வேதாகம கதாபாத்திரங்கள்
ஆதாம்
முதல் மனிதராக, இவ்வுலகில்,தேவனால், மண்ணினால் படைக்கப்பட்டவர். குழந்தைப்பருவத்தை
அறியாதவர். தாய், தந்தை, நண்பர்கள், உறவினர் பாசத்தை அனுபவிக்காதவர்.
என்றாலும், தேவன் தாமே இவருடன் நேரடியாக பழகி துணையாய் இருந்தார். தேவன்
இவருக்கு ஏற்ற துணையாக ஏவாளை படைத்து
இவருக்கு மனைவியாக கொடுத்தார். "ஆதாமோ, தனக்கு யாவற்றையும் கொடுத்த தேவனை விட தன்
மனைவியின் மீது அதிக அன்பு
வைத்தார்". எப்படியெனில்,
"புசியாதே" என்ற தேவனுடைய வர்த்தைக்கு கீழ்ப்படியாமல், "புசி" என்று
பழத்தை கொடுத்த ஏவாளுக்கே செவிக்
கொடுத்தார்.
ஆதாமின் நற்ப்பண்புகள்:-
தேவனுடைய சாயலாகவும்,ரூபத்தின் படியேயும் படைக்கப்பட்டவர்.
அறிவில் சிறந்தவர். எனவே
தான் எல்லா மிருகங்களுக்கும்
பெயரிட்டார்.
தேவனோடு நெருங்கி உறவுக்கொண்டிருந்தார்.
ஏதேனிலிருந்து தரத்ரப்பட்ட
பிறகு மனம் திரும்பினார்.
(ஆதி4:1-4,25).
ஆதாமின் பெலவீனம்:-
மனைவியின் வார்த்தைக்குஇனங்கி பாவம் செய்தார்.
தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் பற்றவர்களை குற்றம் சாட்டுதல்.
வாழ்ந்த இடம்:-
"ஏதேன் தோட்டம், அதறக்கு வெளியே..."
குடும்பம்:-
மனைவி-ஏவாள்,
பிள்ளைகள்-
காயீன், ஆபேல், சேத், அநேக மகன்களும் மகள்களும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
இந்த Page ஐ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் பல வேதாகம
செய்திகள் இதிலே தொடர்ந்து வெளிவரும்