கடந்த பதிவில் முதல்
மனிதன் யார்? முதல்
மொழி என்ன? என்று
பார்த்தோம்.
இப்போது
குமரிக்கண்டம் என்றால்
என்ன என்று பார்க்கப்
போகிறோம்.
கடலினுள் கண்டங்கள்
மூழ்கி உள்ளனவா?
மக்கள்
வாழ்ந்து இருந்த
நிலப்பரப்பினை தன்னுள்
கொண்டு சென்று
விட்டதா?
என்றக்
கேள்விக்கு ஆம்
என்கின்றனர் கிரேக்க
ஞானிகளான
பிளாடோவும் (Plato)
ஓமரும் (Homer).
இவர்கள் இப்படியாகச்
சொல்கிறார்கள்,
அட்டுலாண்டிசு
என்னும் கண்டம் கடலில்
மூழ்கியதாக
தன்னுடைய ஒடிசி
என்னும் நூலில் ஓமர்
குறிப்பிட்டு உள்ளார்.
அட்டுலாண்டிசு
என்னும் ஒரு பலம்
மிகுந்த கடற்ப்
படையினைக் கொண்டு
இருந்த கண்டம் கடலில்
அழிந்ததாக கூறி
பிளாடோ
இருக்கின்றார்.
ஆனால்
இவர்களின் கூற்றில் அந்தக்
கண்டம் எங்கே இருந்தது,
அதில் இருந்த மக்கள் யார்
என்ற செய்திகள்
தெளிவாக
இல்லை.
மேற்குலக
அறிவியலாளர்களும்,
இவர்களின் கூற்றினை
அடிப்படையாக
கொண்டே ஒரு
அழிந்துபோன
கண்டதினை உலகம்
முழுவதிலும் தேடிக்
கொண்டு வருகின்றனர்.
அவர்களின் ஒவ்வொரு
ஆராய்ச்சியும்
ஒவ்வொரு இடத்தினைக்
குறிப்பதாகவே
அமைந்து வருகின்றன.
ஒரு சமயம்
அட்டுலாண்டிசு
அமெரிக்காவிற்கும்
ஐரோபியாவிற்கும்
இடையில் உள்ளது
என்கின்றனர்.
மறு சமயம்
அது ஜப்பானுக்கும்
அமெரிக்காவிற்கும்
இடையில் இருப்பதாக
சொல்லுகின்றனர்.
மற்றொரு சமயம்
'பெர்முடா முக்கோணம்'
இருக்கும் இடத்தில் தான்
இந்தக் கண்டம் இருந்து
இருக்கலாம் என்கின்றனர்.
இத்தகைய முரண்பாடான
தகவல்கள் மூலம்
அட்டுலாண்டிசு
என்னும் கண்டம் தனியே
இருந்ததா இல்லை
வேறேனும் ஒரு
மூழ்கிய கண்டத்தினைப்
பற்றிய தகவல்கள்
அட்டுலாண்டிசு
என்னும் பெயரின் மூலம்
கதையாக வெளியாகி
உள்ளதா என்று எண்ணும்
எண்ணம் வருகின்றது.
அட்டுலாண்டிசு என்றக்
கண்டத்தினைப் போல்
விவரங்கள் தெளிவாக
இல்லாத நிலை போல்
அல்லாமல், குமரிகண்டம்
என்ற அழிந்து போன ஒரு
கண்டம் பற்றிய விவரங்கள்
தெளிவாக
கிடைகின்றன.
தமிழனின்
பிறப்பிடமும் தமிழ்
மொழியின்
பிறப்பிடமும்
குமரிக்கண்டம் தான்.
அக்கண்டம் நீரில் மூழ்கிப்
போனது. பழந்தமிழ்
நாடாகிய குமரிக்
கண்டம் அளவில் மிகப்
பெரிதாக
பரவியிருந்தது.
ஆஸ்திரேலியாவையும்
தென்னாப்பிரிக்கா
வையும் இந்தியாவையும்
இணைத்துக்
கொண்டிருந்த பெரும்
நிலப்பரப்பே குமரிக்
கண்டம் அல்லது பழந்தமிழ்
நாடு என்கிறார்
ஹிராடடஸ்.
இக்கருத்தை
பேரறிஞர்கள்
திலு.ஓல்டுகாம்,
திரு. எக்கேல்,
திரு. கிளேற்றர்,
திரு. கட்டு எலியட்,
திரு. தேவநேயப்
பாவாணர்
போன்றோர்
ஏகமனதாக ஏற்றுக்
கொண்டனர்.
மேலும்
ஹிராடடஸ் அவர்கள்
குமரிக் கண்டத்தின்
எல்லையை இவ்வாறாக
குறிப்பிட்டுள்ளார்.
பாகம் - 2 விரைவில்
————————————
Holy Friends
Groups
8012978922
————————————.
