வேதாகம வரலாறு பாகம் 7

தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ்
மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில்
இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ்
மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த
சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது.
1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும்
விட்டுவிட்டு தன்னுடைய ப லோக பயணத்தை முடித்தார்.

அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம்
வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச்
சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். " தன்னுடைய
உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன்
வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய
முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு
வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார். தன்
குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ
நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு
க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய
சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது. அவருடைய மரண நாளான 1719
பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக
ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை
மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார்.
ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார்.
"தேவன் தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே
சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை
அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என்
சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற
ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி
வித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில்
அமர்ந்து தன் ஜீவனை விட்டார்".

ஸ்கள்ட்ஸ்:

சீகன் பால்க் மொழிபெயர்க்காத பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளை இன்னொரு
ஜெர்மானிய மிஷனெரியாகிய பென்யமின் ஸ்கள்ட்ஸ் மொழி பெயர்த்து 1728ம் ஆண்டு
வெளியிடப்பட்டது.

பிப்ரேஷியஸ்:

சீகன் பால்க்கும், ஸ்கள்ட்ஸீம் மொழி பெயர்த்த தமிழ் வேதாகமம் ஒரு மிகப்
பெரிய சாதனையாக இருப்பினும், அதிலுள்ள பல குறைகள் நிமித்தம் அதை மறு
ஆய்வு செய்தல் அவசி யமாயிற்று. சீகன் பால்க்கிற்கு அடுத்து, தமிழ்
வேதாகமத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவர் ஜெர்மானிய மிஷனெரியாகிய
பிலிப் பிப்ரோஷியஸ், இவர் 1742 ம் ஆண்டு சென்னையில் வந்து இறங்கினார்.
அச்சமயத்தில் தான் சென்னையில் சரித்திரம் காணாத ஒரு அமளியும்,
கொந்தளிப்புமான சூழ்நிலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.
பிரெஞ்சுப் படையும், ஆங்கிலேயர் படையும் தங்களுடைய படை பலத்தை பரீட்சைப்
பார்த்ததின் விளைவாக சென்னை நகரம் முற்றுகைக்கும், கொள்ளைக்கும்
இலக்காயிற்று, இதன் நிமித்தம் பிப்ரேஷியஸ் சென்னைக்கு வெளியே உள்ள
புலிக்கோட்டை என்ற இடத்தில் அடைக்கலம் புக நேர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து
ஹைதர் அலியும், அவரது கொள்ளைப்படையும் சென்னை நகரத்தின் மீது படையெடுத்து
வந்தபோது பிர்ரேஷியஸ் ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார்.இவ்வளவு
கொந்தளிப்பான சூழ்நிலை யையும் பொருட்படுத்தாமல், பிபரேஷியஸ் வேதாகமத்தை
தமிழில் மொழி பெயர்க்கும் பணியை தீவிரமாகசெய்யத் தொடங்கினார். தமிழ்
வேதாகமத்திற்கு முன்னோடியாக தமிழ் இலக்கணத்தையும், அகராதியை யும்
வெளியிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டு கடின உழைப்பிற்குப் பின் புதிய ஏற்பாடு
முழுவதையும் மொழி பெயர்த்து, 1773 ம் ஆண்டு வெளியிட்டார். நான்கு
ஆண்டுகள் சென்றபின் பழைய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்க்,
ஸ்கள்ட்ஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்பு அநேகரின் கண்டனத்திற்குள்ளாயிற்று.
அதற்கு மாறாக, பிப்ரேஷியஸின் மொழி பெயர்ப்பு, வேதாகம மொழி பெயர்ப்புத்
துறை யில் ஒரு போற்றத் தகுந்த சாதனை யாகக் கருதப்பட்டது. அதற்கு காரணம் "
அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல பாஷையிலுள்ள பகுதியை வாசித்து,
ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி
பெயர்ப்பார்;" இவருடைய மொழி பெயர்ப்பு, இவருக்கு பின்னால் தோன்றிய எல்லா
மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக விளங்கியது என்பதும் இவருடைய மொழி
பெயர்ப்பை இன்றும் லுத்தரன் சபையினர் தங்க வசனம் ( புழடனநn ஏநசளழைn )
என்ற பெயரில் உபயோகித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி நாடுகளில் உள்ள
கிறிஸ்தவ ஊழியங்களின் வளர்ச்சியைக் குறித்து அதிக ஆர்வமி ருந்தது. இதன்
விளைவாக வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியம் அதிக அவசியமாக இருந்தது, இதுவே
ஆங்கில வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்பட அடிகோலியது. 1806 ஆம் ஆண்டில்
தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர். புச்சண்ணன் என்பவர்
இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.