ஆ). இயேசுவை கண்டவன் பிதாவை கண்டான் என்பதின் விளக்கம் என்ன?
* என்னை காண்கிறவன் என்னை அனுப்பினவரை காண்கிறான் (யோவா 12:45) என்றும்
என்னை கண்டவன் பிதாவை கண்டான் (யோவா 14:9) என்றும் இயேசு கூறியுள்ளார்.
இதற்க்கான விளக்கம் (கொலோ 2:9; 1:15; எபி 1:3) ல் உள்ளது.
"தேவத்துவத்தின் பரிபூரனமெல்லாம் சரீரபிரகாரமாக கிறிஸ்துவுக்குள் வாசமாய்
இருக்கிறது" என்பதாலும் கொலோ 2:9 "கிறிஸ்து தேவனுடைய நற்சுரூபமாய்
இருக்கிறார்" என்பதாலும் கொலோ 1:15 "கிறிஸ்து பிதாவுடைய மகிமையின்
பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாய் இருக்கிறார் (எபி 1:3)
என்பதாலும் தம்மை கண்டவர்கள் பிதாவை கண்டவர்கள் என்றும் (யோவா 12:45;
14:9) தம்மை அறிந்தவர்கள் பிதாவை அறிந்துள்ளனர் என்றும் (யோவா 14:7)
இயேசு கூறினார்.
மேலும் யோவா 12:45 ஐ கூறுவதற்க்கு முன் அதற்க்கு முந்திய வசனத்திலும்,
யோவா 14:7-11,20 ஐ கூறுவதற்க்கு முன் யோவா 14:1-2,6 இலும் தானும்
பிதாவும் வெவ்வேறு நபர்கள் என்பதை தெரியபடுத்திய பின்னரே அவற்றை
கூறியுள்ளார் என்பதை கவனிக்க. "என்னை கண்டவன் பிதாவை கண்டான்" என்று தான்
கர்த்தர் கூறினார். "நான் தான் பிதா" என்று கூறவில்லை.
இ). பிதா குமாரனிலும் குமாரன் பிதாவிலும் இருப்பதென்இ). பிதா குமாரனிலும்
குமாரன் பிதாவிலும் இருப்பதென்றால் என்ன?
தாம் பிதாவிலும் பிதா தம்மிலும் இருப்பதாக யோவா 14:10,11 ல் இயேசு
கூறியுள்ளார். இது நாம் கிறிஸ்துவிலும் கிறிஸ்து நம்மிலும் இருப்பதை
போன்றது (யோவா 14:20; 15:5; 2கொரி 5:17; ரோம 8:10)
தேவத்துவத்தின் தன்மை:-
1. பிதாவும் குமாரனும் சமமானவர்கள்:-
* தேவனிடத்தில் இருந்த "வார்த்தை" தேவனாயிருந்தார் (யோவா 1:1-2) எனவே
பிதாவும் வார்த்தையும் சமமானவர்கள்.
* தேவனை தமது பிதா என்று இயேசு கூறியதில் தன்னை தேவனுக்கு சமமாக்கினார்
(யோவா 5:17,18)
* நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் (யோவா 10:30), என்னை
அறிந்திருப்பீர்களானால் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் (யோவா 14:7),
என்னை கண்டவன் பிதாவை கண்டான் (யோவா 14:8-11) ஆகிய வசனங்கள் இயேசு
பிதாவுக்கு சமமானவர் என நிறுவுகிறது.
* பிதாவினுடையவைகள் யாவும் தம்முடையவைகள், தம்முடையவைகள் யாவும்
பிதாவினுடையவைகள் (யோவா 16:15; 17:10) என்று இயேசு கூறினார். சமமாக
இருப்பவர்கள் மட்டுமே இவ்வாறு கூற முடியும்.
* பிலி 2:6 இது இயேசு தேவனுக்கு சமமானவர் என்று நேரடியாக கூறுகிறது.
