தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?

"பாவம் செய்யாமல் இருப்பவன் நீதிமான்" என்ற பொதுவான கருத்து மனிதரிடையே
நிலவி வருகிறது. ஆனால் நண்மை தீமை என்பவற்றை அறிந்த எந்த மனிதனும் தன்
வாழ்க்கையில் நண்மை மட்டுமே செய்து வாழ்ந்ததில்லை."எல்லோரும் பாவம்
செய்து தேவ மகிமையற்றவர்கள் ஆனார்கள்" என்று வேதம் கூறுகிறது (ரோம 3:23).
பாவம் செய்யாத ஒரு மனிதனும் இல்லை என்பதால் "நீதிமான் ஒருவனும் இல்லை
எல்லோரும் வழிதப்பி ஏகமாய் கெட்டுப்போனார்கள் நண்மை செய்கிறவன் இல்லை
ஒருவனாகிலும் இல்லை" என எழுதப்பட்டுள்ளது (ரோம 3:10-12). எனவே பாவம்
செய்யாமலிருப்பதினால் நீதிமானாயிருப்பது மனிதனால் முடியாது என்பது
தெளிவாக தெரிகிறது (யோபு 25:4-6)

மனித முயற்ச்சிகள்:-

* நீதிமானாவதற்க்கு மனிதன் செய்யும் முயற்சிகள் ஏராளம். தனக்கு தெரிந்த
தேவனுடைய சட்டங்களின்படி நடந்து நீதிமானாவதற்க்கு மனிதன் முயற்ச்சி *
நீதிமானாவதற்க்கு மனிதன் செய்யும் முயற்சிகள் ஏராளம். தனக்கு தெரிந்த
தேவனுடைய சட்டங்களின்படி நடந்து நீதிமானாவதற்க்கு மனிதன் முயற்ச்சி
செய்கிறான்.

* நியாயபிரமானத்தின்படி நடந்து நீதிமானாவதற்க்கு யூதர்கள் முயற்சி
செய்கின்றனர். ஆனால் இவ்வாறு செய்வதின் மூலம் எந்த மனிதனும்
நீதிமானவதில்லை என்பதை வேதம் கூறுகிறது (ரோம 3:20; கலா 2:16-17)

* தானதர்மங்கள் செய்வதினாலும் நற்செயல்கள் செய்வதாலும் நீதிமானாகலாம்
என்று பலர் கருதி செய்கின்றனர். இவை நல்லது என்றாலும் இவற்றால் மனிதன்
நீதிமானாவதில்லை என்று கொர்னலேயுவின் நிலை தெரிவிக்கிறது (அப் 10:1-6).
தானதர்மங்கள் அல்ல பேதுரு சொன்னபடி செய்ததின் மூலம் தான் கொர்நேலியு
தேவனால் சந்திக்கப்பட்டார்.

* ஆலய ஆராதனைக்கு செல்லுதல், உபவாசித்தல், தேவனுக்கு நன்றி செலுத்துதல்,
ஜெபித்தல் போன்றவையும் மனிதனை நீதிமான்களாக்காது (லூக் 18:10-14)

* மனிதனின் எந்த செயல்களும் அவனை நீதிமானாக்காது (கலா 2:15; எபே 2:8-9)

* மனிதனின் நீதி அழுக்கான கந்தை என வேதம் கூறுகிறது (ஏசா 64:6)

நான்கு நீதிகள்:-

ரோம 10:4-6 பகுதியில் நான்கு நீதிகள் கூறப்பட்டுள்ளது.

1. நியாயபிரமானத்தின்படி செய்வதால் உண்டாகும் நியாயபிரமானத்தினால் வரும் நீதி.

2. நியாயபிரமானத்தின் படி நடப்பதோடு அநேக தானதருமங்களையும்
செய்வதாலுண்டாகும் சுயநீதி. இவை இரண்டும் மனிதனின் செயல்களால் வருபவை,
ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, மனிதனை நீதிமானாக்க கூடாதவை.

