ஆரியர்கள் என்றால்யார்?பாகம் - 1

கடந்த பதிவில் சிந்து
சமவெளி நாகரீகத்தில்
நடந்தது என்ன? என்பது
குறித்துப் பார்த்தோம்.

இப்போது ஆரியர்கள்
என்றால் யார்? என்று
பார்க்கப் போகிறோம்.

சுருக்கமாகச் சொன்னால்
இந்தியாவின் மீது
படையெடுத்து வந்த
சகர்கள் (Scythian),
குசானர்கள் (Kushan),
ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள்
(சுங்கர்கள் கன்வர்களை
நினைவில் கொள்க),
கிரேக்கர்கள்
ஆகியோரின்
வம்சத்தினரும்
இந்தியாவுடன் வணிகம்
செய்ய வந்து அங்கேயே
தங்கி இருந்த ரோமர்களும்
தான் ஆரியர்கள்.

மாறாக
ஆரியர் என்பது எந்த ஓர்
இனத்தின் பெயர் அல்ல.

ஆரியர்கள் என்றால் யார்
என்பதை சற்று
விளக்கமாகப் பார்ப்பதற்கு
கி.மு ஆறாம்
நூற்றாண்டுக்கு செல்ல
வேண்டி இருக்கின்றது.

ஒரு பெரும்
படையோடு பாரசீக
பேரரசர் சைருஸ்
இந்தியாவின் மேற்கு
பகுதியான காந்தாரப்
பகுதியில்
படையெடுத்தார்.

வரலாற்றுக் குறிப்புகள்
படி இந்தியாவின் மேல்
படையெடுக்கும் முதல்
அந்நிய அரசர் இவர் ஆவார்.

பொதுவாக
இந்தியாவின் தெற்குப்
பகுதிகளை விட வட
மேற்குப் பகுதிகளே
அதிகமாக
தாக்குதல்களுக்கு
உள்ளாகி இருக்கின்றன.

காரணம் தெற்கினை தாக்க
வேண்டும் என்றால் கடல்
வழியே வருவதை தவிர
வேறு வழி இல்லை.

ஆனால் வட மேற்கோ
அவ்வாறு இல்லை.
திறந்தே இருக்கின்றது.

இந்நிலையில் தான்
பாரசீக அரசர்
இந்தியாவின் மீது
தாக்குதல்
நடத்துகின்றார்.
வெற்றியும்
பெறுகின்றார்.

இந்தியாவின் மேற்குப்
பகுதிகளான
காந்தாராவில் பாரசீகர்
ஆதிக்கம்
தொடங்குகின்றது.
காலப்போக்கில் இன்றைய
ஆப்கானிஸ்தான் மற்றும்
பாகிஸ்தான் பகுதிகள்
முழுக்கவும் பாரசீகரின்
கட்டுப்பாட்டுக்குள்
வருகின்றது.

நீண்ட காலம் ஆட்சியில்
இருந்த இவர்கள் பின்னர்
அலெக்ஸாண்டரின்
இந்தியப் படை எடுப்பின்
பொழுது
தோற்கடிக்கப்படுகின்றனர்.

அவர்களின் கீழே இருந்தப்
பகுதி இப்பொழுது
கிரேக்கர்களின் வசம்
போகின்றது. இதன் காலம்
கி.மு நான்காம்
நூற்றாண்டு.
அலெக்சாண்டர்
இந்தியாவின் மீது போர்
தொடுத்த நூற்றாண்டு.

இந்தியாவில்
அலெக்சாண்டர் பல
வெற்றிகள் பெற்றதும்
பின்னர் பின்
வாங்கியதும் வரலாறு.
முதலில் பாரசீகர்களின்
தாக்கத்திற்கு உட்பட்ட
காந்தாரம் பின்னர்
கிரேக்கர்களின்
தாக்கத்திற்கு
உட்படுகின்றது.

ஆய்வாளர்களின் கூற்றின்
படி காந்தாரத்தை படை
எடுத்து வென்ற
பாரசீகர்கள் அங்கே
இருந்தவர்களோடு
திருமண முறைப்படி
கலக்கின்றனர். அவ்வாறு
மேற்கு இந்தியாவில் பல
இனக்குழுக்கள்
அக்காலத்தில் தோன்றின.

அவர்களின் மூலமே
இந்தியாவின் அரசியல்
அமைப்புகள் வெளியே
கசிந்து பின்னர்
கிரேக்கம் மற்றும்
பக்ட்ரியன் இனத்தவரும்
இந்தியாவின் மேல் படை
எடுத்தனர் என்றும்
ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.

இந்தியாவின் மேற்கில்
பல இனக்குழுக்கள்
தோன்றிவிட்டன.
அலெக்ஸாண்டரும்
இந்தியாவின் மீது
போரிட்டு சென்று
விட்டார். கிரேக்க
தாக்கமும் பாரசீக
தாக்கமும் இந்தியாவின்
மேற்கில் இருக்கின்றன.

இக்காலத்தில் தான்
இந்தியாவின்
வரலாற்றில் குறிக்கப்பட்ட
ஒரு மாபெரும் வீரன்
தோன்றுகின்றான்.
அவன் சந்திர குப்த
மௌரியன்.

அவன்
தோன்றி மௌரியப்
பேரரசினை
நிறுவுகின்றான்.இவன்
காலத்தில் சிதறுண்ட
இந்தியாவின் மேற்குப்
பகுதிகள் இவனது
பேரரசில் இணைய
ஆரம்பிகின்றன.
அவற்றுடனே அந்த
இந்திய-ஈரானிய
இனக்குழுவினரும்
தான். சந்திர குப்தனுக்கு
பின்னர் அவன் மகன்
பிந்துசாரா
வருகின்றான்.

அவன்
பின்னர் இந்தியா கண்ட
மாபெரும் சக்கரவர்த்தி
அசோகன் வருகின்றார்.

கிட்டத்தட்ட முழு
இந்தியாவுமே
மௌரியப் பேரரரசின் கீழ்
வருகின்றது. தெற்கே
பாண்டியர்களையும்
சோழர்களையும்
தவிர்த்து. மௌரியப்
பேரரசு அதனது
பொற்காலத்தை
அடைகின்றது.

அந்த
காலத்துடனையே ஒரு
மாற்றமும் வருகின்றது.
அசோகன் புத்தத்தை
தழுவுகின்றான்.
வன்முறையை கை
விடுகின்றான்.
அன்பினைக் கைப்
பிடிக்கின்றான். அன்பு
வளர ஆரம்பிக்கின்றது.

அதன் கூடவே
பௌத்தமும். ஆனால்
பேரரசு தளர்கின்றது.
சிறு மன்னர்கள் தங்களை
மௌரியப் பேரரசில்
இருந்து பிரித்துக்
கொள்ள
தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தான்
காலங்கள் ஓடுகின்றன.
மௌரியப் பேரரசு
இறுதியில்
பிரகதரத்தனை வந்து
அடைகின்றது.

'மௌரியப் பேரரசின்
கடைசி அரசன்' இவன்.
அதற்கு காரணமாக
அமைவது புஷ்யமித்ர
சுங்கன் (Pushyamitra sunga)
என்ற இவனது படைத்
தளபதி ஆவான்.

தன்னுடைய படை
அணிவகுப்பை
பிரகதரத்தன் காண சென்று
இருந்த பொழுது
அவனால் மிகவும்
நம்பப்பட்ட படைத்
தளபதியான புஷ்யமித்ர
சுங்கனால் கொலை
செய்யப்படுகின்றான்.

மன்னனைக் கொன்ற
புஷ்யமித்திரன் சதியால்
அரசைப் பிடிக்கின்றான்.
இந்த புஷ்யமித்ர சுங்கன்
பாரசீக வம்சாவளியைச்
சார்ந்தவன் என்பது
வரலாறு. அதாவது ஒரு
ஆரியன்.

இவ்வாறு கடைசி
மௌரியப் பேரரசனைக்
கொன்று மௌரியப்
பேரரசை ஒரு
முடிவுக்கு
கொண்டு வந்த இவன்
சுங்க அரசை
நிறுவுகின்றான்.

இதுவே இந்திய மண்ணில்
அமைந்த முதல் ஆரிய
அரசு.

காலம் கி.மு
இரண்டாம் நூற்றாண்டு.
புத்தத்தை ஆதரித்த
மண்ணில்
புஷ்யமித்திரன் வேத
வேள்விக் கொள்கைகளை
வளர்க்கின்றான்.இவனது
காலத்திலேயே
இந்தியாவில் முதல்
முறையாக வேத கால
வழிபாட்டு முறைக்கு
சான்றுகள்
கிடைக்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.