சகரியா பாகம் 1
1. முன்னுரை:-
இறைவாக்கினர் செக்கரியா, ஓர் இறைவாக்கினர் மட்டுமல்லாது, ஒருகுருவாகவும்
இருந்திருக்கிறார் (எஸ்ரா 6:1, 14; நெகேமியா 12-14). இவர்குருவாகப்
பணிபுரிந்ததால், கோவிலின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துஅதை
மக்களுக்கும் உணர்த்துகிறார். இறைவாக்கினர் ஆகாய் போல், அவரும் மக்களை,
கோவிலைக் கட்டி முடிக்குமாறு தூண்டுகிறார். இவருடைய கருத்துப்படி
மக்களின் எதிர்காலமே அவர்கள் கட்டப்போகும் கோவிலில்தான் உள்ளது. தலைமைக்
குருவுக்குத் தக்க மரியாதை கொடுக்கிறார். இவர் தலைமைக் குருவை ஓர்
அரசராகவே கருதுகிறார். வானதூதர்கள் இவரது நூலில் ஒரு முக்கிய இடத்தை
வகிக்கின்றனர். மக்களின் குறைகளை எடுத்துக் கூறி, முன்னோர்கள்,
இறைவார்த்தையைக்கேட்காததாலே தண்டிக்கப்பட்டனர் என்று மேற்கோள் கொடுத்து,
அவர்கள்நல்ல வாழ்க்கையை, இறைவன் விரும்பும் வாழ்க்கையை வாழுமாறு
போதிக்கிறார் (1:4; 7:10).
2. செக்கரியாவின் பணி நாட்கள:-
1:1 தாரியு அரசனின் இரண்டாம் ஆட்சி ஆண்டின் எட்டாம் மாதத்தில்அதாவது
கி.மு. 520- ஆம் ஆண்டு ஆக்டோபர் நவம்பர் மாதத்தில்.
7:1 அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில் கிஸ்லேவுஎன்னும் ஒன்பதாம்
மாதத்தின் நான்காம் நாளன்று ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு
அருளப்பட்டது"அதாவது கி.மு. 518-ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்தில்.
இறைவாக்கினர் செக்கரியா இரண்டு ஆண்டுகள் இறைவாக்கு உரைத்துள்ளார். கி.மு.
520 -ஆம் ஆண்டிலிருந்து கி.மு. 518- ஆம்ஆண்டுவரை இறைவாக்கினர் ஆகாய்
வாழ்ந்தபோது இவர் இறைவாக்கு உரைத்துள்ளார்.
3. புத்தக அமைப்பு:-
செக்கரியா நூலில் 14 அதிகாரங்கள் உள்ளன. இந்த 14அதிகாரங்களும், செக்கரியா
என்ற ஒரே இறைவாக்கினரால் எழுதப்பட்டனவா என்பது ஒரு கேள்விக்குறி.
முதலில், சிலர் இவையனைத்தும் ஒருவராலேயே எழுதப்பட்டது என்று கூறினர்.
ஆனால் இப்போது இந்தக் கருத்தை விவிலிய வல்லுநர்கள் ஏற்றுக் கொள்வதில்லை,
இந்தப் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, இரண்டு பேரைக்
குறிப்பிடுகின்றனர்.
1-8 அதிகாரங்கள் முதல் செக்கரியா
9-14 அதிகாரங்கள் 2- ஆம் செக்கரியா
முதல் செக்கரியா நூல், செக்கரியா இறைவாக்குரைத்து முடித்தவுடன்
எழுதப்பட்டிருக்க வேண்டும். இதில் நிகழ்ச்சிகள் தெளிவாக வரலாற்றுக்
குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இறைவாக்கினர் எசேக்கியேலின்
கருத்தும், எண்ணமும் இதில் மிளிர்வதைக் காண முடிகிறது. இறைவாக்கினர்
எசேக்கியேலும், செக்கரியாவைப் போலவே, இறைவாக்கினரும், குருவும் ஆவார்.
எனவே, செக்கரியா, எசேக்கியேல் எண்ணத்தில் மிக்க ஈடுபாடு உள்ளவராக
விளங்கியிருக்கலாம்.
.
