மனம்திரும்புதல்:-
ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் பாவங்கள் இருப்பதை உணர்ந்து, பாவங்களை
விட்டுவிடவும் பரிசுத்தமாக வாழவும் தீர்மானிப்பது மனம்திரும்புதல் ஆகும்.
ஒவ்வொரு மனிதனும் இப்படி மனம் திரும்புவது முக்கியம் என்பதால் தான் இயேசு
தனது முதல் பிரசங்கத்தின் முதல் வார்த்தையாக இதை கூறினார் (மத் 4:17)
மனம்திரும்புகிறவர் தனது பாவத்தை மண்ணிக்கும்மாறு இயேசுவிடம் வேண்டிக்
கொண்டு, இயேசுவை தனது வாழ்க்கையின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது
இரட்சிப்பாகும்.
இரட்சிப்பு:-
இரட்சிப்பு என்ற சொல் பாதுகாக்கப்படுதல், விடுவிக்கப்படுதல் என்ற பொருள்
கொண்டது. எதிரிகளிடமிருந்து, போராட்டங்களிலிருந்து, நோய்களிலிருந்து,
பாவத்திலிருந்து, நரகத்துக்கு செல்வதிலிருந்து பாதுகாப்பதையும்
விடுவிப்பதையும் குறிப்பதாக வேதத்தில் பல இடங்களில் இச்சொல்
கையாளப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டு காலத்தில் இரட்ச்சிப்பு என்பது ஒருவர் பாவமண்ணிப்பு
அடைந்து, கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவை பற்றி கொண்டு, பரிசுத்த
ஆவியானவரால் நடத்தப்படுவதற்க்கு அற்பனிப்பதை குறிக்கிறது.
இரட்சிப்பு எவ்வாறெல்லாம் அழைக்கபடுகிறது:-
* மனம்திரும்புதல் (மத் 4:17; அப் 17:30)
* மனம்திரும்புதலும் பாவமண்ணிப்பும் (லூக் 24:47)
* பாவ மண்ணிப்பாகிய மீட்பு (எபே 1:7; கொலோ 1:14)
* பாவம், அக்கிரமத்திலிருந்து இயேசுவுடன் உயிர்பிக்கபடுதல் (எபே 2:1,5)
* மறுபடியும் பிறத்தல் (யோவா 3:3,7)
* தேவனால் பிறத்தல் (யோவா 1:13)
* இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் தேவனுடைய பிள்ளையாதல் (யோவா 1:12)
* புது சிருஷ்சியாதல் (2கொரி 5:17)
* தேவனுடன் ஒப்புரவாகுதல் (எபே 2:16)
* பரிசுத்தவான்களுடனே ஒரு நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாகுதல் (எபே *
பரிசுத்தவான்களுடனே ஒரு நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாகுதல் (எபே 2:19)
* பிதாவிடம் சேரும் சிலாக்கியம் பெறுதல் (எபே 2:18)
* கிறிஸ்துவை சேறுதல், இஸ்ரவேலுடைய கானியாட்சிக்கு உள்ளாதல்,
வாக்குதத்ததின் உடன்படிக்கைக்கு உடன் பங்காளியாதல், நம்பிக்கை
உள்ளவராகுதல், தேவனுள்ளவராகுதல் (எபே 2:12-13)
* நீதிமானாக்கப்படுதல் (லூக் 18:14)
* சீஷனாதல் (மத் 28:19)
* விசுவாசியாதல் (எபே 1:13)
* நித்திய ஜீவனை உடையவனாகுதல் (யோவா 3:16; 1யோவா 5:11-12)
* ஜீவ புத்தகத்தில் பேரெழுத படுதல் (வெளி 20:15)
* பிரானனை அழிவுக்கு விலக்கி மீட்டல் (சங் 103:4)
* வரும் கோபத்திற்க்கு தப்பித்துக்கொள்ளும் வகை (மத் 3:7)
* நியாயபிரமாணத்தின் சாபத்திற்க்கு நீங்கலாக்கி மீட்க்கபடுதல் (கலா 3:13)
* புத்தி தெளிதல் (லூக் 15:17)
எவை இரட்சிப்பு அல்ல:-
* ஆலயத்துக்கு செல்லுதல் (லூக் 18:10)
* சபை அதிகாரியாக இருத்தல் (யோவா 3:1)
* சபை போதகராயிருத்தல் (யோவா 3:10)
* வீட்டாரனைவரோடும் தேவனுக்கு பயந்திருத்தல் (அப் 10:2)
* சடங்காச்சாரங்களை நிறைவேற்றுதல் (பிலி 3:5)
* பக்தி வைராக்கியம் உள்ளவனாக இருத்தல் (பிலி 3:6)
* கற்பனைகளை சிறு வயது முதல் கைக்கொள்ளுதல் (லூக் 18:20-21)
* நியாயபிரமானத்திற்கு உரிய நீதியின்படி குற்றம் சாட்டபடாமல் இருத்தல் (பிலி 3:6)
* நியாய பிரமானத்தினால் உண்டாகும் சுய நீதியை உடையவனாக இருத்தல் (பிலி 3:9)
* பரிகாரர், அநியாயகாரர், வாபச்சாரகாரராய் இல்லாமல் இருத்தல் (லூக் 18:11)
* தசமபாகம் செலுத்துதல் (லூக் 18:12)
* இயேசு தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று கூறுதல் (யோவா 3:2)
* மிகுந்த தருமங்கள் செய்தல் (அப் 10:2)
* மனம் திரும்பாமல் ஞானஸ்நானம் எடுத்தல் (மாற் 16:16)