ஓர் சுத்த இருதயத்தின் விளக்கத்தை ஆபிரகாமின் ஜீவியத்திலிருந்து நாம்
விளங்கிக்கொள்ள முடியும்.
ஈசாக்கு இந்த ஆபிரகாமின் சொந்த மகன், அவனது உடைமை! ஒருநாளில், இந்த
ஈசாக்கை பலியாய் கொடுத்து விடும்படி ஆபிரகாமிற்குத் தேவன் கூறினார்.
அந்தப்படியே, ஈசாக்கை பலிபீடத்தில் கிடத்தி அவனை வெட்டுவதற்கு ஆபிரகாம்
தயாராய் எத்தனித்துவிட்டான்!
ஆனால், தேவனோ, குறுக்கிட்டு, இந்த ஆபிரகாம் 'கீழ்ப்படிவதற்கு ஆர்வமாய்'
இருப்பதை நிரூபித்தபடியால், இனி ஈசாக்கின் பலி அவசியமில்லை என
கூறிவிட்டார்
(ஆதியாகமம் 22).
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, ஈசாக்கை இன்னமும் ஆபிரகாம் தன் வீட்டில்
கொண்டிருந்தாலும். . . அவனோ, ஈசாக்கைத் தன் சொந்த உடைமையாய்
கொண்டிருக்கவில்லை!
ஆம், ஈசாக்கு இப்போது தேவனுக்கே சொந்தமானவன்!!
இதுவே, நமக்கு உண்டான யாவற்றையும் வெறுத்து விடுவதின் பொருளாகும்.
ஆம், நமக்குச் சொந்தமான அனைத்தும்
பலிபீடத்தில் iக்கப்பட்டு அவைகளை தேவனுக்கே கொடுத்துவிட வேண்டும்!!
அவருக்கே கொடுத்துவிட்டவைகளில் சிலவற்றை நாம் மீண்டும் உபயோகித்திட தேவன் நம்மை
அனுமதித்திடக்கூடும். இருப்பினும், அவைகளை இனியும் "நமக்குச்
சொந்தமானதாய்" நாம் நினைத்திட முடியாதே!!
நம் சொந்த வீட்டிலேயே நாம் குடியிருந்தாலும், இனி அந்த வீடு "தேவனுடைய
வீடே" ஆகும். ஆம், அவருடைய வீட்டில் நாம் வாடகை இல்லாமல் குடியிருக்க
நம்மை அனுமதித்திருக்கிறார், அவ்வளவுதான்!!
இதுவே மெய்யான சீஷத்துவம்.
மேற்கண்டவாறு நம் உடைமைகள் யாவற்றிற்கும் நாம்
செயல்பட்டிருக்கிறோமோ? நம்முடைய உடைமைகள் என்பதில், நம்
வங்கி கணக்கு,
சொத்துக்கள்,
உத்தியோகம்,
நம் தகுதிகள்,
வரங்கள்,
தாலந்துகள்
மற்றும் மனைவி பிள்ளைகள். . .
இன்னும் இதுபோன்ற, நாம் இந்த பூமியில்
முக்கியமானதென மதிப்பிடும் அனைத்தும் அடங்கும்!
நாம் அவருடைய மெய்யான சீஷர்களாய் இருக்க விரும்பினால், இவைகள்
யாவற்றையும் "பலிபீடத்தில்" கொண்டுவந்து வைத்திட வேண்டும்! அப்போது
மாத்திரமே, நம் முழு இருதயத்தோடு தேவனை அன்புகூர்ந்திட முடியும்.
இதுவே, இயேசு
மத்தேயு 5:8-ம்வசனத்தில் கூறிய "சுத்த இருதயம்" ஆகும்!
ஓர்நல்ல மனசாட்சிமாத்திரமே கொண்டிருப்பது போதுமானதல்ல. நல்ல மனசாட்சி
கொண்டிருப்பது, நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு பாவங்களையும்
விட்டுவிடுவதேயாகும்.
ஆனால், ஓர்சுத்த இருதயம்கொண்டி
ருப்பதற்கோ நமக்குண்டான "எல்லாவற்றையும்" நாம் அர்ப்பணித்திருக்க
வேண்டும்!!