ஆனால் இரண்டாம் செக்கரியா நூல்
(அதாவது 9-14 அதிகாரங்கள்) முதல் பகுதியிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டதாக விளங்குகிறது. இதுஅநேகமாக செக்கரியா இறைவாக்குரைத்து
முடித்து நீண்ட நாள்கள் ஆனபின் எழுதப்பட்டிருக்க வேண்டும். எந்த
நிகழ்ச்சிகளுக்கும், நாளோ,ஆண்டோ கொடுக்கப்படவில்லை. கோவில்
கட்டப்படுவதைப் பற்றி இதுகண்டு கொள்வதாகவே இல்லை. ஆனால், இங்கு பல
இறைவாக்கினர்களின் கருத்துக்கள் நேரடியாக மேற்கோள்களாகக் கொடுக்கப்பட்டு
இருக்கின்றன.
4. திருவெளிப்பாடு முறை:-
இந்தப் புத்தகமானது திருவெளிப்பாட்டு முறையில் எழுதப்பட்டிருக்கிறது.
பாபிலோனுக்குச் செல்லுமுன் இருந்த இறைவாக்கினர்கள் யாரும் இந்த முறையைக்
கையாண்டது கிடையாது. ஏன் இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால்,
இம்முறையே பாபிலோனிலிருந்து வந்தபின்தான் பிறந்திருக்கின்றது.
திருவெளிப்பாடு என்பது மறைந்திருக்கும் ஒன்றை வெளிப்படுத்துதல் அல்லது
தெளிவாக்குதல் என்று பொருள். கடவுள் ஒன்றைப் பற்றி ஒருவருக்கு
வெளிப்படுத்தி, அதை மக்களுக்குச் சொல்லச் செய்யும்முறைக்குத் தான்
திருவெளிப்பாடு என்று பெயர். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து வந்தபின்
மக்கள் மிக துன்பப்பட்டார்கள். எனவே கடவுள் திருவெளிப்பாட்டின் முறை
வழியாக இறைவாக்கினர் செக்கரியாவுக்கு வெளிப்படுத்துகிறார். அவர்கள் படும்
துன்பங்கள் நிலையானவை அல்ல. இன்னும் சிறிது காலம்தான் இத்துன்ப நிலை
நீடிக்கும். அதற்குப் பின் அவர்கள் மகிழ்ச்சியைக் காண்பார்கள் என்று
இந்நூல்கள் அறிவித்தன.
தானியேல் நூலும் திருவெளிப்பாட்டு முறையில் எழுதப்பட்டவைதான். மக்கள்,
மன்னர்களால், மற்றவர்களால் துன்புறுத்தப்படும் போது எழுதப்பட்டது
தானியேல் நூல். அங்கு தானியேலும் இந்தக் கருத்தைத்தான் தெரிவிக்கிறார்.
அதாவது, அவர்கள் சந்திக்கும் துன்பம் நிலையானதல்ல. இறுதியாக,
விவிலியத்தின் இறுதிப் புத்தகமாகிய 'திருவெளிப்பாடும்' இம்முறையில்
எழுதப்பட்டதே. இந்த புத்தகத்தில்தான், இம்முறை
தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையே
நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் இறுதியாக வெற்றி பெறுவது கடவுளே என்பதை
அடித்துக் கூறுகிறது
செக்கரியா இப்போதுதான் பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து
நாடுதிரும்பியிருக்கிறார். எனவே அவருடைய முறையில் அவ்வளவு தெளிவு
தெரியவில்லை. தானியேல் நூல் இன்னும் 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது.
எனவே அதில் இம்முறை அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது. இவ்வகையாக எழுதும்
முறை, திருவெளிப்பாட்டுப் புத்தகத்திலே முழுமை பெற்றிருக்கிறது..
செக்கரியாவின் வார்த்தைகள், புதிய ஏற்பாட்டிலே, பல இடங்களில்உபயோகிக்கப்
பட்டிருக்கின்றன.
1 : 7 - திவெ 6 : 1-8
1 : 16 - திவெ 11 : 1-2
5 : 1-3 - திவெ 11 : 5-10
9 : 9 - மத் 21 : 9
11 : 12 - மத் 26 : 15
12 : 10 - யோவா 19 : 37
13 : 7 - மத் 26 : 315.
முதல் செக்கரியா முதல் பகுதியில் நிறைய காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எல்லாக்காட்சிகளும் ஒரே மாதிரியான அமைப்பைப் பின்பற்றுகின்றன.
- முன்னுரை
- காட்சி கொடுக்கப்படுதல்
- இறைவாக்கினர் புரிந்து கொள்வதில்லை
- வானதூதர் தோன்றி அக்காட்சியை விளக்குதல்.