"நீ கொப்பேர் மரத்தால்
உனக்கு ஒரு பேழையை
உண்டாக்கு; அந்தப்
பேழையிலே அறைகளை
உண்டுபண்ணி, அதை
உள்ளும் புறம்புமாக
கீல்பூசு
(ஆதியாகமம் 6:14)".
இங்கே கொப்பேர் மரம்
என்று ஒரு மரத்தினைக்
குறிப்பிடுகின்றார்.
யாரும் 'கொப்பேர் மரம்'
என்ற ஒன்றினை கேள்விப்
பட்டு இருக்க
வாய்ப்பில்லை.
எனவே
அது கொப்பேர் மரம்
தானா என்பதில் ஒரு ஐயம்
இருக்கின்றது. அது ஏன்
'காப்பெரு' மரமாக
இருக்கக் கூடாது?.
'காப்பெரு மரம்'
மொழியாக்கத்தின்
போது 'கொப்பேர்
மரமாக'
மாறி இருக்கலாம்.
'காப்பெரு' என்றால்
காட்டில் உள்ள பெரிய
மரம் என்று
அர்த்தம்.
இறைவன்
நோவாவை ஒரு மிகப்
பெரிய கப்பலினைக் கட்டச்
சொல்லுகின்றார்.அந்தக்
கப்பலின் அளவையும்
வேதாகமத்தின்
படி இறைவனே கூறி
இருக்கின்றார்.
"நீ அதைப்
பண்ணவேண்டிய விதம்
என்னவென்றால்,
பேழையின் நீளம்
முந்நூறு முழமும்,
அதின் அகலம் ஐம்பது
முழமும், அதின் உயரம்
முப்பது முழமுமாய்
இருக்கவேண்டும்
(ஆதியாகமம் 6:15)".
இந்த நீளத்தில் படகினைச்
செய்ய ஒரு மரம்
வேண்டும் என்றால் அது
நிச்சயம் பெரிய
மரமாகவே இருக்க
வேண்டும்.
அத்தகைய
பெரிய மரங்கள்
காட்டினில்
காணப்படுவதே இயற்கை.
எனவே இறைவன்
நோவாவினை
'காட்டினில் உள்ள
பெரிய மரத்தினைக்'
கொண்டு
நாவாயினைக் கட்டு
என்று சொல்லி இருக்க
கூடும்.
அதுவே
காலத்திலும்
மொழியாக்கத்திலும்
'கொப்பேர் மரம்' என்று
மருவியது.
வெள்ளம் வற்றிய பின்பு,
நோவாவின் கப்பலும்
கரை தட்டி விட்டது. அவன்
கப்பலில் ஏற்றிய
உயிரினங்களோடும்
அவனின்
குடும்பத்தினரோடும்
நோவா தரை இறங்கி
விட்டான்.
அப்பொழுது
அவனை அழியாமல்
காப்பாற்றிய
கடவுளுக்காக அவன் ஒரு
காரியம் செய்கின்றான்.
அவன் கடவுளிடம் தன்
நன்றியைத்
தெரிவிப்பதற்காகசில
மிருகங்களைப் பலி
இடுகின்றான்.
"அப்பொழுது நோவா
கர்த்தருக்கு ஒரு
பலிபீடம் கட்டி, சுத்தமான
சகல மிருகங்களிலும்,
சுத்தமான சகல
பறவைகளிலும்
சிலவற்றைத்
தெரிந்துகொண்டு,
அவைகளைப்
பலிபீடத்தின்மேல்
தகனபலிகளாகப்
பலியிட்டான்
(ஆதியாகமம் 8:20)".
நோவாவின் இந்தச்
செயலின் மூலமே
உலகில் பலி இட்டு
இறைவனை
வழிபடும் வழிபாட்டு
முறை தோன்றியது.
அது இன்றைக்கும்
தொடர்வதனை நாம்
காணலாம். இந்தப் பலி
வழிப்பாட்டு முறை
தான் பின்னாளில்
சமணமும் பௌத்தமும்
தோன்றுவதற்கு காரணம்.
நோவாவின் மக்களும்
உலகில்
பெருகுகின்றனர்.
பெருகி அவர்கள் உலகில்
பரவ ஆரம்பிக்கின்றனர்.
அதைப் பற்றிய செய்திகள்
ஆதியாகமம் 11 இல் தரப்
பட்டு இருக்கின்றன.
"ஜனங்கள்
கிழக்கேயிருந்து
பிரயாணம்பண்ணுகையி
ல், சிநெயார்
தேசத்திலே
சமபூமியைக்கண்டு,
அங்கே
குடியிருந்தார்கள்"
என்று.
இங்கேயும் மக்கள்
கிழக்கில் இருந்து வந்து
இருக்கின்றார்கள் என்று
கூறப்படும் செய்தியை
கவனியுங்கள். 'கிழக்கு'
என்பது சிந்து சமவெளி
நாகரீகத்தினை
குறிக்கிறது.
