தானியேலின் வார்த்தைகளின் படியே அலெக்சாண்டர் மரித்த பிறகு அவனுடைய
சாம்ராஜ்யம், அவனுடைய சந்ததியாருக்குச் செல்லாமல் அவனுடைய தளபதிகளுக்கே
கடந்துசெல்கிறது.
அலெக்சாண்டர் மரித்த 15 வருடங்களுக்குள்ளாகஅவனது மூன்று மனைவிகளும்,
இரண்டு பிள்ளைகளும், ஒரு சகோதரனும் அவனுடைய மனைவியும், அலெக்சாண்டரின்
தாயாரும் கொலைசெய்யப்பட அலெக்சாண்டரின் வம்சம் தானியேலின் தீர்க்க
தரிசனத்தின்படியே அழிந்துபோகிறது.
வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் சரித்திரத்திலே நிறைவேறுவதற்காய்தேவனுக்கு
ஸ்தோத்திரம்.
தானியேல் 8:9ஐப் பாருங்கள் கிரேக்க தேசத்தைக் குறிக்கும் வெள்ளாட்டுக்
கடாவுக்குத் தோன்றின நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து சின்னதான ஒரு
கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான
தேசத்துக்கும் நேராகவும் மிகவும் பெரியதாயிற்று என்று நீங்கள் அங்கே
வாசிக்கலாம்.
இந்தச் சிறிய கொம்பு அந்திக்கிறிஸ்துவைக் குறிப்பதாகும்.
தானியேல் 8:23ஐப் பாருங்கள் சின்னக் கொம்பிற்கு ஒப்பான அந்திக்கிறிஸ்து
மூர்க்கமுகமும் சூதான பேச்சுமுள்ள, சாமர்த்தியமான ஒரு ராஜா என்று
தானியேல் அந்திக்கிறிஸ்துவை வர்ணிக்கிறான்.
அந்திக்கிறிஸ்துவைக் குறித்து அவனுடைய வல்லமைபெருகும்; ஆனாலும் அவனுடைய
சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயவிதமாக அழிம்புண்டாகி, அனுகூலம் பெற்றுக்
கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்தஜனங்களையும்அழிப்பான் என்று
காபிரியேல் தானியேல் தீர்க்கதரிசன புஸ்தகத்தில் 8ம்அதிகாரம் 24ம்
வசனத்தில் தெரிவிக்கிறார்.
அந்திக்கிறிஸ்துவின் வல்லமை அவனுடைய சுயபெலத்தினாலும் இராது என்று
காபிரியேல் உரைப்பதைக் கவனியுங்கள்.
அந்திக்கிறிஸ்து உலகத்தை மனித பலத்தோடுமாத்திரம் ஆளப்போவதில்லை
வெளிப்படுத்தின விஷேசத்தின் 13ம் அதிகாரத்தின் 4ம் வசனத்திலிருந்து
அந்திக்கிறிஸ்துவுக்கு அதிகாரத்தைக் கொடுப்பது வலுசர்ப்பமாகிய பிசாசானவனே
என அறியலாம்.
அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது பிசாசானவனின் முழு அதிகாரத்தோடும்
வல்லமையோடும் ஆளுவான்.
தானியேல் 8:25ல் அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கை கூடி வரப்பண்ணி,
தன் இருதயத்தில் பெருமைகொண்டு நீர்விசாரத் தோடிருக்கிற அநேகரை அழித்து,
அதிபதிகளுக்கு அதிபதியா யிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்;
என்றுவேதம் கூறுகிறது.
இதிலே அந்திக்கிறிஸ்து தன் உபாயத்தினால் என்ற வார்த்தைகளுக்கு
மூலமொழிபெயர்ப்பிலேதன் பொய் சமாதான திட்டங்களினால் என்று
கூறிபிடப்பட்டுள்ளது.
அந்திக்கிறிஸ்து உலகத்தில் தோன்றும்போது ஒரு பொய் சமாதானத்தை
வாக்களித்து, உலகத்தின் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றுகிற வனாயிருப்பான்.
இவ்வாறு எழும்புகிற அந்திக்கிறிஸ்து கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்
போடப்படுவான் என்று காபிரியேல் தெரிவிப்பதையும் தானியேல் 8:25ல்
கவனியுங்கள்.
அந்திக்கிறிஸ்து மனிதர்களுடைய கைகளினால் அல்ல இயேசுகிறிஸ்துவின் இரண்டாம்
வருகையிலே அவரால் முறித்துப் போடப்படுவான் என்பதை மேற்கண்டவாறு
காபிரியேல் தெரிவிக்கிறான்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் 19ம்அதிகாரத்தில் 19ம், 20ம் வசனங்களைப் பாருங்கள்.
அப்பொழுது மிருகம்பிடிக்கப்பட்டது;மிருகத்தின் முன்பாகச் செய்த
அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதன் சொரூபத்தை
வணங்கினவர்களையும்மோசம்போக்கின கள்ளத் தீர்க்கதரிசியுங்கூடப்
பிடிக்கப்பட்டான்.
இருவரும் கந்தகம் எரிகின்ற அக்கினிக் கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்
என்று அங்கு நீங்கள் வாசிக்கலாம்.
இந்த வசனத்திலே மிருகம் என்பது அந்திக்கிறிஸ்துவைக் குறிக்கிறது.
இவ்வாறு அந்திக்கிறிஸ்து, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையிலே
கந்தகம் எரிகின்ற அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான் என்பதைத்தான் காபிரியேல்
அந்திக்கிறிஸ்து கைகளினால் அல்ல வேறுவிதமாய் முறித்துப் போடப்படுவான்
என்று சொல்லுகின்றான்.
இதற்குப் பிறகு காபிரியேல் சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம்
சத்தியமாய் இருக்கிறது ஆதலால் இந்த சத்தியத்தை நீ மறைத்துவை அதற்கு
இன்னும் அநேகநாள் செல்லும் என்கிறான்.
தானியேல் இந்த தீர்க்கதரிசனத்தை உரைத்து சுமார் 2500 ஆண்டுகள் நிறைவேறப்
போகின்றன. நாம்வாழும் இக்கடைசிக்காலத்திலேதான் இந்தத் தீர்க்கதரிசனங்கள்
எல்லாம் ஆராயப்பட்டுக் கடைசிக்காலத்தின் செய்திகள் வெளியாகிக்
கொண்டிருக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன், 'உலகத்தின் கடைசி
நாட்களில் ஒரு கூட்டம் மனிதர்கள் எழும்புவார்கள் தங்கள் கவனத்தை
தீர்க்கதரிசனங்களின் பக்கம் திருப்புவார்கள்; எதிர்ப்புகளுக்கும்,
ஆதரவுக்கும் மத்தியில் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல்களை உறுதியாய்த்
தெரிவிப்பார்கள்' என்று கூறினார்.
சர் ஐசக் நியுட்டனின் வார்த்தைகளின்படியே கடைசிக்கால தீர்க்கதரிசனங்கள்
பல இந்நாட்களில் ஆராயப்பட்டு அதன் உண்மைகள் அறிவிக்கப்படுகின்றன.
