முதல் மனிதன் யார்? முதல் மொழி என்ன?

கடந்த பதிவில் உலகம் எப்படி உருவாகியது? என்று பார்த்தோம்.

இப்போது முதல் மனிதன் யார்?முதல் மொழி என்ன?என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம்.

இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து
உரைப்பது பழைய எற்பாடு ஆகும்.

இது உலகத்தின் துவக்க வரலாற்றில் ஆரம்பித்து யூத இனத்தவரின் வரலாறாக செல்லும்.

வேதாகமத்தின் படி இறைவன் ஆறாவது நாளில் அவரின் சாயலிலேயே மனிதனைப்
படைக்கிறார். அவனை இறைவன் மண்ணில் இருந்துப் படைக்கிறார்.அந்த மனிதனை
எங்கே படைக்கிறார்? என்ற கேள்விக்கு "தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே
ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே (ஆதி2:8)"படைப்பதாக பரிசுத்த வேதாகமம்
கூறுகிறது.

மனிதனை ஏதேன் தோட்டத்தில் உருவாக்கினார்.அந்தத் தோட்டம் ஏன் குறிப்பாக
கிழக்கே இருந்தது என்று குறிக்கப்பட்டு உள்ளது?

வேதாகமம் தொகுக்கப்பட்ட இடம் மத்திய ஆசியா.

எனவே'கிழக்கு'என்று குறிப்பிட்டு உள்ள இடம் மத்திய ஆசியாவிற்கு கிழக்கிலே
தான் இருந்து இருக்க வேண்டும். மத்திய ஆசியாவிற்கு கிழக்கில் உள்ள
நாடுபழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம்.

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது.
ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்
கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு
என்கிறார் ஹிராடடஸ். இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம்,
திரு.எக்கேல், திரு.கிளேற்றர், திரு.கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர்
போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1.தொலைமேற்கில்-கிரேக்க நாடு
2.மேற்கில்-எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3.வடமேற்கில்-மென் ஆப்பிரிக்கா
4.தொலை கிழக்கில்-சீன நாடு
5.கிழக்கில்-பர்மா,மலேசியா,சிங்கப்பூர்
6.தெற்கில்-நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில்
முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது
பழந்தமிழ் நாடுஆகும்.

ஆகவே வேதாகமத்தில் கூறப்படும் கிழக்கில் உள்ள இடம்பழந்தமிழ் நாடாகிய
குமரிக் கண்டம் என்று நாம் கருத இடம் இருக்கின்றது.

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம்தான் வேதாகமம் சொல்லும் இடம் என்றால்
அதில் வாழ்ந்த மனிதன் தான் முதல் மனிதனாக இருக்க வேண்டும். பழந்தமிழ்
நாடாகிய குமரிக் கண்டத்தில்வாழ்ந்த மனிதர்கள் திராவிடர்களே (தமிழர்களே).

இதன் அடிப்படையில்பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டத்தில்வாழ்ந்த மக்கள்
தமிழர்களே என்றும் அதனால் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் நாம் கருத
முடிகின்றது.

வேதாகமத்தின்படி முதல் மனிதன் ஆதாம். அவனுக்கு அந்தப் பெயரினை வைத்தது யார்?

வேதாகமத்தில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. உலகில் உள்ள அனைத்து
உயிர்களுக்கும் ஏவாளுக்கும் உட்பட ஆதாம் பெயர் இடுகின்றான். ஆனால்
அவனுக்கு பெயர் யார் இட்டது என்பதனைப் பற்றிய செய்தி இல்லை.

ஆதாம் என்ற பெயரே ஆதியாகமம் 2:19ல் தான் முதல் முறையாக பயன்படுத்தப் படுகின்றது.
அதற்கு முன்னால் முதல் (ஆதி) மனிதன்'மனிதன்'என்ற சொல்லாலேயே
குறிக்கப்பட்டு வந்துள்ளான். அவனுக்கு ஆதாம் என்றப் பெயர் எப்படி வந்தது
என்றச் செய்தி வேதாகமத்தில் இல்லை.

அப்படி என்றால் தொடக்கத்தில் இருந்த மனிதனை அழைக்க வேண்டும் என்றால்
எவ்வாறு அழைப்பது?

ஆதி என்றால் தொடக்கம். ஆகவே ஆதி மனிதன் என்று அழைக்கவே வாய்ப்பு
இருக்கின்றது. 'ஆதி மனிதன்' , 'ஆதன்'என்றாகி பின்னர்
மொழிப்பெயர்ப்பில்'ஆதாம்'என்றாகி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது
அல்லவா!.

ஏவாளுக்குப் பெயர் இட்டவன் ஆதாம்."ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப்
பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்
(ஆதியாகமம்3:20 )" என்றுவேதாகமம் சொல்கிறது. இந்த வாக்கியத்தின் படி,
ஏவாள் என்றால் தாய் என்றும் அல்லது பாட்டி என்றும் பொருள் தர வேண்டும்.
ஆனால் ஆங்கிலத்தில்'இவே(EVE)'என்று சொல்லும் சொல் இந்தப் பொருளைத்
தருகின்றதா என்றால் இல்லை என்பதே பதில்.

வேதாகமம் என்பது எபிரேயத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றே ஆகும்.

எனவே இந்தச் சொல்லினை நாம் எபிரேயத்தில் காண்பதே சரியாக அமையும்.
எபிரேயத்தில் ஏவாள்'ஆயா' என்றே குறிக்கப்படுகின்றாள்.ஆயா என்றால் பாட்டி
என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவளே பாட்டி
என்பதினால் இவளை ஆயா என்றான் ஆதிமனிதன். 'ஆயா'என்றச் சொல்லே
மருவி'ஈயா'என்றும்'இவே'என்றும் மாறி நிற்கின்றது.

ஆயா என்ற சொல்லும் அதன் அர்த்தமும் தமிழ் மொழியினைச் சேர்ந்தவை. எனவே,ஆதி
மனிதனும், ஆயாவும் தமிழர்களே என்பதினில் சந்தேகம் இல்லை.

மேலும்,
தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் (ஆதி2:7)
என்று வேதாகமம் சொல்கிறது. அவன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டதினாலேயே
அவனை மனிதன் (மண்-தன்)என்றுக் கருதவும் வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் அவனிடம் மனசு இருப்பதினால் அவனை மனுசன் என்றுக் கூறப்படுகின்றது
என்றும் கருதலாம்.

இப்பொழுது ஆங்கிலத்தின் man என்ற வார்த்தையையும் woman என்ற
வார்த்தையையும் எடுத்துக் கொண்டால், மண்ணில் இருந்துப் படைக்கப் பட்டவன்
என்பதினால் அவனை மண்(Man)என்றுக் கூறுகின்றார்கள் என்றும், மண்ணினால்
செய்யப்பட்ட மனிதனின் உள்ளிருந்து உருவாக்கப்பட்டதால் பெண்ணை,
உள்-மண்(மண்ணின் உள்ளிருந்து) என்ற அர்த்தம் பொருந்த woman என்றும்
கூறுகின்றார்கள் என்றும் கருதலாம்.

மண்ணும், மனசும் தமிழ் மொழி என்று தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே,
ஆதாம்-ஆதி மனிதன், ஏவாள்–ஆயா, Man -மண், Woman -உள் மண் என்பதில் இருந்து
வேதாகமம் கூறும் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும்
நாம் ஊகிக்கலாம்.

இது சத்தியத்தை அறிந்துகொள்ள ஓர் அருமையான தேடல்.

நன்றி.

Next குமரிக்கண்டம் என்றால் என்ன?

விரைவில்....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.