதியாக கொண்டு
செப்பப்பட்டபோது சீதோன்-லிருந்து தன் நண்பர்களை சந்தித்தான் (அப்போஸ்தலர்
27 :3 ).
தீரு
சீதோனுக்கு தெற்கே சுமார் 48 கி.மீ தூரத்தில் கடற்கரை பட்டணமாக
அமைந்திருந்தது இந்த தீரு (யோசுவா 19 :29 ). இந்த பட்டணத்தின் ஒரு பகுதி
கடலுக்குள்ளும் தீவாக கட்டப்பட்டிருந்தது. நேபுகாத் நேச்சார் என்கின்ற
பாபிலோன் அரசன் இதை பிடிக்க 13 ஆண்டுகாலம் முற்றுகையிட்டான்.
கடத்கரையிலிருந்த பகுதியை பிடித்தான். கடலுக்குள் இருந்த பகுதியை அவனால்
பிடிக்க முடியவில்லை. இதற்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் பல உண்டு
(எசேக்கியல் 26 :1 , 28 :19 , 26 :4 ஏசாயா 23 ). இந்த பட்டணத்திலிருந்த
ராஜா எருசலேம் தேவாலய பணிக்கு ஏராளமான மரங்களை கொடுத்தான்.(1 ராஜாக்கள் 5
:1 -12 ). வெண்கல வேலைக்கு இந்த பட்டணத்து நிபுணர்கள் சாலமன் அரசனுக்கு
உதவினர் (1 ராஜாக்கள் 7 :13 -14 ). இயேசு கிறிஸ்துவின் போதனையை கேட்க
இந்த வட்டார மக்கள் வந்தனர் ( லூக்கா 6 :17 மாற்கு 3 :8 ) பவுலின்
நண்பர்கள் பலர் இந்த பட்டணத்திலிருந்தனர் (அப்போஸ்தலர் 21 :2 -6 )

சாரிபாத்
இன்று இதன் பெயர் சரபெந்த். தீருவுக்கும் சீதோனுக்கும் மத்தியில் மத்திய
தரைக்கடல் கரையில் இருந்தது இந்த ஊர். பஞ்ச காலத்தில் போஷிக்கப்படும்படி
கர்த்தர் எலியாவை இந்த ஊரிலிருந்த விதவையின் வீட்டிற்கு அனுப்பினார்.
மாவும் எண்ணையும் குறையாத அற்புதம் இங்கே நடந்தது விதவையின் மகன்
இறந்துபோனபோது எலியா அவனை உயிருடன் எழுப்பியதும் இந்த ஊரில் தான். ஒபதியா
20m வசனத்தில் இந்த ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.