தானியேலும் அவனுடைய நண்பர்களும் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்
பண்ணும் திராட்சை ரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்தலாகாது என
தீர்மானம் பண்ணக் காரணம் அது தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறும் செயலாக
அமையும் என்பதை அவர்கள்
அறிந்திருந்தமையால் ஆகும்.
'நியாயப்பிரமாணத்திலுள்ள உணவுச் சட்டப்படி அசுத்தமானவைகளாகக்
கருதப்பட்டவைகளும் பாபிலோனிய ராஜ உணவில் இருந்தன.
இதனால் அவற்றைப் புசித்து தன்னை அசுத்தப்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
லேவியராகமம் 11 ஆம் அதிகரத்திலும் உபாகமம் 14ம் அதிகாரத்திலும்இவ்வுணவுச்
சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் தேவனுடைய ஜனங்கள்புசிக்கக்கூடாத அசுத்தமான உணவுகள்பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளன
பாபிலோனில் பன்றி இறைச்சி மிகவும் பெறுமதியானதாயும, குதிரை இறைச்சி
வழமையான ஒரு உணவின் பகுதியாகவும் இருந்தது." இவை
நியாயப்பிரமாணத்தின்படி புசிக்ககூடாதவைகளாகக் கருதப்பட்டவைகளாகும்.
மேலும் மிருகங்களின் இரத்ததைப் புசிப்பதற்கும் தேவன் தடைவிதித்திருந்தார்.
( லேவி. 17:10-14, 19:26)
அக்கால மக்கள் இறைச்சியோடு அதன் இரத்தத்தையும் சேர்த்தே புசித்தமையால்,
பாவிலோனிய அரச உணவு தேவ கட்டளையை மீறி அவர் தடைசெய்துள்ளதை புசிப்பதாய்
அமையும் என்பதனால், அவைகளைப் புசிப்பதில்லை என தானியேலும் அவனது
நண்பர்களும் தீர்மானம் பண்ணினர்.
'புசிக்க வேண்டாம்"என தேவன் சொன்னதைப் புசித்து பாவத்தில் வீழ்ந்த
ஆதாமைப் போலல்லாது அவர்கள் தேவன் புசிக்க வேண்டாம் என சொன்னதைப்
புசிக்கதிருக்க தீர்மானித்தனர்.
'தேவனுடைய
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாதமையினாலேயே யூதர்கள் பாபிலோனுக்கு
சிறைப்பட்டுப் போயினர் என்பதை அறிந்திருந்த அவர்கள் அதன் கட்டளைகளை மீறி
நடக்க விரும்பவில்லை.
அவர்கள் ராஜ உணவை மட்டுமல்ல, ராஜா பண்ணும் திராட்சை இரசத்தினாலும்
தம்மைத் தீட்டுப் படுத்தக்கூடாதென தீர்மானித்தமையால் அவர்கள்
நியாயப்பிரமாணத்தின் உணவுச் சட்டத்தைக் கருத்திற் கொண்டே செயல்பட்டார்கள்
எனக் கூறமுடியாதென சிலர் எண்ணுகின்றனர்.
இதற்குக் காரணம் திராட்சை இரசத்தை அசுத்மானதெனக் கருதாமையேயாகும்.
எனினும் நியாயப்பிரமாணம் தடை செய்திருந்த இறைச்சி வகைகள் பாபிலோனிய ராஜ
உணவில் இருந்ததை மறுப்பதற்கில்லை.
அதே சமயம்ராஜா அருந்திய திராட்சைரசம் போதையூட்டும் நிலையிலேயே
இருந்தது.யூதர்கள் தண்ணீர் கலந்த போதையூட்டாத திராட்சைரசத்தையே
பருகுவர்.ஒன்றுக்கு மூன்று அல்லது ஒன்றுக்கு ஆறு எனும் அளவில் தண்ணீர்
கலந்த திராட்சைரசமே யூதர்களின் பானமாயிருந்ததுஆனால் பபிலோனியர்
திராட்சைரசத்திற்கு தண்ணீர் கலப்பதில்லை. தண்ணீர் கலக்காத
திராட்சைரசம்போதையூட்டும் பானமாக இருந்தது.
எனவே தேவகட்டளையை மீறி மது அருந்தும் செயலாக இருக்கும் என்பதனாலேயே
தானியேலும் அவனது நண்பர்களும் அரண்மனையில் தரப்படும் திராட்சைரசத்தைக்
குடிக்காதிருக்கத் தீர்மானித்தமைக்கான காரணமாகும்.
பாபிலோனிய ராஜ உணவும் திராட்சைசைமும் அசுத்தமானவையாக இருந்தமைக்கு
இன்னுமொரு காரணம்
'அவை இராஜாவுக்குக் கொடுக்கப்படும் முன் பாபாலோனிய தெய்வங்களுக்குப்
படைக்கப்பட்டமையாகும்.
பாபிலோனில் தெய்வத்திற்குப் படைக்கப்பட்ட உணவை புசிப்பதை யாத்திராகம்
34:5 தடை செய்திருந்தது.
விக்கிரகங்களுக்கப் படைக்கப்படடவற்றைப் புசிப்பது, விக்கிரகவழிபாட்டை
ஆதரிக்கும் ஒரு செயலாக இருந்தது.
தானியேலும் அவனது நண்பர்களும் ராஜ உணவினாலும், பானத்தினாலும் தம்மை
தீட்டுப்படுத்தக் கூடாது என தீர்மானித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
தேவன் கொடுத்திருந்த உணவுச் சட்டம், போதையூட்டும் பானம்,
விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகள் என்பவைகளே அவற்றை
அசுத்தமாக்கியிருந்தன.
லேவியராகமம்
17 அதிகாரம்
10. இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும்
எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த
அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில்
இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
11. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப்
பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி
செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி
செய்கிறது இரத்தமே.
12. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள்
நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல்
புத்திரருக்குச் சொன்னேன்.
13. இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும்
எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது
வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி,
மண்ணினால் அதை மூடக்கடவன்.
14. சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச்
சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல
மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும்
அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன தானியேலும் அவனுடைய நண்பர்களும் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம் பண்ணும் திராட்சைத்ரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்தலாகாது என்று தீர்மானம் பண்ணியமைக்கான காரணம் யாது?
0
April 04, 2016
Tags