பாபிலோன் வரலாறு பாகம் 7

ஹம்முராபி:

ஹம்முராபிஆதி பாபிலோனிய சாம்ராச்சியத்தின் 6 ஆவது அரசன்(கி.மு 1792- 1750).

ஹமுராபி தன்னுடைய ஆட்சி காலத்தில் பல சிறப்பான காரிங்களை செய்தான் (
நீர்ப்பாசனத்துறை, வரி வசூலிப்புத்துறை மற்றும் சமயம் சம்பந்தமான
காரியங்கள்). முதல் முப்பது வருட அவனுடைய ஆட்சியில் அவன் ஒரு சிறிய
ராச்சியத்தின் அரசானகவே திகழ்ந்தான். அதன் பின்பு அவன் செய்த தொடர்
யுத்தங்களில் அவன் வெற்றியீட்டி பல இடங்களை கைப்பற்றினான் (லார்சா
இராச்சியம், எஷீன்னா, ஆசூர், பிற்பாடு மரி). அவனுடைய காலத்தில் தான்
மர்டக் (பாபிலோனிய தெய்வம்) பிரபல்யமான தெய்வமாகியது. ஹமுராபி மன்னன்
சிறந்த யுத்தங்களை நடத்தியிருந்த போதிலும், எல்லாராலும் மிகவும்
மதிக்கப்படும் காரியம்:

அவனுடைய சட்டங்கள். முதன் முதலாக எழுதப்பட்ட சட்டங்கள் ஹமுராபி
மன்னனுக்கு 400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. ஹமுராபி மன்னன் 282
கட்டளைகளை தான் ஆண்ட காலத்தில் எழுதி வைத்திருந்தான்.நாம்
தற்காலங்கங்களில் பாவிக்கும் கட்டளைகள் போல் இல்லாவிட்டாலும், அவனுடைய
கட்டளைகளில்அவன் நீதியையும், நியாயத்தையும் கடைப்பிடித்தான்என்று
தெரிகிறது. அவனுடைய கட்டளைகளை அவன் ஆண்ட ராச்சியம் முழுவதும்
பிரகடனப்படுத்தி அதை நடை முறையில் கொண்டுவந்தான்.இவனுடைய ஆண்ட காலங்களை
ஆதி பாபிலோனுடைய பொற்காலம் என்று வர்ணிப்பர்.

ஹமுராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற கட்டளைகள்.

ஹமுராபி மன்னனுடைய சில சட்டங்கள்:
சட்டம் 195.......... ஒரு மகன் தன்னுடைய தந்தையுடன் பிரச்சனைப்பட்டால்
அவனுடைய கைகள் வெட்டப்பட வேண்டும்
சட்டம் 196.......... கண்ணுக்கு கண் பிடுங்கப்படுதல் வேண்டும்
சட்டம் 197.......... யாராவது ஒருவனுடைய எலும்புகளை முறித்தால், அவனுடைய
எலும்பும் முறிக்கப்பட வேண்டும்
ஹம்முராபி
ஹம்முராபி மன்னனுடைய சிலை.


சார்கோன்:

சார்கோன்(அக்காடியா ராச்சியம் கி.மு 2350- 2200)

அக்காடிய மக்கள் செமித்திய இனத்தை சேர்ந்தவர்கள். அக்காடிய ராச்சியத்தை
ஸ்தாபித்தசார்கோன் மன்னன்பிறந்த இடம் யாருக்கும் தெரியாது. உண்மையான
பெயரும் தெரியாது.இவனுடைய கதை மோசேயின் கதையைப்போல இருக்கிறது

இவனுடைய தாய் ஒரு பெண் மத குரு. அவள் இவனை ஒரு பெட்டியிலே வைத்து,
ஐபிராத்து நதியிலே விட்டாள். அந்தப்பெட்டியை ஒரு வயது முதிர்ந்த
தோட்டக்காரன் கண்டெடுத்து, உள்ளே குழந்தையைக்கண்டு, அதை தன்னுடைய
சொந்தப்பிள்ளையைப்போல வளர்த்தான். பின்பு கிஷ் நாட்டின் மன்னனுடைய
அரண்மனையிலே சார்கோன் வேலைக்கு அமர்த்தப்பட்டான். அங்கே இருந்த இளவரசி
இஷ்தார் மூலம் கிஷ் நாட்டின் மன்னனாக்கப்பட்டான்.

அதன் பின்பு உருக் தேசத்தின் மேல் படையெடுத்தான். சுமேரிய ஆட்சியை
வீழ்த்தி தன்னுடைய அக்காடியா இராச்சியத்தை ஸ்தாபித்தான். அக்காடியா எனும்
நகரத்தையும் உருவாக்கினான். அவன் தன்னுடைய கடவுள் இஷ்தார்-க்காக ஒரு
அரண்மனையையும், கோவிலையும் கட்டினான்.அகாதே நகரம் சரியாக எங்கே
இருந்ததென்று இதுவரையிலும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. மக்கள் மத்தியிலே
பேச்சு இருந்தது, சார்கோன் மன்னனின் 5400 போர்வீரர்கள் ரொட்டி
சாப்பிடுவார்கள் என்று. இந்தப்பேச்சு, சார்கோன் மன்னனின் அரண்மனை எவ்வளவு
பெரிதாக இருந்திருக்கும் என்று காட்டுகிறது.

சார்கோன் மன்னன் (முகமூடி)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.