'சர்தை' என்றால் மீதியாயிருப்பது, தப்பிக்கொள்வது, சந்தோஷத்தின் அதிபதி
என்று பொருள்.
சர்தைபட்டணம்:
இது தியத்தீராவுக்கு தென்கிழக்கில் சுமார்30 மைல் தூரத்திலுள்ளது.
இப்பட்டணத்தின் வழியாக 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் சென்றன. இது நல்ல
வியாபார ஸ்தலமாயிருந்தது.
முற்காலத்தில் லிதியா ராஜ்யத்திற்கு இது தலைநகராக இருந்தது. சுமார்
கி.மு.20 ல் பயங்கர நில நடுக்கத்தால் இப்பட்டணம் அழிந்தது. அந்நாட்களில்
அரசாண்ட திபேரியுராயன் 5 வருட வரியை வசூலித்து இப்பட்டணத்தை, அப்பணத்தைக்
கொண்டு கட்டினான்.
இப்போது சர்தை முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.
ஒருசில குடிசைகளே இவ்விடத்திலிருக்கிறது.
இப்போது இவ்விடத்தில் ஒரு கிறிஸ்தவர்கூட இல்லை.
சர்தை சபைக்கான செய்தி:-
ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் உடையவர்- கிறிஸ்து சபையின்
பாதுகாவலர் என்பதைக் குறிக்கிறது.
சபை கிறிஸ்துவின் பரிபூரண ஆவியினால் நிரப்பப்பட்டு அவருடைய கரத்தால்
நடத்தப்பட வேண்டிய ஒன்று என்று வெளிப்படுத்துகிறார்.
நற்குணம்:
அதிகமாய் ஒன்றும் சொல்லப்படவில்லை. "தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத
சிலர் சர்தை சபையிலும் உண்டு.
அநேகர் விழுந்து போன சமயத்திலும் சிலர் தங்களை பரிசுத்தமாகக் காத்துக்கொண்டனர்.
தீய குணம்:
ஆவிக்குரிய வாழ்க்கையின் செத்த நிலை- பெரிய சபை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட
விசுவாசிகள் என்றும் பெயர்பெற்றும், ஆவிக்குரிய நிலையில் உயிரற்றுக்
காணப்பட்டனர்.
திருப்தி அற்ற நிலைகள் காணப்பட்டன. தானியேல்: 5:25 - 28 ல் சொல்லப்பட்டதுபோல.
எச்சரிப்பு:
"நீ விழித்துக் கொண்டு சாகிறதற்கு ஏதுவானவைகளை ஸ்திரப்படுத்து".
பிறரை ஸ்திரப்படுத்துமுன் தான் உயிர்மீட்சி அடைய வேண்டியது
அவசியமாயிற்று. தேவனிடத்தில் பெற்ற கிரியைகளை பயன்படுத்தி
மனந்திரும்பாவிட்டால்சீக்கிரத்தில் அழிவுவரும்.
இப்பட்டணம் அழிந்ததற்கு இதனுடைய அஜாக்கிரதையே காரணம்.
சர்தையின் அரசனாய் இருந்த கிரீசஸ், பெர்சிய அரசனான கோரேசுடன் போரிட்டான்.
சர்தை பட்டணம் செங்குத்தான மலையின் மேல் கட்டப்பட்டிருந்தது. எதிரிகள்
அதை எளிதில் அடையக் கூடாத நிலையிலிருந்தது.
கோரேஸ் 14 நாட்கள் முற்றிக்கை போட்டும் அதைப் பிடிக்க முடியவில்லை.
கோட்டைக்குள் செல்லும் வழியை கண்டுபிடிப்பவனுக்கு பரிசளிக்கப்படும் என்று
அறிவித்தான்.
சர்தையின் வீரன் ஒருவன் தவறிவிழுந்த தன்தலைச் சீராவை எடுக்க பாறைக்கு
இடையில் இறங்குவதை பெர்சிய வீரன் ஒருவன் கண்டான்.
பின்பு எதிரிகள் அப்பாறை வெடிப்பின் வழியாக கோட்டைக்குள் சென்று
பிடித்தனர். கி.மு. 549 ல் இது நடந்தது. கி.மு.218 லும் இதே போன்று
சர்தையின் விழிப்பற்ற தன்மையால் பெரிய அந்தியோக்கஸ் கைப்பற்றினான்.
ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:
வெண்வஸ்திரம்- வெளிப்படுத்தல்: 19:8 - ன் படி இது நீதியின் வஸ்திரம். ஜீவ
புஸ்தகத்தில் இவன் பெயர் நிலைத்திருக்கும்.
அதாவது,
நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுவான். பிதாவுக்கும் தூதர்களுக்கும்
முன்பாகவும் அவனுடைய நாமத்தை கிறிஸ்து அறிக்கையிடுவார்.
இவ்வுலகத்தில் கிறிஸ்துவின் நாமத்தை தைரியமாய் மற்றவர்களுக்கு அறிக்கை
இடுகிறவர்கள்- இவர்களைப் பற்றி கிறிஸ்துவும் ஒருநாளில் அறிக்கையிடுவார்.