அலெக்சாண்டருக்குப் பிறகு நான்காகப் பகுக்கப்பட்ட கிரேக்க தேசத்திற்கு
ஒப்பான நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து அந்திக்கிறிஸ்துவுக்கு ஒப்பான
ஒரு சிறிய கொம்பு எழும்பினது என்று வேதத்தில் பார்த்தோம்.
எனவே அந்திக்கிறிஸ்து கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஒருபகுதியிலிருந்து
எழும்புவான் என நீங்களே தீர்மானிக்கலாம்.
அலெக்சாண்டருக்குப் பிறகு கிரேக்க சாம்ராஜ்யம்
எகிப்து,
சிரியா,
துருக்கி,
கிரீஸ்
என்ற நான்கு தேசங்களாகப் பகுக்கப்பட்டது.
கிரிசை கசண்டரும்,
துருக்கியை லைசிமாக்கஸ்சும்,
எகிப்தை ரெலோமியும்,
சிரியாவை செலுகஸ்நிகேடாரும் ஆளஆரம்பித்தனர்.
இந்த நான்கு தேசங்களில் ஒன்றிலிருந்து தான்அந்திக்கிறிஸ்து எழும்ப வேண்டும்.
ரோம சாம்ராஜ்யத்திலிருந்து அல்லவா அந்திக்கிறிஸ்து எழும்ப வேண்டும்.
அப்படியிருக்க கிரேக்க சாம்ராஜ்யத்திலிருந்து அந்திக்கிறிஸ்து எழும்ப
முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
கிரேக்க வல்லரசின் ஆட்சி முடிவில் ரோமப்பேரரசு எழும்ப அது கிரேக்க
வல்லரசிலிருந்த நாடுகளை வென்று தன்னோடு சேர்த்துக்கொள்ள கிரேக்க
சாம்ராஜ்யம் ரோம வல்லரசின் அங்கமாகிவிடுகிறது.
எனவே ரோம வல்லரசில் அங்கமான கிரேக்க வல்லரசின் ஒரு நாட்டிலிருந்து
அந்திக்கிறிஸ்து எழும்புவான் என்று நீங்கள் தீர்மானிக்கலாம்.
பழைய ரோம் வல்லரசு வியாபித்திருந்த நாடுகளிலிருந்து எழும்பியுள்ள
E.E.Cயில் கிறீஸ் என்ற நாடும் பத்தாவது நாடாக கடந்த 1981ம் ஆண்டிலிருந்து
சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கிறீஸிலிருந்து
அந்திக்கிறிஸ்து எழும்புவான் என்று தீர்க்கதரிசன
ஆராய்ச்சியாளர்களால்எதிர்பார்க்கப்படுகிறது.
அந்திக்கிறிஸ்து எழும்பவேண்டிய வல்லரசான E.E.C நாம்கண்களுக்ளு முன்பதாகத்
தோன்றிவிட்டதாலும் கிறீஸ் நாடும் E.E.Cயில் அங்கமாகி 1981ம் ஆண்டில்
அதில் சேர்ந்திருப்பதாலும் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக் காலம்
வெகுசமீபமேயென உணரலாம்.
எனவே மேகத்தில் மன்னன் வந்திடும் நாளும்சமீபமேயென அறியலாம்.
