வேதமெனும் விளக்கதனை
விலக்காமல் நான் பிடித்து
ஜோதிமிகும் உம் வழியில்
சுத்தமுடன் வாழ்ந்திடவே
உமது வழி காணாமல்
உழல்கின்ற மக்களுக்கும்
உமது வழி காட்டுகிற
உகந்த பணி செய்திடவே
சாட்சியென நான் வாழச்
சார்ந்திருக்க வாருமையா
மாட்சியுள்ள ஆண்டவரே
மனவீட்டில் வாழுமையா
