ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 10

இயேசு கிறிஸ்துவினுடைய இரகசிய வருகைக்கு நீ ஆயத்தமாய் இருக்க வேண்டும்
என்று வேதவசனம் உங்களுக்குத் தெரிவிக்கிறது.

சபையை எடுப்பதற்காய் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரப்போகிறார்.

ஒருவேளை ஒருசிலர் நினைக்கலாம்-இன்றைக்கு ஒரு நாள் செய்திதானே! இயேசு
கிறிஸ்து வரும் போது பார்த்துக்கொள்ளலாம்இன்னும் ஒரு சில காலம்
இருக்குமல்லவா! அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்.
அந்த வேளை பரிசுத்தமான வாழ்க்கைக்குக் கடந்துசெல்லலாம் என்று!.

பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவினுடைய இரகசிய வருகை ஒவ்வொரு தேசமாய்
நடைபெறப் போவதில்லை.

இயேசு கிறிஸ்துவினுடைய வருகை ஒருசில மணிநேரங்களில் நடக்கும் என்று
வேதவசனம் சொல்லவில்லை.

இயேசு கிறிஸ்துவினுடைய இரகசிய வருகை ஒருசில நாட்களில் நடைபெறும் என்று
சொல்லப்படவில்லை.

வேதவசனத்திலே " In a moment; In a flicker of a moment; In a flicker of
an eye; In a flash! You shall be transformed" என்று
சொல்லப்பட்டிருக்கிறது.

கண்மூடிக் கண்திறப்பதற்குள்ளாய்என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய
வருகை சம்பவிக்கும் என்று பவுல் தெரிவிக்கின்றார்.

ஒருவேளை சிலர் நினைக்கலாம் இதெல்லாம் நடக்காது, எப்படி ஐயா உலகத்திலே
வாழுகிற மக்கள் மேலே எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று .ஒருவேளை சிலர்
இப்படியான கேள்விகேட்கக் கூடியவாய்ப்பு இருக்கலாம்.

எப்படி சரித்திரத்திலே தீர்க்கதரிசனம் நிறை வேறியிருக்கிறதோ, உலகத்தின்
நடப்பிலே சம்பவங்களிலே எப்படி தீர்க்கதரிசனம் நிறை வேறியிருக்கிறதோ,
அப்படியே ஒரு நாள் இந்த சம்பவம் உலகத்தில் நடைபெறப்போகிறது.

பிரதான தூதனுடைய சத்தம் கேட்கும் போது, தேவ எக்காளம் ஒலிக்கும்போது
கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கிறவர்கள் எல்லோரும் ஒருநொடியிலே எடுத்தக்கொள்ளப்
படுவார்கள்.

ஒரேநொடியிலே உலகமனைத்திலுள்ள பரிசுத்தவான்க ளெல்லாரும் எடுத்துக்கொள்ளப்
படுவார்கள்.

அந்தநாள் என்றைக்கு?

பிதா ஒருவர்தவிர வேறொருவரும் அறியார். அந்தஒருநொடியிலே, இயேசு
கிறிஸ்துவினுடைய எடுத்துக்கொள்ளல் இரகசியவருகை சம்பவிக்கிற அந்தநொடியிலே,
பல்வேறு தேசத்துக்குப் பல்வேறு நேரங்களாயிருக்கும். ஒருதேசத்துக்கு
எமக்கு இருப்பதுபோல இரவுநேரமாயிருக்கும்.ஒருதேசத்துக்கு அதுபகல்
நேரமாயிருக்கும்.

பூமியானது சுற்றிக் கொண்டே யிருப்பதினாலே கண் மூடிக் கண்திறக்கக் கூடிய
அந்த ஒருசிலநொடிகளிலே உலகமெங்கிலுமுள்ள பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்
படுவார்கள்.

பல்வேறுநேரங்கள் பல்வேறு தேசத்துக்கு இருக்கும்போது இயேசு
கிறிஸ்துவினுடைய வருகை சம்பவிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.