கீலேயாத்- மலைப்பகுதி

கீலேயாத் மலைப்பகுதியானது ஏனைய உயர்வான பகுதிகளை விட மிகவும் மாறுபட்டதாக
காணப்படுகின்றது. கீலேயாத் குன்றுகளாகவும் மலைகளாகவும் அமைந்துள்ள ஒரு
பகுதி. இதனுடைய உச்சி, அல்லது சிகரம் 4090 அடி உயரமுடையதாக இருக்கின்றது.
இங்கே மழை அதிகமாக பெய்யும். (24 -32 அங்குலம் வருடாந்தம்)
இங்கே கோடை காலத்தில் அதிகமாக பனி பெய்யும். இது மிகவும் செல்வந்தமான,
செழிப்பான ஒரு இடம்.
(எரேமியா 8: 22, 46: 11, 2 சாமுவேல் 18: 8)

கீலேயாத்- வெள்ளாடு
கீலேயாத் ஒரு அடர்ந்த மரங்களுள்ள பிரதேசம், விலங்கினங்களுக்கு இந்த இடம்
மிகவும் ஏற்றதாக இருக்கின்றது.
சாலமோன் பாடிய உன்னதப்பாட்டில் 6: 5ல் இப்படி குறிப்பிடுகின்றார்.
உன் கண்களை என்னைவிட்டுத்திருப்பு, அவைகள் என்னை வென்றது, உன் அளகபாரம்
கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டுமந்தையைப் போலிருக்கிறது.

திஸ்பியா (திஷ்பே)
வேதாகமம் எங்களுக்கு எலியாவைப்பற்றி கற்று கொடுக்கையில் அவனை
திஸ்பியனாகிய எலியா என்று அறிமுகப்படுத்துகின்றது.

எலியாவைப்பற்றி எழுதப்பட்ட இடம்
பைசான்டன் தேவாலயத்திலுள்ள இந்த எழுத்துக்கள் எலியாவை நினைவுபடுத்தும்
வகையில் அமைந்துள்ளது. இது ஒரு துறவிகள் வாழும் ஆசிரமம்.
இங்கே இரண்டு பைசான்டன் காலத்து தேவாலயங்கள் அகழ்வாராய்ச்சியின் போது
கண்டுபிடிக்கப்பட்டது.
பெரிய தேவாலயம் கி. பி 6ம் நூற்றாண்டை சார்ந்தது. சிறிய தேவாலயம் கி.பி
5-4 நூற்றாண்டை சார்ந்தது.

அஜ்லுன் கோட்டை
இந்த அஜ்லுன் கோட்டை இஸ்லாமியர்களால் கட்டப்பட்டது. இஸ்ரவேலிலோ அல்லது
யோர்தானிலோ உள்ள மற்ற கோட்டைகளை போலல்லாது இந்த கோட்டை ஒரு நாளும்
யுத்தத்திற்கு முகம் கொடுக்கவில்லை.
இது சிலுவைப்போர்-யுத்த வீரர்களுடைய கோட்டைக்கு எதிராக அமைக்கப்பட்டிருந்தது.

யாபேஸ்- கீலேயாத்
வேதாகமம் இந்த இடத்தைப்பற்றி குறிப்பிடுகையில் இங்கே பென்யமின்
கோத்திரத்திலுள்ள யாபேசின் குடிகள் இருந்தார்கள். (நியாயாதிபதிகள் 21: 8)
யாபேஸ்-கீலேயாத்தில் தான் சவுல் தன்னுடைய முதலாவது வெற்றியை கண்டான்
(நியாயாதிபதிகள் 11: 1-15)
கில்போவா மலையியே சவுலும், அவன் மூன்று குமாரர்களும் கொல்லப்பட்டதும்-
அவனது உடலை பெலிஸ்தர்கள் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள். அப்பொழுது
இந்த கீலேயாத்தின் மனிதர்கள் தான் அவனது உடலை எடுத்து, தகனம் பண்ணி,
அவனது எலும்புகளை யாப்பேசிலே அடக்கம்பண்ணி, பிற்பாடு அவனுக்காக ஏழு
நாட்கள் உபவாசம் பண்ணினார்கள். (1 சாமுவேல் 31: 8-13)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.