நாம் வளர்ந்து திருமணமான பின்பும்கூட, தொடர்ந்து நம் வயது சென்ற
பெற்றோர்களை கனம்பண்ணிடவே வேண்டும்.
ஆதியாகமம் 9:21-27
வசனங்களில், ஒருசமயம் நோவாவின் குமாரர்களில் ஒருவனான காம், தன் தகப்பன்
குடித்து கூடாரத்தில் நிர்வணமாய்
படுத்திருப்பதைக் கண்டான். ஜலப்பிரளயம் ஏற்படுவதற்கு முன்பாகவே காம்
திருமணம் செய்திருந்தபடியால்,
காம்வளர்ச்சி பெற்ற ஓர் புருஷனாய் இருந்தான்.
இவன் தான் கண்ட காட்சியை தன் சகோதரர்களிடத்தில் கூறி தன் தகப்பனுக்கு
அபகீர்த்தி கொண்டுவந்தான்!
காம் சொன்னது பொய் அல்ல, மெய்தான். . . ஆனால், அவனோ தன் தகப்பனை
கனவீனப்படுத்தி விட்டான்!!
ஒருவன் உண்மையை பேசினாலும்,
புறங்கூறுகிறவர்களைத் தேவன் சபிக்கிறார்!!
புறங்கூறுகிறவன் யாராயிருந்தாலும், அவன் தேவனுக்குப் பிரியமாய்
ஒருக்காலும் இருந்திட முடியாது.
ஆகிலும், நோவாவின் அடுத்த இரண்டு குமாரர்களும் தங்கள் தகப்பனின்
நிர்வாணத்தைப் பார்க்கமால் ஒரு வஸ்திரத்தை தங்கள் தோளில் வைத்து,
பின்னிட்டு வந்து நிர்வாணத்தை மூடி, தங்கள் வயது சென்ற தகப்பனுக்கு கனம்
செய்தார்கள்!
இதனிமித்தமாய்,
அவர்கள் இருவரும் அவர்கள் குடும்பமும்
ஆசீர்வதிக்கப்பட்டார்கள்!
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய போதகம் யாதெனில்,
"தங்கள் பெற்றோர்களைக் கனம்பண்ணுகிறவர்களைத் தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்!
தங்கள் பெற்றோர்களை அசட்டை செய்பவர்களைத் தேவன் சபிக்கிறார்!!" என்பதேயாகும்.
வேத புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இந்த "மாதிரி" வைக்கப்பட்டு, சிறியோர்
பெரியோராகிய நம் யாவருக்கும் ஓர் எச்சரிக்கையாய் இருக்கிறது!
"உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை செய்யாதே" என்றே
நீதிமொழிகள் 23:22கூறுகிறது.
ஆம், உங்கள்
பெற்றோர்களிடம் நீங்கள் தவறுகளைக்
(நிர்வாணங்களைக்) காணும்போது, அவர்களை அசட்டை செய்யாதிருங்கள்!
அவர்களின் பெலவீனத்தை மூடிவிட்டு, அந்த பெலவீனத்தைக் குறித்து யாரிடமும்
பேசாதிருங்கள்!
உண்மையில், இத்தகைய செயலை நம்
பெற்றோர்களுக்கு மாத்திரமல்ல, எல்லா ஜனங்களுக்குமே அப்படியே செய்திட வேண்டும்.
ஏனெனில், உண்மையான அன்பு எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்த அன்பு "திரளான
பாவங்களையும் மூடிவிடும்" என்றே வேதம் சுட்டிக் காட்டுகிறது.
பெற்றோர்களின் பாவங்களைக் கூறி, கனவீனம் செய்திடக் கூடாது! - சகரியா பூணன்
0
April 03, 2016
Tags