எகிப்த்தியர்களின் நம்பிக்கை:-
பூமி உருவானது எப்படி என்பதற்க்கு எகிப்தியர்கள் கூறும் வரலாறு என்னவென்றால்,
"ஆகாயத்தில் இறக்கைகள் கொண்ட ஒரு முட்டை பறந்துக் கொண்டிருந்தது;
காலக்கிரமத்தில் அம்முட்டையில் இருந்து பூமி பொறித்து வெளியேறியது".
இதை தான் எகிப்திய சாஸ்திரங்கள் கூறுகிறது. மோசேவும் எகிப்த்து
சாஸ்த்திரங்களை படிக்கும்போது இதை தான் படித்தார்.
ஆனால்,
எகிப்து சாஸ்த்திரத்தில் இப்படி படித்த மோசே,
ஆதியாகமம் புத்தகத்தில் பூமி உருவானது பற்றி எழுதும்போது அவர் இப்படி எழுதினார்:
"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்". (ஆதி 1:1)
படித்ததை அல்ல, தேவன் சொன்னதையே எழுதினார்.
வேதம் தேவனுடைய வார்த்தை என்பதற்க்கு இது ஒரு ஆதாரமாக உள்ளது.