இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைபடுத்தாத படிக்கு உயர்த்தபடாதபடிக்கு
கிறிஸ்துவர்களை ஒடுக்கவும் கிறிஸ்துவம் பரவாமல் இருக்கவும் இன்றைக்கு
அதாவது இந்த 2015ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தீவிரவாதிகள் ஒரு புறமும்,
மதவாதிகள் மறுபுறமும் இன்னும் ஒருபடி மேலோங்கி கிறிஸ்துவ ஊழியர்களே மற்ற
ஊழியத்திற்க்கு விரோதமாக செய்படும்படிக்கு பிசாசு தன்னுடைய விருப்பத்தை
நிறைவேற்றி வருகிறான்.
பிசாசின் விருப்பம் அழிந்து இயேசுவின் விருப்பம் நிறைவேற என்ன செய்வது?
அப்போஸ்தலர் 4:29-31
இந்த வேத பகுதி அதற்க்கு பதிலை தருகிறது. ஆதி அப்போஸ்தலர்கள் சுவிசேஷம்
சொல்ல தடை வந்த போது அவர்கள் பயன்படுத்திய யுக்தி அங்கே
கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயன்படுத்திய யுக்தி என்னவென்றால் அது "ஜெபம்" ஆகும்.
அவர்கள் கையான்ட ஜெபம் என்ற யுக்தியை அவர்கள் பயன்படுத்திய விதம்:-
* யூத தலைவர்களின் (இன்றைய அனைத்து கிறிஸ்துவ எதிரிகளின்) பயமுறுத்தல்களை
தேவரீர் * யூத தலைவர்களின் (இன்றைய அனைத்து கிறிஸ்துவ எதிரிகளின்)
பயமுறுத்தல்களை தேவரீர் கவனியும்.
* உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள்
நடக்கும்படி செய்யும்.
* பிணியாளிகள் குணமாகும்படி உம்முடைய கரத்தை நீட்டும்.
* உம்முடைய ஊழியகாரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும்
சொல்லும்படி அவர்களுக்கு அனுக்கிரகஞ் செய்தருளும்.
தங்கள் ஜெபம் என்னும் யுக்தியை அவர்கள் இந்த முறையில் பயன்படுத்தியதின்
விளைவுகளை வசனம் 31ல் விவரிக்கப்பட்டுள்ளது.
* அற்புதமாக அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது.
* கூடியிருந்தோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர்.
* தேவ வசனத்தை தைரியமாக சொன்னார்கள்.
* ஒருமனமும் ஒற்றுமையும் தழைத்தது.
* பலமாய் சாட்சி சொன்னார்கள்.
* பூரண கிருபை உண்டாயிருந்தது.
* அநேக அற்புதங்களும் அடையாளங்களும் நடந்தன (அப் 5:12).
* பிணியாளிகள் யாவரும் குணமாக்கப்பட்டனர் (அப் 5:16)
நாமும் நம்முடைய ஜெபத்தை இப்படி பயண்படுத்தினால் எதிர்ப்புகளின்
மத்தியிலும் தேவ ராஜ்ஜியத்த கட்டி எழுப்பலாம்.
குறிப்பு:-
* பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்டிருந்த விசுவாசிகள்
மீண்டும் நிரப்பப்பட்டனர்.
* ஒரு முறை ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும்
நிரப்பப்பட்ட அனுபவத்தை அடைவார்கள் (அப் 2:4; 4:31; 13:52).