எகிப்த்தியர்களின் நம்பிக்கை என்னவென்றால், நீல நதியின் வெள்ளம்
அடித்துக்கொண்டு வரும் ஒரு வகை வெள்ளை புழுவின் முட்டையிலிருந்து மனிதன்
பொறித்து வந்தான் என்பதே ஆகும்.
இதை தான் மோசே எகிப்த்து சாஸ்த்திரத்தில் படித்துவந்தான். ஆனால் அவன்
பிற்க்காலத்தில் எழுதும்போது,
"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார் அவனை தேவ சாயலாகவே
சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். பின்பு தேவன்
அவர்களை நோக்கி: நீங்கள் பழுகிபெருகி, பூமியை நிரப்பி, அதை
கீழ்ப்படுத்தி, சமுத்திரத்து மச்சங்களையும் ஆகாயத்து பறவைகளையும்,
பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று
சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்". (ஆதி 1:27-28)
தேவனுடைய வெளிபாடு இல்லாமல் மோசேவுக்கு இந்த ஞானம் எப்படி வந்தது?
வேதத்திலுள்ள அனைத்து வார்த்தைகளும் தேவன் வெளிபடுத்தினதே என்பதற்க்கு
இது ஆதாரமாக உள்ளது.