கடந்த பதிவில் படைத்த இறைவனைப் படைப்புகளுக்கு ஒப்பிடலாமா?என்பது பற்றிப்
பார்த்தோம்.
இப்போது உலகம் எப்படி உருவாகியது? என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம்.
இறைவன் உலகினைப் படைத்தாரா?அல்லது உலகம் தானாக ஒரு விபத்தினால்
உருவாயிற்றா? என்பது தொடர்பில் உலகில் வாழும் இறை நம்பிக்கை உள்ள
ஆத்திகர்களுக்கும், இறை நம்பிக்கை இல்லா நாத்திகர்களுக்கும் இடையில்
முரண்பட்ட கருத்து உள்ளது.
முதல் மனிதன் யார்? முதல்மொழி என்ன? என்பதிலும் பலருக்குக் குழப்பம்.
உலகத்தினை இறைவன் படைத்தார். மனிதனையும் அவரே படைத்தார் என்பது இறை
நம்பிக்கையாளர்களின் கூற்றாக இருக்க, உலகம் ஒரு விபத்தினால் உருவானது
என்பதும் அதில் தற்செயலாய் உயிர் உருவானது என்பதும் அந்த உயிரின் பரிணாம
வளர்ச்சியினால் மனிதன் உருவானான் என்பதும் அறிவியல் நம்பிக்கையாளர்களின்
கருத்து.
உலகத்தினையும் மனிதனையும் இறைவனே படைத்தார். ஆனால் மனிதன் குரங்கில்
இருந்து பரிணாம வளர்ச்சியினால் வந்தான். பரிணாம வளர்ச்சி இறைவனின் செயல்
என்பது இறைவனையும் விட முடியாமல் அறிவியலையும் விட முடியாமல்
இருப்பவர்களின் கருத்து.
இந்தக் கருத்தினை உடையவர்களே இன்றைய காலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள்.
ஆரியர்கள் உலகத்தில் மனிதர்கள் உருவானதைப்பற்றி ஒரு கதை கூறுகின்றார்கள்.
அந்தக் கதையைப் பார்த்தோமானால் அங்கே அறிவியலையும் காணமுடியாது.
ஆன்மீகத்தையும் காண முடியாது.
அதோடு அந்தக் கதைக்கு வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. அந்தக் கதை
இவ்வாறாகப் போகிறது:-
உலகத்தினில் பிரம்மன் மனிதர்களை நான்கு விதமாய் பிரித்துப் படைத்தான்.
பிராமணர்கள் பிரமனின் தலையில் இருந்து தோன்றியவர்களாம்,
சத்திரியர்கள் பிரமனின் நெஞ்சில் இருந்து தோன்றியவர்களாம்,
வைசியர்கள் பிரமனின் தொடையில் இருந்துத் தோன்றியவர்களாம்,
சூத்திரர்கள் பிரமனின் பாதத்தில் இருந்துத் தோன்றியவர்களாம்.
மேலும் இந்தக் கதையின் படி இறைவனிடம் இருந்து பிறக்காதவர்களும் இருக்கின்றனர்.
அவர்கள் பஞ்சமர்களாம்.
பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் மக்களை கடவுள் படைக்கவில்லை என்றால்
அவர்கள் தோன்றியது எப்படி?
இந்தக் கதைவரலாற்று உண்மை அல்ல. வெறும் கதையே ஆகும்.
மேலும் அறிவியல் உலகத்தின் தோற்றம் பற்றி இவ்வாறு கூறுகின்றது.
உலகம், விண்வெளியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடி விபத்தினால் (Big Bang
Theory) தற்செயலாய் தோன்றியது.
முதலில் மிகவும் சூடாக இருந்த உலகம் சுழற்சியினால் குளிரக் குளிர உயிர்
தோன்றும் வாய்ப்புகள் பெருகின.
அப்படிப்பட்ட ஒரு காலத்தில், உயிர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு சூழ்நிலை ஏதுவாக
அமைந்ததினால் உயிர் தோன்றிற்று.
அந்த ஒரு செல் உயிரி காலத்தின் போக்கில் பல்வேறு உயிரினமாய் பரிணாம
வளர்ச்சியினை அடைந்து இறுதியில் மனிதனாகி உள்ளது.
இந்தப் பரிணாமவளர்ச்சி அனைத்து உயிரினங்களின் உடல்களைப் ஆராய்ந்துப்
பார்த்தால்புலனாகும்.
