1 கொரிந்தியர் 1:15-17
நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும்
ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
16. ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு.
இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ
அறியேன்.
17. ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை;
சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்
போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
அப்போஸ்தலர் 16:14-15
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை
வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்
கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள்
இருதயத்தைத் திறந்தருளினார்.
15. அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி:
நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாச முள்ளவளென்று எண்ணினால், என்
வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்
விடை :-
இந்த வசனங்களில் எந்த முரண்பாடும் இல்லை. பவுல் தெளிவாகவே 1 கொரிந்தியர்
1:15-17 வசனங்களில் சொல்கிறார்,
நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும்
ஞானஸ்நானங் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்ட ஒரு கூட்டத்தாருக்கும்,
ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு என்றும்
அந்தக் கூட்டத்தாருக்கும் சொல்கிறார்.
அதேவேளை அப்போஸ்தலர் 16:14-15 வசனங்களில் அந்த தியத்தீரா ஊராளும்
இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும்
பேருள்ள ஒரு ஸ்திரீக்கு பவுல் ஞானஸ்நானம் கொடுத்ததாக சொல்லப்படவே இல்லை.
பவுலோடு சென்றவர்கள் அவளுக்கும், அவள் வீட்டாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.
ஆகவே இங்கே எந்த முரண்பாடும் இல்லை.
வேதாகமத்தை ஒழுங்காக வாசித்து இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்.
ஆமென்.