கீழ்படிதலும் அடங்கியிருத்தலும், கிறிஸ்துவின் உபதேச அலங்காரம்!! - சகரியா பூணன்

இயேசு நாசரேத்தூரில் வாழ்ந்த 30-வருட வாழ்க்கையில் இரண்டு நிகழ்ச்சிகள்
மாத்திரமே வேதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.!

1. முதல் நிகழ்ச்சி:

எபிரெயர் 4:15-ல் கூறப்பட்டுள்ளது.
ஆம், "அவர்
நம்மைப்போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவம்
செய்யாதவராயிருந்தார்!" இந்த வசனத்திலிருந்து நாம் கற்றுக் கொள்வது
யாதெனில், இயேசு நாசரேத்தூரில் வாழ்ந்த 30-வருடங்களில் ஏராளமான
சோதனைகளைச் சந்தித்திருக்கிறார் என்பதேயாகும்.

அதாவது, நாம் யாவரும் சிறுவயது முதல் வாலிபம் வரை சந்திக்கும் அத்தனை
சோதனைகளையும் இயேசு சந்தித்திருக்கிறார் என்பதை நாம் தெளிவாய்
விளங்கிக்கொள்ள முடிகிறது.

இயேசுவுக்கு குறைந்தது
4-சகோதரர்களும்,
2-சகோதரிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதை
மாற்கு 6:3-ம்வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

ஆகவே, குறைந்தது
9-பேர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள் என்பதையும். . . அதுவும்,
அந்த வீடு ஓர்
"ஏழை வீடு"
என்பதையும் சுவிசேஷ புத்தகங்கள்
எடுத்துக்காட்டுகிறது.

ஓர் ஆட்டுக் குட்டியைகூட காணிக்கையாய் செலுத்த முடியாத அளவிற்கு மரியாள்
ஏழ்மையிலிருந்தாள் என்பதை லூக்கா 2:24,
லேவி. 12:8 ஆகிய வசனங்களை ஒப்பிட்டு வாசிக்கையில் நாம் அறிந்துகொள்ள முடிகிறது!

ஆகவே,வீட்டில் கஷ்டங்களும் நெருக்கடியும்ஏற்படும் சமயங்களில் இயேசு தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொள்ளவோ அல்லது
ஓய்ந்திருப்பதற்கோ அவருக்கென ஒரு தனி படுக்கைஅறை இல்லாதவராகவேயிருந்தார்.

மேலும் அவருடைய சகோதரர்கள், அவரை விசுவாசிக்கவில்லை எனவும்யோவான் 7:5
கூறுகிறது.

'ஒருமுறைகூட கோபப்படாத' அல்லது 'ஒருமுறைகூட சுயநலமாய் செயல்படாத' இவரைக்
குறித்து அவர்கள் பகிரங்கமாகவே பொறாமை கொண்டிருந்தார்கள்!

இவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்துகொண்டு அவரைப் பலமுறைஏளனம் செய்துஅவருக்கு
எரிச்சல்மூட்ட
முயற்சித்திருப்பார்கள்.

ஒரு பெரிய குடும்பமாய் இருந்துகொண்டு ஒரு சிறிய வீட்டில் மனந்திரும்பாத
தன் வீட்டாரோடு வாழ்ந்தவர்கள் மாத்திரமே, இயேசு நாசரேத்தின் தன்
ஏழைவீட்டில் எத்தனை பிரச்சனைகளை சந்தித்திருப்பார் என்பதை எளிதில்
விளங்கிக்கொள்ள முடியும்.

அப்படியெல்லாம் இருந்தும், இயேசுவோ ஒருசமயம்கூட பாவம் செய்யவேயில்லை!
இவ்வாறு அவர் சந்தித்த சோதனைகளை இன்னும் அதிகமாய்
கூட்டுவதைப்போல், யோசேப்பு மரித்துவிட்டார்!

இயேசு ஊழியத்திற்கென வெளியேறிய வருடங்களில் யோசேப்பைக் குறித்து யாதொன்றும்
சொல்லப்படாததை வைத்து, இயேசு சுமார் 13 முதல் 20 வயது பிராயமாயிருந்த
வருடங்களில் யோசேப்பு மரித்திருக்க வேண்டும் என்றே கருதமுடிகிறது.

எனவே, வீட்டின் மூத்த மகனாகிய இயேசுவின்மீது
8-உறுப்பினர்கள் கொண்ட அவரது குடும்பத்தைத் தாங்கும் சுமை விழுந்தது!

தன் குடும்பத்தை போஷிப்பதற்காக இயேசு அரும்பாடுபட
வேண்டியிருந்தது. அந்த நெருக்கமான சூழ்நிலைகளில் இன்னமும் அதிகமான
சோதனைகளை இயேசு நிச்சயமாய்
சந்தித்திருக்கக்கூடும். . . ஆகிலும், அவரோ பாவம் செய்யவேயில்லை!!

2.இரண்டாவது நிகழ்ச்சி:

லூக்கா 2:51-விவரிக்கிறபடி, இயேசு தன்
பெற்றோர்களாகிய யோசேப்போடும் மரியாளோடும் வாழ்ந்த 30-வருடங்களும் அவர்களுக்கு
கீழ்ப்படிந்து அடங்கியிருந்தார்!என்பதேயாகும்.

இவ்வாறு அடங்கி ஜீவிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அவரைப் போலவே அந்த
பிராயத்தில் வாழ்ந்த நம் யாவருக்கும் தெரியும். நாம் பிள்ளைகளாய் இருந்த
காலத்தில், 'நாம் ஒன்றைச் செய்திட' விரும்பிய வேளைகளில் நம் பெற்றோர்களோ
நாம் விரும்பாத ஒன்றைச் செய்திடச் சொல்லிய சம்பவங்கள் ஏராளமாய் நாம்
அனுபவித்திருக்கிறோமே!?

ஆகவேதான், நாம் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு
"இயேசுவின் மாதிரியை"
உயர்த்தி காண்பித்திட முடிகிறது! பிதாக்கள் தங்கள் பிள்ளைகளை
"கர்த்தருக்கேற்ற போதனையில்" வளர்க்க வேண்டுமென
எபேசியர் 6:4-ல்கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வசனம் குறிப்பிடும் "கர்த்தருக்கேற்ற போதனை" எது தெரியுமா? ஆம்,
இயேசு நாசரேத்தூரில் வாழ்ந்த வருடங்களின் "அவருடைய சொந்த வாழ்வின்
மாதிரியையே" பிள்ளைகளுக்குப் போதனையாகத் தந்திருக்கிறார்.

இதுவே, கிறிஸ்துவின் உபதேச அலங்காரமென தீத்து தன் நிருபத்தில் கூறினார்
(தீத்து.2:9,10).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.