மோவாபிய கல் சொல்லும் சரித்திரம் என்ன?

எஃப். எ. க்ளீன் 1868 ல்,
கவனத்திற்குரிய பூர்வ
கல்வெட்டை தீபனில்
(டைபான்)
கண்டுபிடித்தார்.
இது
மோவாபிய கல் என்று
அழைக்கப்பட்டது.

இதில்
எழுதப்பட்டிருந்தது
வார்ப்புரு
செய்யப்பட்டது, ஆனால்
அதை அங்கிருந்து
எடுப்பதற்குமுன்
அராபிய
நாடோடிகளால் அந்தக் கல்
உடைக்கப்பட்டது.

எனினும் அதன்
துண்டுப்பகுதிகள்
பெரும்பான்மையானவ
ை திரும்ப சேர்க்கப்பட்டு,
தற்போது அந்தக் கல்
பாரிஸிலுள்ள
லூவரில் பாதுகாப்பாக
உள்ளது. அதன் நகல்
லண்டனிலுள்ள
பிரிட்டிஷ்
அருங்காட்சியகத்திலுள்ளது.

அது முதன்முதல்,
மோவாபிலுள்ள
டைபானில்
நிறுவப்பட்டது, அரசன்
மேசா இஸ்ரவேலுக்கு
எதிராக தான் கலகம்
செய்ததை அவனே
சொல்வதுபோல
இருக்கிறது.

2 இராஜாக்கள் 1:1
ஆகாப்
மரணமடைந்தபின்,
மோவாபியர்
இஸ்ரவேலுக்கு
விரோதமாய்க்
கலகம்பண்ணிப் பிரிந்து
போனார்கள்.

2 இராஜாக்கள் 3:4-5
மோவாபின்
ராஜாவாகிய மேசா
ஆடுமாடுகள்
பெருத்தவனாயிருந்து,
இஸ்ரவேலின்
ராஜாவுக்கு இலட்சம்
ஆட்டுக்குட்டிகளையும்,
இலட்சம் குறும்பாட்டுக்
கடாக்களையும்
செலுத்திவந்தான்.

5. ஆகாப்
இறந்துபோனபின்
மோவாபின் ராஜா
இஸ்ரவேலின்
ராஜாவுக்கு
விரோதமாய்க் கலகம்
பண்ணினான்.

அதன் ஒரு பகுதி
வாசிப்பதாவது:-

"நான் மேசா,
கெமோஷின் குமாரன்.
மோவாபின் அரசன்,
டைபானியன்.
இஸ்ரவேலின் அரசனாகிய
ஓம்ரி, பல ஆண்டுகளாக
(சொல்லர்த்தமாக, நாட்கள்)
மோவாபை
தாழ்த்தினான், ஏனெனில்
கெமோஷ் [மோவாபின்
தெய்வம்] தன்னுடைய
தேசத்தின்மீது
கோபமாயிருந்தான்.

அவனுக்குப் பிறகு
அவன் குமாரன் வந்தான்,
அவனும், 'நான்
மோவாபை
தாழ்த்துவேன்' என்றான்.
என் காலத்தில் அவன்
(அவ்வாறு) சொன்னான்,
ஆனால் நான் அவன்மீதும்
அவன் வீட்டின்மீதும்
வெற்றிபெற்றேன்,
இஸ்ரவேலோ
என்றென்றுமாக
அழிந்துபோயிற்று.

கெமோஷ் என்னிடம்
சொன்னதாவது, போய்,
இஸ்ரவேலிலிருந்து
நேபோவை
எடுத்துக்கொள். ஆகவே
நான் இரவில் சென்று,
விடியற்காலையிலிர
ுந்து நடுப்பகல்வரை
அதற்கு விரோதமாக
போரிட்டு, அதை
கைப்பற்றி எல்லாரையும்
கொன்றேன்.

மேலும்
அங்கிருந்து
யாவேயின்
[பாத்திரங்களை] எடுத்து,
அவற்றை கெமோஷுக்கு
முன்பாக
இழுத்துவந்தேன்.
கடைசி வாக்கியத்தில்
இறைவனுடைய பெயர்
குறிப்பிட்டிருப்பதை
கவனியுங்கள்.

இந்த மோவாபிய கல்
பின்வரும் வேதாகம
இடங்களை
குறிப்பிடுகிறது:-

அதரோத்,
நேபோ (எண். 32:34, 38); அர்னோன்,
ஆரோவேர்,
மெதெபா,
டைபான் (யோசு. 13:9);
பாமோத்பாகால்,
பெத்பாகால்மெயோன்,
யாகசா,
கீரியாத்தாயீம்
(யோசு. 13:17-19);
பேசேர்
(யோசு. 20:8);
ஒரோனாயீம்
(ஏசா. 15:5);
பெத்திப்லாத்தாயீம்,
கீரியோத் (எரே. 48:22, 24).

இவ்வாறு இந்த இடங்கள்
சரித்திரப்பூர்வமானவை
என்பதை இந்தக் கல்
ஆதரிக்கிறது.
15:34 JESUS SON
சரித்திர ஆய்வுகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.