யூதர்கள் எபிரேய விவிலியத்தை பிரிக்கும் முறை

யூதர்கள் பழைய ஏற்பாட்டின் (எபிரேய விவிலியம்) 39
நூல்களையும்TaNaKh(தானாக்) என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு
பிரிப்பர்:

1)தோரா(Torah) (Ta)

2)நெவீம்(Nevi'm) (Na)

3)கெதுவிம்(Ketuvim) (Kh)

தோரா:-

தோரா என்னும் எபிரேயச் சொல்படிப்பினை,போதனை,திருச்சட்டம்,நெறிமுறை
என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை
மோசே எழுதிய நூல்கள் எனவும் ஐந்நூல்கள்(Pentateuch) எனவும்
அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக
உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ
வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள்
வழங்கப்படுகின்றன:

1. தொடக்க நூல்(ஆங்.: Genesis; எபிரேயம்: Bereshith)

2. விடுதலைப் பயணம்(ஆங்.: Exodus; எபிரேயம்: Shemot)

3. லேவியர்(ஆங்.: Leviticus; எபிரேயம்: Vayikra)

4. எண்ணிக்கை(ஆங்.: Numbers; எபிரேயம்: Bamidbar)

5. இணைச் சட்டம்(ஆங்.: Deuteronomy; எபிரேயம்: Devarim)

நெவீம்:-

இச்சொல் நவி என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து
பிறந்தது (נְבִיא- navi). அதன் பொருள் இறைவாக்கினர் (தீர்க்கதரிசி)
என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது
இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 31
உள்ளன. அவை முன்னைய இறைவாக்கினர் (6 நூல்கள்), பின்னைய இறைவாக்கினர் (15
நூல்கள்) கொண்டன.

முன்னைய இறைவாக்கினர்:-

1) யோசுவா(ஆங்.: Joshua; எபிரேயம்: Sefer Y'hoshua)

2) நீதித் தலைவர்கள்(ஆங்.: Judges; எபிரேயம்: Shoftim)

3) 1 சாமுவேல்(1 Samuel)

4) 2 சாமுவேல்(2 Samuel)

5) 1 அரசர்கள்(1 Kings)

6) 2 அரசர்கள்(2 Kings)

பின்னைய இறைவாக்கினர்:-

இப்பிரிவில் 3 பெரிய இறைவாக்கினர் நூல்களும் 12 சிறிய இறைவாக்கினர்
நூல்களும் முறையே அடங்கும். அவை:

1) எசாயா(Isaiah)

2) எரேமியா(Jeremiah)

3) எசேக்கியேல்(Ezekiel)

4) ஓசேயா(Hosea)

5) யோவேல்(Joel)

6) ஆமோஸ்(Amos)

7) ஒபதியா(Obadiah)

8) யோனா(Jonah)

9) மீக்கா(Micah)

10) நாகூம்(Nahum)

11) அபக்கூக்கு(Habakkuk)

12) செப்பனியா(Zephaniah)

13) ஆகாய்(Haggai)

14) செக்கரியா(Zechariah)

15) மலாக்கி(Malachi)

கெதுவிம்:-

கெதுவிம் என்னும் எபிரேயச் சொல் எழுத்துப் படையல் நூல் தொகுப்பு என்னும்
பொருள் தரும் (כְּתוּבִים, "Writings"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன.

.1) திருப்பாடல்கள்(Psalms)

2) நீதிமொழிகள்(Proverbs)

3) யோபு(Job)

4) இனிமைமிகு பாடல்(Song of Songs)

5) ரூத்து(Ruth)

6) புலம்பல்(Lamentations)

7) சபை உரையாளர்(Ecclesiastes)

8) எஸ்தர்(Esther)

9) தானியேல்(Daniel)

10) எஸ்ரா(Ezra)

11) நெகேமியா(Nehemiah)

12அ) 1 குறிப்பேடு(1 Chronicles)

13ஆ) 2 குறிப்பேடு(2 Chronicles)

இவ்வாறு, பழைய ஏற்பாட்டில் (எபிரேய விவிலியம்) 39 நூல்கள் உள்ளதாக யூதர்
கணிக்கின்றனர். இவை பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் என்று
அழைக்கப்படுகின்றன. இந்நூல்களில் சிலவற்றை இணைத்து எண்ணி, அவை 24 என்று
கொள்வதும் உண்டு.

இந்நூல்கள் இயேசுவின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று
ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் எபிரேய வடிவம் கி.மு.12-ஆம்
நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே
எழுதப்பட்டிருக்கக் கூடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.