* பிதா அல்பா ஓமேகாவாக இருப்பது போல குமாரனும் இருக்கிறார். (வெளி 1:8
உடன் 1:11-13 ஐ ஒப்பிடுக)
* பிதாவும் ஆட்டுகுட்டியானவரும் புதிய எருசலேமில் ஆலயமாக இருக்கின்றனர்
(வெளி 21:22) என்பது தொழுதுகொள்ளபடுவதில் இருவரும் சமம் என்பதை
காட்டுகிறது வெளி 5:13 ஐயும் காண்க.
* ஒரு சிங்காசனத்தில் இருவர் (பிதாவும் குமாரனும்) உட்கார்ந்திருப்பதால்
வெளி 22:1 இருவரும் சமம் என்பதற்க்கு சந்தேகம் இல்லை.
* தண்ணீர் ஞானஸ்நானத்தின் போது (மத் 28:19) ஆசீர்வாதத்தின் போது (2கொரி
13:14; வெளி 1:4,5) பிதா குமாரன் ஆவியானவரின் பெயர் பயன்படுத்த படுவதால்
மூவரும் சமமானவர்கள்.
* ஊழியங்களிலும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் இனைந்து செயல்படுகின்றனர்.
2. ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவர்:-
* ஆவியானவரை பிதாவும் குமாரனும் அனுப்பியது போல (யோவா 14:16,26; 15:26)
குமாரனை பிதாவும் ஆவியானவரும் அனுப்பினர் (ஏசா 48:16)
* ஆவியானவரின் ஆற்றலால் தான் மரியாளின் கர்பத்தில் இயேசு உருவானார் (மத்
1:18,20; லூக் 1:35)
* கிறிஸ்து ஆவியானவருக்குள் ஞானஸ்நானம் தருவது போல (மத் 3:11) ஆவியானவர்
கிறிஸ்துவின் சரீரத்திற்க்குள் நமக்கு ஞானஸ்நானம் தருகிறார் (1கொரி
12:13)
* தண்ணீர் ஞானஸ்நானம் தருவதற்க்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின்
பெயர் கூறப்படுகின்றன (மத் 28:19,20)
* ஊழியங்களில் மூவரும் இனைந்து செயல்படுகின்றனர் 1கொரி 12:4-6
* ஆவியானவர் வரும் காரியங்களை அறிவிக்கிறவர் என்பதால் அது அவரின் தெய்வீக
பண்பை காட்டுகிறது
* ஆசீர்வாதம் சபைக்கு கூறும் போது மூவரின் பெயரை பயன்படுத்துகின்றன.
மேலே பார்த்தது போல மூவரும் சமமாக இருந்தாலும் தேவத்துவத்தில் தலைவராக
பிதாவாகிய தேவன் செயல் படுகிறார். (யோவா 14:28; 1கொரி 11:3; 15:28) பிதா
தலைவராக செயல்படுவதால் குமாரன் பிதாவுக்கு கீழ்ப்பட்டிருப்பார் என்று
1கொரி 15:28 கூறுகிறது. இந்நிலையில் பிதாவானவர் கிறிஸ்துவுக்கு தேவனாக
அழைக்கப்படுகிறார் (யோவா 20:17; எபி 1:9; வெளி 1:6); குமாரனைவிட
பெரியவராகவும் கருதப்படுகிறார் (யோவா 10:29; 14:28). மேலும் மூவரும்
தனிதனியே தேவன் என்று அழைக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் பிதாவாகிய
தேவனை மட்டும் தேவன் என்று அழைக்கும் பகுதிகளும் வேதத்தி உண்டு (மத்
4:10; யோவா 17:3; ரோம 16:27; எபே 4:6; 1தீமோ 2:5; 6:15-16; 1யோவா 5:9;
யூதா 4). இயேசு மட்டும் தேவன் என அழைக்கபடும் பகுதிகளையும் ஆவியானவர்
மட்டும் தேவன் என அழைக்கபடும் பகுதிகளையும் ஏற்கனவே பார்த்து உள்ளோம்.
