சக்தி வேண்டும் என்கிறாய் நீ; உனக்கு
பக்தி வேண்டும் என்கிறார் அவர்
பணம் வேண்டும் என்கிறாய் நீ; உனக்கு
பரிசுத்தம் வேண்டும் என்கிறார் அவர்
பூலோக இன்பம் வேண்டும் என்கிறாய் நீ; உனக்கு
பரலோக இன்பம் வேண்டும் என்கிறார் அவர்
சேவை தேவை என்கிறாய் நீ; உனக்கு
தியாகம் தேவை என்கிறார் அவர்
பெருமை வேண்டும் என்கிறாய் நீ; உனக்கு
தாழ்மை வேண்டும் என்கிறார் அவர்
பெலன் வேண்டும் என்கிறாய் நீ; உனக்கு
என் கிருபை போதும் என்கிறார் அவர்
அரிய பெரிய காரியங்களை சாதிப்பேன் என்கிறாய் நீ; உன்
அன்றாட கடமைகளை அவர் சித்தப்படி செய்து முடி என்கிறார் அவர்
அவரிடம் வருவாயா? அவர் சித்தம் செய்வாயா?
