ஒருவருக்கொருவர் அன்பே ‘தேவனுடைய முழு ஆலோசனை’இலக்கு! - சகரியா பூணன்

இன்று நம் தேசத்தின் மிகப்பெரிய தேவை யாதெனில், "தேவனுடைய முழு
ஆலோசனைகளையும்" பிரகடனம் செய்திட ஆழமான அழைப்பு பெற்ற ஜனங்களேயாகும்!

இவர்கள், இயேசு கட்டளையிட்ட எல்லா கட்டளைகளுக்குதாங்களும் கீழ்ப்படிந்து. . .
அந்த அனைத்து இயேசுவின் கட்டளைகளை
மற்றவர்களுக்கும் போதித்திட பேரார்வம் கொண்டிருத்தல் வேண்டும்!

ஆம், அப்போது மாத்திரமே கிறிஸ்துவின் சரீரம்
கட்டப்பட முடியும்!
யார் இயேசுவின் சீஷர்கள்? என்ற கேள்விக்கு விடையாக "ஒருவரை ஒருவர் அந்த
சீஷர்கள் அன்புகூருவார்கள்" என்ற அடையாளத்தையே இயேசு பதிலாகக் கூறினார்
(யோவான் 13:35).

இயேசு கூறிய இந்த அடையாளமே மிகவும் முக்கியமானது! ஆகவே,
இயேசுகிறிஸ்துவின் சீஷர்களை அவர்களுடைய பிரசங்கத் திறமையை வைத்தோ,
அவர்களின் பாடும் திறனை வைத்தோ, அல்லது அவர்கள் "அன்னியபாஷை பேசுவதை"
வைத்தோ அல்லது அவர்கள் கூட்டங்களுக்கு கிரமமாய் வேதாகமத்தைத் தூக்கி
செல்வதை வைத்தோ அல்லது கூட்டங்களில் அவர்கள் இடும் ஆரவார சத்தத்தை வைத்தோ
நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியாது!

ஆம், அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஊக்கமான அன்பை வைத்தே இயேசுவின்
சீஷர்களை நாம் இனம் காணமுடியும்!
எனவேதான், சுவிசேஷ கூட்டங்கள் மூலமாய் கிறிஸ்துவிடம் கொண்டு வரப்பட்ட
ஜனங்கள் அந்த ஸ்தலத்தில் ஓர் சபையாகக் கட்டப்படுவதற்கு நடத்தப்பட
வேண்டும்.

இவ்வாறு உண்மையுள்ள சீஷர்களாய் கூடிவரும் இவர்கள் ஒருவரை ஒருவர்
அன்புகூர்ந்து வாழ்வதற்கே தொடர்ச்சியாய் நடத்தப்பட வேண்டும்!
ஆகிலும், இன்று அனேக இடங்களில் காணப்படும் துயரம் யாதெனில், இவர்கள்
வருடங்கள்தோறும் சுவிசேஷ கூட்டங்களை நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள். . .

ஆனால், இவைகளில் உள்ள ஒரு சபையாவது, அங்குள்ளவர்கள் ஒருவருக்கொருவர்
சண்டையிடமாட்டார்கள் அல்லது ஒருவரையொருவர் புறங்கூற மாட்டார்கள் "அதற்கு
பதிலாய்" இவர்கள் எப்போதும்
ஒருவரையொருவர் அன்புகூர்ந்து வாழ்வார்கள் என கூறும்படியாய் இல்லை என்பதுதான்!

மேற்கூறியதற்கு ஒப்பான ஜெய வாழ்க்கையை புதிதாய்மனந்திரும்பிய விசுவாசிகளால்
இன்னமும் வாழ முடியவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது! ஆனால்,
நம் தேசத்திலுள்ள சபைகளில் உள்ள மூப்பர்களிடத்திலும், கிறிஸ்தவத்
தலைவர்களிடத்திலும்கூட சண்டையும், முதிர்ச்சியயில்லா ஜீவியமும்
காணப்பட்டால் அதைக் குறித்து நாம் என்னவென்று சொல்வது?

இந்த இழிவான நிலைமை, இயேசு நம்மிடம் ஒப்படைத்த ராஜரீக சுவிசேஷ
கட்டளையின்மிக முக்கியமான இரண்டாவது கட்டளையாகிய"சீஷராக்குங்கள்!. . .
பின்பு, இயேசுவின் போதனைகள் அனைத்திற்கும் பூரண கீழ்ப்படிதலுக்குள் நடத்துங்கள்!!"
(மத்தேயு 28:19,20) என்ற கட்டளை எவ்வளவாய் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது
என்பதை காட்டும் தெளிவான நிரூபணமாயிருக்கிறது!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.