ஜெரூசலெம்
இசுரேல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கி.மு. 4ஆம்
நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்நகரம் உலகில் மிகப்பழைய நகரங்களில்
ஒன்றாகும். யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் சமயங்களில் ஒரு முக்கியமான
நகரம் ஆகும். இந்நகரில் சில முக்கியமான சமயம் தொடர்பான கட்டிடங்கள் அல்
அக்சா மசூதி, மேற்கு சுவர், புனித செபல்க்கர் தேவலயம் ஆகும்.
எருசலேம்
தாவீது கி.மு 1004 ஆம் ஆண்டளவில் எபூசியரிடம் இருந்து எருசலேமை
கைப்பற்றி அதை இஸ்ரவேலின் தலைநகரம் ஆக்கினான். சீயோன், ஓபேல், அக்கிரா,
பெசெத் ஆகிய நான்கு மலைகளின் மத்தியில் எருசலேம் நகரம் கட்டப்பட்டு
இருக்கிறது.
கி.மு 970 ஆம் ஆண்டளவில் சாலமோன் இராஜாவினால் எருசலேம் தேவாலயம்
கட்டப்பட்டது. நேபுகாத்நேச்சரால் தேவாலயம் அழிக்கப்பட்டது. பின்பு
நெகேமியா, செருபாபேல், எஸ்றாவின் காலங்களில் தேவாலயம்
பழுதுபார்க்கப்பட்டு அலங்கங்கள் கட்டப்பட்டது. அதன் பின்பு
கிரேக்கர்களினால் எருசலேம் அழிக்கப்பட்டது. அதன் பின்பு ரோமர்கள்
எருசலேமை கைப்பற்றினார்கள். ஏரோது எருசலேம் தேவாலயத்தை கட்டினான்.
அதன்பின்பு ரோமர்களினாலேயே கி.பி 70 ஆண்டில் தேவாலயம் அழிக்கப்பட்டது.
அதன்பின்பு கி.பி 637 அளவில் ளுயசயஉநநௌ இதை கைப்பற்றி, அதிலே ஒரு
பள்ளிவாசலை கடடினான்.