நீங்கள் தேவபக்தி கொண்ட குடும்பத்தை கட்ட விரும்புகிறவர்களாயிருந்தால்,
உங்கள் கணவன் அல்லது உங்கள் மனைவியிடம் என்ன விலைக்கிரயம்
செலுத்தியாகிலும், அதனிமித்தம் உங்களின் அனேக உரிமைகளை இழந்திட
நேர்ந்தாலுமேகூட. . . எப்படியாகிலும், ஐக்கியத்தை நாடுங்கள்.
ஐக்கியத்திற்காக நீங்கள் இழந்தது "தகும்" என்பதை பிற்காலத்தில் உங்கள்
பிள்ளைகள் கர்த்தரைப் பின்பற்றுவதை காண்கையில் அறிந்து கொள்வீர்கள்!!
இரண்டு சீஷர்களுக்கிடையே காணும் ஐக்கியத்தில் சொல்லொண்ணா வல்லமை
அடங்கியிருக்கிறது. இவ்வித இரண்டு சீஷர்கள் இந்த பூமியில் ஒருமனதாய்
கூடிவருகையில்
(மத்தேயு 18:18-20)
"வான மண்டலத்திலுள்ள சாத்தானின் சத்துவங்களைக்" கட்டுவதற்குரிய
வல்லமையைப் பெற்றிருப்பார்கள்
(எபே 6:12).
இவ்வழி சென்றால் மாத்திரமே, பொல்லாத அசுத்த ஆவிகள் நம் குடும்பத்தையோ
அல்லது நம் பிள்ளைகளையோ பாதித்துவிடாதபடி
அவைகளைத் தூர விரட்டியடித்திட முடியும்!
எபேசியர் 5:22முதல் 6:9 வசனங்கள் வரை பரிசுத்தாவியானவர், குடும்பத்தில்
காணும் கணவன்-மனைவி; பிள்ளைகள்-பெற்றோர்கள்; வேலைக்காரர்கள்-எஜமான்கள்
ஆகிய உறவுகளைக் குறித்தே பேசுகிறார்.
குடும்ப உறவுகளைக் குறித்து கூறும் இவ்வசனங்களுக்கு அடுத்து "உடனே"
காணப்படும் 10-ம் வசனத்திலிருந்து வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளோடு
உள்ள போராட்டத்தை பரிசுத்தாவியானவர் விவரித்துப் பேசுகிறார்.
இந்த உண்மை நமக்கு போதிப்பது என்ன? ஆம், நம் குடும்ப வாழ்வில் காணும்
உறவுகளைத் தாக்குவதையே சாத்தான் தன் பிரதான தாக்குதலாய் கொண்டிருக்கிறான்
என்பதையே நமக்குப் போதிக்கிறது! இங்குதான், நாம் மிக விழிப்புடன்
சாத்தானை மேற்கொண்டிட வேண்டும்!!
ஒருவருக்கொருவர் வாக்குவாதம்
செய்துகொள்ளும் புருஷர்களும் மனைவிகளும், தங்களுக்கு நடுவே 'இடைவெளி'
ஏற்படுத்துகிறபடியால். . . அந்த 'இடைவெளி' ஊடாய் சாத்தான் தங்கள்
குடும்பத்திற்குள் பிரவேசித்துத் தங்கள் பிள்ளைகள் தாக்கப்படுவதற்கு
"கதவைத்
திறந்துவிடுகிறார்கள்" என்பதை
அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
தன் பெற்றோர்களிடம் 'கரடுமுரடாய்' பேசிடும் ஒரு முரட்டாட்டம் கொண்ட பிள்ளை, ஒரு
தொற்றுநோயைப்போல் தன் கணவனிடம் 'கரடுமுரடாய்' பேசிடும் தன் தாயிடமிருந்தே
பெற்றிருப்பான்! அல்லது தன் ஆண்டவருக்கு ஏதோ சில பகுதிகளில் முரட்டாட்டம்
செய்திட்ட தன்
தகப்பனிடமிருந்து பெற்றிருப்பான்!!
இந்த பெற்றோர்களே முதலாவதாக இந்த நோயை வீட்டிற்குள்
அனுமதித்திருக்க. . .
ஏற்பட்ட தொற்றுநோய்க்காக 'பாவம்' அந்தப் பிள்ளையை கடிந்துகொள்வதில் என்ன
பிரயோஜனம்!!
ஆகவே, இந்த பெற்றோர்களே இங்கு முதலாவதாக மனந்திரும்ப வேண்டும்!!
உங்கள் வீட்டின் விஸ்தாரத்தைவிட அல்லது அங்குள்ள விலையுயர்ந்த
எலெக்ட்ரானிக் உபயோக சாதனங்களைவிட
"உங்கள் இல்லத்தின் ஐக்கியமே"
அதிகளவு முக்கியம் நிறைந்ததாகும்!
நீங்கள் ஒரு ஓலை குடிசை வீட்டில் வசித்தாலும், அங்கு நீங்கள் ஆண்டவரின் சீஷர்களாய்
இருந்துவிட்டால். . . உங்கள் குடும்பத்தில் நிச்சயமாய் தேவனுடைய மகிமை
இறங்கி தங்கிவிடும்!!