இயேசு கிறிஸ்து:
தேவனை மகிமைப்படுத்தினார் - யோவா 17:4
அந்தி கிறிஸ்து:
தேவனை தூஷிப்பான் - வெளி 13:6
இயேசு கிறிஸ்து:
இரட்சிக்க வந்தார் -
லூக் 19:10; 1 தீமோ 1:15
அந்தி கிறிஸ்து:
கொல்லவும் அழிக்கவும் வருகிறான் - யோவா 10:10; வெளி 11:7
இயேசு கிறிஸ்து:
தேவாலயத்தை சுத்திகரித்தார் - யோவா 2:13-16
அந்தி கிறிஸ்து:
தேவாலயத்தை அசுத்தம் ஆக்குவான்
(தீட்டுப்படுத்துவான்) -
2 தெச 2:4
இயேசு கிறிஸ்து:
பிதாவின் சித்தம் செய்தார் - யோவா - 6:38; 8:29
அந்தி கிறிஸ்து:
சுய சித்தம் செய்வான் - தானி 11:36; 7:25; 8:12
இயேசு கிறிஸ்து:
தன்னைத்தான் தாழ்த்தினார் - பிலி 2:5
அந்தி கிறிஸ்து:
தன்னைத்தான் உயர்த்துவான் - 2 தெச 2:4
இயேசு கிறிஸ்து:
சத்தியம் உள்ளவர் -
யோவா 14:6; 1 யோவா 5:20
அந்தி கிறிஸ்து:
பொய்யன் -
1 யோவா 2:4; 5:19;
யோவா 8:44
இயேசு கிறிஸ்து:
தேவ பக்தியின் இரகசியம் -
1 தீமோ 3:16
அந்தி கிறிஸ்து:
அக்கிரமத்தின் இரகசியம் -
2 தெச 2:7
இயேசு கிறிஸ்து:
பரிசத்த ஆவியினால் அபிஷேகம்
பண்ணப்பட்டிருந்தார் -
அப் 10:38; லூக் 4:18;
யோவா 3:34
அந்தி கிறிஸ்து:
அசுத்த ஆவியினால் அபிஷேகம்
பண்ணப்பட்டிருப்பான் - வெளி 13:4,5,13; 2 தெச 2:9,10
இயேசு கிறிஸ்து:
சமாதான பிரபு -
ஏசா 9:6; யோவா 14:27
அந்தி கிறிஸ்து:
மூர்க்கம் உள்ளவன் -
தானி 8:23; 9:26
இயேசு கிறிஸ்து:
தன்னைத்தான் தாழ்தின இவரைத் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார்.
மேலான நாமத்தை உடையவர் ஆனார் - பிலி 2:9-11; வெளி 5;12
அந்தி கிறிஸ்து:
தன்னைத்தான் உயர்த்தின இவனை எல்லாவற்றிற்கும் கீழாக தேவன் தாழ்த்துவார் -
வெளி 19:19,20
இயேசு கிறிஸ்து:
பரிசத்த ஆவியின் வல்லமையினால் மாபெரும் அற்புத அடையாளங்களை செய்தார் -
மத் 12:28; அப் 10:38
அந்தி கிறிஸ்து:
பிசாசின் ஆவியினால் பொய்யான அற்புதங்களைச் செய்து ஜனங்களை வஞ்சித்து
மோசம் போக்குவான் -
2 தெச 2:9; மத் 24:24
இயேசு கிறிஸ்து:
பரலோகத்தில்
எடுத்துக்கொள்ளப்பட்டு, மகிமையின் தேவனுடைய வலது பாரிசத்தில்
என்றென்றைக்கும் ஜீவிக்கிறார் -
அப் 1:9; ரோம 1:5; 8:34;
எபி 13:8
அந்தி கிறிஸ்து:
தூதனால் பிடிக்கப்பட்டு, கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே
என்றென்றைக்கும் வாதிக்கப்பட உயிரோடே தள்ளப்படுவான் -
வெளி 19:20
இயேசு கிறிஸ்து:
மெய்யான திராட்சச் செடி - யோவா 15:1
அந்தி கிறிஸ்து:
காட்டு திராட்சச் செடி -
ஏசா 5:2,3,4
இயேசு கிறிஸ்து:
தேவனுடைய குமாரன் - யோவா 3:16; லூக் 1:35
அந்தி கிறிஸ்து:
கேட்டின் மகன் -
2 தெச 2:3
இயேசு கிறிஸ்து:
பாவமற்ற பரிசத்தர் -
எபி 7:26
அந்தி கிறிஸ்து:
இவன் பெயரே பாவ மனுஷன் - 2 தெச 2:13
இயேசு கிறிஸ்து:
வானத்தில் இருந்து வந்தவர் - யோவா 6:38,51
அந்தி கிறிஸ்து:
பாதாளத்தில் இருந்து ஏறி வருபவன் -
வெளி 11:7; 13:1
இயேசு கிறிஸ்து:
பிதாவின் நாமத்தில் வந்தார் - யோவா 5:43
அந்தி கிறிஸ்து:
தன் சுய நாமத்தில் வருவான் - யோவா 5:43
இயேசு கிறிஸ்து:
தேவாலயத்தை சுத்திகரித்தார் - யோவா 2:13-16
அந்தி கிறிஸ்து:
தேவாலயத்தை அசுத்தம் ஆக்குவான்
(தீட்டுப்படுத்துவான்) -
2 தெச 2:4
இயேசு கிறிஸ்து:
நமக்காக தரித்திர்ரானார் -
2 கொரி 8:9
அந்தி கிறிஸ்து:
உலக ஐசுவரியம் இவன் ஆதீனத்தில் இருக்கும் -
வெளி 13:17,18
இயேசு கிறிஸ்து:
ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தார் -
யோவா 10:11
அந்தி கிறிஸ்து:
ஆடுகளின் மாம்சத்தைத் தின்பான் -
சக 11:16
இயேசு கிறிஸ்து:
ஸ்திரீயின் வித்து -
ஆதி 3:15; மத் 1:18,20; 23:5
அந்தி கிறிஸ்து:
சர்ப்பத்தின் வித்து -
ஆதி 3:15
இயேசு கிறிஸ்து:
மனுஷரால்
அசட்டைப்பண்ணப்பட்டு புறக்கணிக்கப்பட்டார் -
ஏசா 53:1; யோவா 1:11
அந்தி கிறிஸ்து:
மனுஷரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டு மனுஷருடைய புகழ்ச்சிக்கு உரியவனாய் இருப்பான் - வெளி
13:3,4,8; 17:13;
தானி 8:11