கடந்த பதிவில் நோவா
காலத்து வெள்ளம்
கதையாக எப்படி மற்ற
சமயத்தவர்களிடம்
பரவியது? என்று
பார்த்தோம்.
இப்போது
சிந்து சமவெளி
நாகரீகத்தில் நடந்தது என்ன?
என்பது பற்றிப் பார்க்கப்
போகிறோம்.
இறைவன் மனிதனை
ஏதேன் தோட்டத்தில்
உருவாக்கினார். அந்தத்
தோட்டம் குறிப்பாக
கிழக்கே இருந்தது
என்று குறிக்கப்பட்டது.
பின்பு நோவா
காலத்தில் மனிதர்
இறைவனுக்கு
கீழ்ப்படியாமல் போனதால்
இறைவனால்
அழிக்கப்பட்டு,
நோவாவினதும் அவரது
குடும்பமும்
காப்பாற்றப்பட்டது. அதன்
பின்பு நோவாவின்
மக்களும் உலகில்
பெருகுகின்றனர்.
பெருகி அவர்கள் உலகில்
பரவ ஆரம்பிக்கின்றனர்.
அதைப் பற்றிய செய்திகள்
ஆதியாகமம் 11 இல் தரப்
பட்டு இருக்கின்றன.
"ஜனங்கள்
கிழக்கேயிருந்து
பிரயாணம்பண்ணுகையி
ல், சிநெயார்
தேசத்திலே
சமபூமியைக்கண்டு,
அங்கே
குடியிருந்தார்கள்"
என்று.
இங்கேயும் மக்கள்
கிழக்கில் இருந்து வந்து
இருக்கின்றார்கள் என்று
கூறப்படும் செய்தியில்
கிழக்கு என்பது சிந்து
சமவெளி நாகரீகத்தினை
குறிக்கிறது. எனவே
வேதாகமத்தின் இந்தச்
செய்தியின் படி மக்கள்
கிழக்கில் இருந்து
அதாவது
சிந்துவெளியிலிருந்
து சிநேயார் என்னும்
தேசத்திற்கு
செல்லுகின்றனர்.
சிந்து
சமவெளி நாகரீகத்திற்கு
மேற்கில் 'சிநேயார்'
என்னும் தேசம் இல்லை.
'சுமேரியா'
என்னும் தேசமே இருந்து
இருக்கின்றது. மொழி
அறிஞர்களின்
கூற்றுப்படி
'சுமேரியர்' என்ற
சொல்லே 'சிநேயார்'
என்று திரிந்து உள்ளது.
எனவே மக்கள் சிந்து
சமவெளியில் இருந்து
மேற்கில் உள்ள
சுமேரியாவிற்கு
சென்றனர் என்பது
வரலாற்று
உண்மையாகின்றது.
நோவாவின் மக்களில்
ஒரு கூட்டத்தார் இன்னும்
சிந்துவெளி
பிரதேசத்தில்
வசிக்கின்றனர். அந்தக்
கூட்டம் திராவிடர்கள்
எனப்பட்ட தமிழர்கள்.
இவர்கள்
சமவெளி நாகரீகத்தில்
அமைதியாக வாழ்ந்து
வருகின்றார்கள்.
அவர்களின் மேல்
நாடோடிகளான
ஆரியர்கள் படை
எடுக்கின்றார்கள்.
ஆரியர்கள்
என்பவர்கள் மத்திய
ஆசியாவில் இருந்தும்
ஐரோப்பியாவில்
இருந்தும் வந்த மக்களை
குறிக்கும் சொல்லே
ஆகும். ஆரியர்களால்
திராவிடர்களுக்கு
எதிராக நடந்த யுத்தத்தில்
சிந்து சமவெளி
நாகரிக மக்கள் தோற்று
பின்வாங்குகின்றார்கள்.
ஆரியர்கள்
இந்தியாவினுள்
நுழைகின்றார்கள்.
ஆரியர்கள் என்றால் யார்
என்று அடுத்த பதிவில்
விரிவாகப் பார்க்கலாம்.
ஆரியர்கள் சிந்து
சமவெளியில் வென்று
விட்டார்கள். மேலும்
சிந்து சமவெளி நாகரீகம்
இயற்கை மாற்றங்களால்
அழிந்தது என்றும் சில
அறிஞர்கள்
கூறுகின்றனர். சிந்து
வெளி நாகரீகத்தில்
உள்ளவர்கள் பேசிய
மொழி தமிழ் மொழி
(திராவிடம்) என்று
சுட்டி காட்டினேன்.
வேதாகமத்தின் படி
உலகத்தில் எல்லோரும்
ஒரே பாஷையை
பேசியதாக கூறினேன்.
எனவே சிந்து மக்கள் மீது
போர் தொடுத்த ஆரியர்கள்
எவ்வாறு தோன்றினர்?
அவர்கள் பேசிய மொழி
என்ன? என்று ஓர் கேள்வி
எழலாம்.
நோவாவின் மக்களில்
ஒரு கூட்டமே
சிந்துவெளியில்
வசித்தது. மற்ற மக்கள்
கிழக்கில் இருந்து
அதாவது
சிந்துவெளியிலிருந்
து சிநேயார் என்னும்
தேசத்திற்கு
செல்லுகின்றனர்.
அங்கிருந்து பல நாகரிக
மக்கள் உருவாகின்றனர்.
அதனை வேதாகமத்தை
வாசிப்பதன் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
அந்த புதிய
நாகரீகங்களின் மக்கள்
காலங்கள் பல கடந்து
மீண்டும்
சிந்துவெளிநாகரிக
மக்களுக்கு
சம்பந்தமில்லாதவர்கள்
போல மொழியிலும்
தோற்றத்திலும் மாற்றம்
கொண்டவர்களாக
வருகின்றனர்.
சிந்துவெளி
மக்களோடு போர்
தொடுக்கின்றனர்.