3. தேவ நீதி தேவனுடைய நீதி.

4. விசுவாசத்தினால் உண்டாகும் நீதி. இவை இரண்டும் தொடர்புடையவை
விசுவாசத்தினால் நாம் தேவனுடைய நீதியை பெற்றுக்கொள்ளலாம்.

* இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால், விசுவாசிக்கிற யாவருக்கும்
தேவ நீதி இலவசமாக கிடைக்கிறது (ரோம 3:21-24).

* ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்கு கிறவரிடத்தில் வைக்கும்
விசுவாசம் அவனுக்கு நீதியாக என்னப்படும் (ரோம 4:4-5)

* நாம் நமது செயல்களால் நீதிமானாக முயற்சிக்காமல் இலவசமாக அளிக்கப்படும்
நீதியை கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதின் மூலம் பெற்றுக்கொள்ள
வேண்டும். இயேசுவின் கீழ்படிதல் விசுவாசிக்கிறவர்களை நீதிமானாக்குகிறது
(ரோம 5:19).

யார் நீதிமான்?

நீதிமானாயிருத்தல் என்பது தேவனுக்கு முன்பாக சரியான நிலையில் இருத்தல்
என்பதை குறிக்கிறது. (Right standing before GOD is called
righteousness). பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பின் நிச்சயத்தை
பெறும்பொழுது, இயேசுவின் இரத்தத்தால் பாவம் யாவும் கழுவப்பட்டதால் நாம்
பாவமற்றவர்களாக தேவனால் கருதப்படுகிறோம். மேலும் இயேசுவை இரட்ச்சகராக
ஏற்றுக்கொள்ளும் போது அவர் மீது விசுவாசம் வைக்கும் போது தேவனுடைய நீதியை
இலவசமாக பெற்றுக்கொள்கிறோம். இவ்விதமாக நாம் நீதிமான்களாக்க படுகிறோம்
(1யோவா 1:7,9; ரோம நீதிமானாயிருத்தல் என்பது தேவனுக்கு முன்பாக சரியான
நிலையில் இருத்தல் என்பதை குறிக்கிறது. (Right standing before GOD is
called righteousness). பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பின் நிச்சயத்தை
பெறும்பொழுது, இயேசுவின் இரத்தத்தால் பாவம் யாவும் கழுவப்பட்டதால் நாம்
பாவமற்றவர்களாக தேவனால் கருதப்படுகிறோம். மேலும் இயேசுவை இரட்ச்சகராக
ஏற்றுக்கொள்ளும் போது அவர் மீது விசுவாசம் வைக்கும் போது தேவனுடைய நீதியை
இலவசமாக பெற்றுக்கொள்கிறோம். இவ்விதமாக நாம் நீதிமான்களாக்க படுகிறோம்
(1யோவா 1:7,9; ரோம 3:20-24)

விசுவாசிகள் எப்படி வாழ வேண்டும்?

* வீசுவாசத்தால் நீதிமானானவர்கள் பாவத்தில் வாழகூடாது (ரோம 6:2)

* மாம்சத்தில் அல்ல ஆவியின்படி நடக்க வேண்டும் (ரோம 8:1-7)

* மாம்சத்தின்படி அல்ல ஆவியின்படி சிந்தித்தால் நாம் ஆவியின்படி
நடக்கலாம் (ரோம 8:5)

* வேத தியானம், தேவனை குறித்த சிந்தை, ஜெபம், ஊழியம் இவை நம்மை
ஆவிக்குரியவற்றை சிந்திக்க வழிநடத்தும். இவ்விநம் ஆவியினால் மாம்சத்தை
அழிப்பது எளிது (ரோம 8:13-16)

* கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்பதால் நம் வாழ்க்கையானது,
பிறருக்கு உதவுதல் போன்ற நற்செயல்கள் நிறைந்ததாக இருத்தல் வேண்டும் (யாக்
2:24-26)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.