வேத பாடம்: 4
வேதத்தை தியானிப்பது எப்படி?
"தியானிப்பது என்றால் "மெதுவாக மென்று சுவைத்து சீரணிப்பது" என்பதாகும்".
1. ஒவ்வொருவரும் சொந்தமாக ஒரு வேதாகமம் வைத்துக்கொள்வது நல்லது.
2. குறிப்புகள் எழுத ஒரு நோட்டு புத்தகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. வாசிக்கும் முறையை தெரிந்து கொண்டு அதை அனுதினமும் கடைபிடிக்க
வேண்டும். (அதிகாரங்கள் முறை, புத்தகங்கள் முறை, பத்திகள் முறை,
கருத்துகள் முறை)
4. தியானத்தை ஆரம்பிக்கும் முன் நம்மை தாழ்த்தி, ஜெபித்து, ஆவியானவர்
ஒத்தாசை செய்வார் என்று விசுவாசிக்4. தியானத்தை ஆரம்பிக்கும் முன் நம்மை
தாழ்த்தி, ஜெபித்து, ஆவியானவர் ஒத்தாசை செய்வார் என்று விசுவாசிக்க
வேண்டும்.
5. மெதுவாக ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியும்படி படிக்கவேண்டும்.
6. வாசித்தபின் மைய கருத்தை கண்டுபிடிப்பதற்க்காக மீண்டும் மீண்டும்
வாசித்து அதை குறித்து வைக்க வேண்டும். முக்கியமான சொற்க்களை குறித்து
வைத்து யோசித்து பார்க்க வேண்டும்.
7. வாசித்த பகுதிக்கு ஒரு தலைப்பும் சில உட்தலைப்பும் கொடுக்க வேண்டும்.
இவற்றை வேதத்தில் குறிக்கலாம். நோட்டிலும் குறிக்கலாம். (எ.கா) இந்த
வேதாகமத்திலே சங்கீத புத்தகத்தில் ஒவ்வொரு சங்கீதத்திற்க்கும் தலைப்பும்
உட்தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளதை பாருங்கள்.
8. கேள்விகள் கேட்டு பதில்களை காணவேண்டும்.
(எ.கா)
a. யார் எந்த சூழ்நிலையில் கூறுகிறார்கள்?
b. யாருக்கு கூறப்படுகிறது? அது எனக்கு எவ்விதத்தில் பொருந்துகிறது
என்று நினைத்து பார்க்க வேண்டும்.
c. எதற்காக இது கூறப்பட்டிருக்கிறது? (விசுவாசத்தை வளர்க்க, பாவத்தை
உணர்த்த, அறிவுறுத்த....)
d. என்ன விதத்தில் (நேரிடையாக, உவமையாக....) எப்படி (சாந்தமாக,
எச்சரிப்புடன்....) கூறப்படுகிறது.
e. பிதா, குமாரன, ஆவியானவர் குறித்து இந்த பகுதில் என்ன
கூறப்பட்டுள்ளது? இந்த பகுதியில் உள்ள தேவனுடைய பெயர்கள் என்ன? அவற்றின்
பொருள் என்ன?
f. இந்த பகுதி ஏதேனும் பாவத்தை கூறுகிறதா? (அந்த பாவம் என்னிலிருந்தால்
அறிக்கையிட்டு விட்டுவிட வேண்டும்)
g. இந்த பகுதியில் ஏதேனும் கட்டளை உண்டா? (இருந்தால் அதற்க்கு
கீழ்ப்படிய வேண்டும்)
h. ஏதேனும் வாக்கு தத்தங்கள், தீர்க்கதரிசனங்கள் உள்ளதா? (இருந்தால்
விசுவாசத்தோடு சுதந்தரித்து கொண்டு அவற்றிற்க்காக தேவனுக்கு நன்றி சொல்ல
வேண்டும்)
9.இப்பகுதிக்கு ஒத்த வேறு வேதபகுதி ஞாபம் வருகிறதா? அப்படியானால் அதையும்
தியானிக்க வேண்டும். (எ.கா) 1.ஏசா1:18-20; ஒசி4:1-2, 2.வெளி3:20;
உன்5:2-8.
10. ஒருமை பன்மைகளை கவணிக்கலாம் கலா3:16 ஐ காண்க. "ஆகையால்", "மேலும்",
"என்னத்தினாலெனில்" போன்ற சொற்களை கவணித்து இவற்றால் பினைக்கப்படுகின்ற
கருத்துகளை ஆராயலாம்.
11. எதிர்மறைகளை தியானிக்கலாம் எபேசி 4:8-9; சங் 1
12. காட்சிகளை கற்பனை கண்களில் நிறுத்தி தியானிக்க வேண்டும். (ஏசா 53:5 ஐ
தியானிக்கையில் ஒவ்வொரு காயங்களையும் மன கண்களில் காணவேண்டும். 5 அப்பம்
2 மீன் புசிக்க அமர்ந்த 5000 ஆண்கள் மற்றவர்கள், குஷ்டரோகியை தொடுதல்,
கடலின் மீது நடத்தல், கப்பல் சேதம் )
13. முக்கிய வசனத்தை மனப்பாடம் செய்யலாம்
14. வாழ்கை வரலாறு, குணநலன்கள் (நல்ல, கெட்ட செயல்கள்) தியானிக்கலாம்
15. மேலே கூறிய எல்லாம் பொருத்தம் இல்லாமல் போகலாம். முடிந்தவரை
பொருத்தமானதை பயன்படுத்த வேண்டும்.
16. தியானிக்கும் போது மனதை அலையவிட கூடாது. ஒரே மனதாக கவனத்தோடு
படித்தால் தேவ பிரசன்னம் நிரம்பும். தேவன் வசனத்தின் மூலம் பேசுவார்.
18. எல்லா வற்றிற்க்கும் ஆவிக்குரிய பொருள் என்று சொந்த கருத்துகளை
எடுத்துக்கொள்ள கூடாது. ஆனாலும் ஆவிக்குரிய பொருள் உள்ள இடங்களை
விட்டுவிட கூடாது. நிதானம் தேவை.
19. தியானத்தில் கண்டதை நோட்டில் குறித்த பின் சில நேரத்தை ஜெபத்திலும்
துதியிலும் தேவனோடு செலவிடு.
20. கற்று கொண்ட அந்த பகுதியை அன்று முழுவதும் மீண்டும் மீண்டும்
நினைத்து பார்க்க வேண்டும். இரவு தூங்கும் நேரத்தில் அதை நினைத்து
பார்க்கலாம்.