எனவே
வேதாகமத்தின் இந்தச்
செய்தியின் படி மக்கள்
கிழக்கில் இருந்து
சிநேயார் என்னும்
தேசத்திற்கு
செல்லுகின்றனர்.
எனவே 'கிழக்கு' என்பது
சிந்து
சமவெளி நாகரீகமாக
இருந்தால் இந்தச்
செய்தியின் படி
மக்கள் அதில் இருந்து
அதற்கு மேற்கில் உள்ள
சிநேயார் என்னும்
தேசத்திற்கு சென்று
இருக்க
வேண்டும்.
ஆனால்
சிந்து சமவெளி
நாகரீகத்திற்கு மேற்கில்
'சிநேயார்' என்னும்
தேசம் இல்லை.
'சுமேரியா'
என்னும் தேசமே இருந்து
இருக்கின்றது.
மொழி அறிஞர்களின்
கூற்றுப்படி
'சுமேரியர்' என்ற
சொல்லே 'சிநேயார்'
என்று திரிந்து உள்ளது.
எனவே மக்கள் சிந்து
சமவெளியில் இருந்து
மேற்கில் உள்ள
சுமேரியாவிற்கு
சென்றனர் என்பது
வரலாற்று
உண்மையாகின்றது.
அப்படி
சுமேரியாவிற்கு
பயணித்த மக்கள் யார்
என்பதற்கும்
அதே ஆதியாகமத்தில்
விளக்கம் இருக்கின்றது.
"பூமியெங்கும் ஒரே
பாஷையும்,
ஒரேவிதமான பேச்சும்
இருந்தது, அப்பொழுது
அவர்கள்: நாம் செங்கல்
அறுத்து, அதை
நன்றாய்ச் சுடுவோம்
வாருங்கள் என்று
ஒருவரோடொருவர்
பேசிக்கொண்டார்கள்;
கல்லுக்குப் பதிலாகச்
செங்கல்லும், சாந்துக்குப்
பதிலாக நிலக்கீலும்
அவர்களுக்கு இருந்தது".
மேலே உள்ள
வாக்கியங்களில் " நாம்
செங்கல் அறுத்து, அதை
நன்றாய்ச் சுடுவோம்"
என்ற வார்த்தைகளை
கவனித்து ஆராய்ந்தால்,
உலகிலேயே
முதன்முதலில்
செங்கல்லை சுட்டு
கட்டிடங்கள் கட்டும் பழக்கம்
தமிழனுக்கே உண்டு
என்பது ஒரு வரலாற்று
உண்மை.
செங்கல்லை
சுடும் பழக்கம் தமிழனால்
கண்டுப் பிடிக்கப்பட்ட
ஒன்று.
சிந்து சமவெளி
நாகரீகத்தில் கட்டப்பட்டு
உள்ள கட்டிடங்கள் சுட்ட
செங்கலினால் கட்டப்பட்டு
உள்ளன என்பதும்
வரலாற்று ஆய்வு
உண்மை.
எனவே
வேதாகமத்தில்
குறிக்கப்பட்டு உள்ள மக்கள்
தமிழர்களே என்று நாம்
கருத முடிகின்றது.
மேலும் அதே
வேதாகமத்தில் உலகத்தில்
அப்பொழுது ஒரே
மொழி தான் இருந்தது
என்று கூறப்பட்டு
இருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
அந்தக்
காலத்தில் இருந்த மனிதன்
தமிழன் தான் என்றால்
இருந்த ஒரே மொழியும்
தமிழாகத்தான் இருக்கக்
கூடும் என்பதில்
ஐயமில்லை.
எனவே
வேதாகமத்தின் படி
உலகின் முதல் மனிதன்
தமிழன் என்றும் முதல்
மொழி தமிழ் என்றும்
நாம் அறிய
முடிகின்றது.
அதே
தமிழர்கள் உலகில் பல
இடங்களுக்கு பரவிச்
சென்று இந்த நோவா
காலத்து
வெள்ளக்கதையை
பல்வேறு கதைகளாக
கூறிவிட்டனர்.
தொடர்ந்தும் என்னுடன்
இணைந்திருங்கள்.
இது சத்தியத்தை
அறிந்துகொள்ள ஓர்
அருமையான தேடல்.
நீங்கள் அறிந்திராததும்,
மறுக்க
முடியாததுமான
தகவல்கள் ஆதாரங்களுடன்
வர இருக்கின்றன.
நன்றி.
நோவா காலத்து வெள்ளம் கதையாக எப்படி மற்ற சமயத்தவரிடம்பரவியது? பாகம் 2
1
April 11, 2016
Tags

நோவா என்ற சொல்லின் மருவு தான் நாவாய் என்று ஆகிறது.
ReplyDelete