பாபிலோன் வரலாறு பாகம் 8

கில்காமேஷ்:

கில்காமேஷ் (சுமேரியா கி.மு 3000)

கில்காமேஷ் உலகத்திலே எழுதப்பட்ட புராதன கதைகளில் மிகவும் பழமை
வாய்ந்தது.இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான்
மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை. இதிலே குறிப்பிடப்பட்டுள்ள
விடயம்: சுமேரியாவிலுள்ள உருக் தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ்
பற்றியும், அவன் நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும். உண்மையில்
இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லாவிட்டாலும்,
இவனையும் சுமேரிய அரசர்கள் வரிசையில் சேர்த்திருக்கிறார்கள்.
கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருக்கின்றது.
எழுதப்பட்ட மொழி அக்காடியா. உருக் எனும் வார்த்தை தான் பிற்காலங்களில்
ஈராக் என்று திரிபு பெற்றது.கில்காமேஷ் மூன்றில் இரு பங்கு கடவுள்,
மூன்றில் ஒரு பங்கு மனிதன்.
நோவாவின் கதை ஜலப்பிரளயத்திற்கு பின்பு மக்கள் மத்தியில் பேச்சு வளக்கில்
இருந்தது. அதுவே கில்காமேஷ் ஆக திரிபு பெற்று அக்காடிய மக்களின் ஆட்சியல்
எழுதப்பட்டது.ஏனென்றால் கில்காமேஷின் கதை அக்காடிய மொழியில்
எழுதப்பட்டிருப்பதனாலும். எழுதிய காலமும் அக்காடி இராச்சியத்தின் காலமாக
இருப்பதனாலும். ஆனால் கில்காமேஷ் ஒரு சுமேரிய மன்னன்.
கில்காமேஷ் களிமண் தகடுகளில் மட்டுமல்ல உலகத்தின் சகல கண்டகளிலுமுள்ள
புராதன மொழிகள் அனைத்திலும் உலகம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட கதைகள்
உண்டு.

தமிழில்கூட அப்படி கதை ஒன்று இருக்கின்றது. முதலாவது தமிழ்ச்சங்கம் மகா
ஜலப்பிரளயத்தினால் குமரிக்கண்டத்தில் அரைவாசி தண்ணீருக்குள்
அமிழ்ந்ததென்றும், அதிலிருந்து தப்பிய மக்கள் இரண்டாவது தமிழ் சங்கத்தை
தொடங்கினார்கள் என்றும், பின்பு குமரிக்கண்டத்தின் மற்றப்பகுதியும்
மூழ்கையில், இளவரசன் திருமாறன் தமிழ் நாட்டிற்கு சில தமிழ் இலக்கியங்களை
காப்பாற்றிக்கொண்டு, நீந்தி வந்தார் என்றும், ..... தமிழில் உள்ள
புராதான கதை சொல்கின்றது.

.
கில்காமேஷ் எழுத்துக்களை படத்தில் காணலாம்.

தெய்வங்கள்:

பாபிலோனியர்களுக்கு அனேக தெய்வங்களை வைத்திருந்தார்கள்.

சுமேரியவிலிருந்து சில கடவுள்கள், அக்காடியாவிலிருந்து சில கடவுள்கள்,
மலைதேசங்களிலிருந்து சில கடவுள்களை அவர்கள் தங்களது கடவுள்களாக
வைத்திருந்தார்கள். இந்தக்கடவுள்களின் தேவைகளும் ஒவ்வொன்றுக்கொன்று
வித்தியாசமாக இருந்தது. அதிகமான கடவுள்கள் பாபிலோனியர்களை அச்சுறுத்தும்
கடவுள்களாகவே இருந்தன. அவர்களும் கடல், மண்;, மின்னல், இடி, பாலைநிலம்,
தெய்வம், வெளிச்சம், இப்படி பல இயற்கைகளுக்கென்று ஒவ்வொரு கடவுள்களை
வைத்திருந்தனர். இவைகளைத்தவிர்த்து நகரத்துக்குரிய கடவுள்களும்
இருந்தனர்.

பாபிலோனியர்கள் சாