தானியேல் சொப்பனத்திலே கண்ட சிலையின் பாதத்திற்கு இணையான வல்லரசு தான்
ஐரோப்பிய பொதுச்சந்தையாய் எழும்பியிருக்கிறது.
பழைய ரோமப்பேரரசு இருந்த நாட்களிலே, அந்த நாட்களில் ரோமப்பேரரசு இருந்த
இடத்தில் உள்ள நாடுகளெல்லாம் இப்பொழுது ஒன்றுசேர்ந்து மறுபடியுமாய்
இந்தக் கூட்டாட்சியை ஏற்படுத்தியிருக் கின்றன.
இந்த நாட்களிலே இயேசு கிறிஸ்துவினுடைய பகிரங்கவருகையும் சம்பவிக்க வேண்டும்.
எப்படி சம்பவிக்கும்?
முதலிலே இயேசு கிறிஸ்துவினுடைய இரகசியவருகையிலே பரிசுத்தவான்கள்
எடுத்துக் கொள்ளப்படுவார்கள்;
ஏழிலிருந்து எட்டாவதவனாகிய அந்திக்கிறிஸ்து வெளிப்படுவான்.
அவன் உலகத்திலே கொடிய சட்டங்களைக் கொண்டுவருவான்.
உலகத்திற்கு அது உபத்திரவ காலமாயிருக்கும்.
அந்த 7 வருடத்தின் முடிவிலே என் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பகிரங்கமாய்
இந்த உலகத்திற்குள் இறங்கிவந்து, அவனை அழித்து அந்த அந்திக்கிறிஸ்துவை
அழித்து–தம்முடைய ராஜ்யத்தை நிறுவுவார்.
அந்திக்கிறிஸ்துவை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எப்படி அழிப்பார் என்பதை
2தெசலோனிக்கேயர் 2ம் அதிகாரத்தின் 8ம் வசனத்திலே பார்ப்போம்.
'நீக்கப்படும் போது அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர்
தம்முடைய வாயின்சுவாசத்தினாலேஅழித்து, தம்முடைய வருகையின்
பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார்'.
சபையானது உலகத்திலிருந்து நீக்கப்படும் பொழுது அந்த அக்கிரமக்காரனாகிய
அந்திக்கிறிஸ்து வெளிப்படுவான்;
அந்த அந்திக்கிறிஸ்துவைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே
அழித்துதம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
என் அன்பு சகோதரனே, சகோதரியே, என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய
இரண்டாம் வருகை அப்படியாய் முதலிலே இரகசிய வருகையாகவும் 7 வருட அந்திக்
கிறிஸ்துவின் ஆட்சிக்குப்பிறகு பகிரங்க வருகையாகவும் சம்பவிக்க,
அந்திக்கிறிஸ்துவை அவர் நாசம்பண்ணி அவர்தம்முடைய இராட்சியத்தை
ஸ்தாபிப்பார்.
அது தான் பெரிய கல்லாய் பூமியை நிரப்பினதாக தானியேல் கண்டான்.
அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவினுடைய வருகை எப்படி சம்பவிக்கும்?
பாகம் 10 விரைவில்...