குரங்கின் உடம்பும் மனிதனின் உடம்பும் ஒன்றுப்போலவே அமைந்து இருக்கின்றன.
எனவே மனிதன் குரங்கினில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும் .இதுவே
அறிவியலின் கூற்று.
ஐரோப்பிய அறிவியல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை
அடிப்படையாகக் கொண்டு உடலினை மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒன்றாக உள்ளது.
உயிரினைப் பற்றிய ஆராய்ச்சி ஐரோப்பிய அறிவியலில் இல்லை. ஐரோப்பிய
அறிவியல் உலகின் பொருட்களை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.
உயிருள்ள பொருட்கள் - மனிதன்,
விலங்குகள்
(இங்கே அறிவியல் மனிதனை ஒரு பொருளாகப் பார்க்கும் தன்மையை கவனிக்கவும்).
உயிரற்றப் பொருட்கள் - கல், மரம்
(ஆனால் மரத்திற் உயிர் இருப்பதாக இக்காலங்களில் கூறி வருகின்றார்கள்).
அறிவியலில் வேறு விதமான பிரிவுகள் இல்லை. எனவே வெறும் உடலினை
வைத்துமட்டுமே ஆராயும் இந்த அறிவியலினை ஏற்றுக் கொள்ளலாமா? என்றக்
கேள்விவருகின்றது.
ஐரோப்பிய அறிவியலின் உயிரின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை ஏற்றுக்
கொள்ள முடியவில்லை.
உலகத்தின் தோற்றம் பற்றிவட நாட்டுக் கதையாகிய ஆரியக் கதையும் விளக்கம்
தரவில்லை. ஐரோப்பிய அறிவியலும் தெளிவானக் கருத்தினைத் தரவில்லை.
ஆனால் கிறிஸ்தவ பரிசுத்த வேதாகமமும் (பைபிள்), தமிழ் சங்க இலக்கியமும்
ஒரு ஆச்சர்யமான உண்மையை வெளிப்படுத்துகிறது.
பரிசுத்த வேதாகமத்தின்படி இறைவன்ஆறு நாட்களில் உலகினைப் படைத்து முடித்தார்.
ஆறாவது நாளில் மனிதனைப் படைத்தார்.
கிட்டத்தட்ட இதே கருத்து
'பசும் பொன் உலகமும் மண்ணும் பாழ்பட'
என்னும் பரிபாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, நிலம்
ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும்
சொல்கின்றது.
தமிழில் எழுதப்பட்ட பரிபாடல் கருத்துக்கும் விவிலியக் கதைக்கும் ஏன் இந்த
ஒற்றுமை என்று எண்ணுகின்றீர்களா?
பரிசுத்த வேதாகமம் என்பது ஒரு தொகுக்கப் பட்ட நூல் ஆகும்.
பரிசுத்த வேதாகமத்தின் மூல மொழி எபிரேயு ஆகும். அந்த மொழியில் இருந்தே
மற்ற மொழிகளுக்கும் அது மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.
உலகின் ஆதி மனிதர்கள் உலகம் முழுவதும் பரந்து சென்றபோது தன் கதைகளையும்
தன்னுடன் சுமந்துச் சென்றார்கள். அந்தக் கதையே தமிழகத்தில் பரிபாடலாவும்,
எபிரேயத்தில் ஆதியாகமமாகவும் தொகுக்கப்பட்டு உள்ளன என்பது அறிஞர்கள்
கருத்து.
உலகின் படைப்பினைப் பற்றி இரு நூல்களும் கிட்டத்தட்ட ஒன்றினைப் போலவே இருக்கிறது.
எங்கேயோ எழுதப்பட்ட தமிழ் சங்க நூலுக்கும் பரிசுத்த வோதாகமத்திற்கும்
ஒற்றுமை இருக்கின்றது.
ஆனால் அந்த செய்திகள் உண்மையினைச் சொல்லுகின்றனவா?
பரிசுத்த வேதாகமத்தில் உண்மை இருக்கின்றதா?
என்பதனைத் தொடர்ந்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள்.
இது சத்தியத்தை அறிந்துகொள்ள ஓர் அருமையான தேடல்.
நீங்கள் அறிந்திராததும்,
மறுக்க முடியாததுமான தகவல்கள் ஆதாரங்களுடன் வர இருக்கின்றன.
நன்றி.
Next
முதல் மனிதன் யார்? முதல் மொழி என்ன?
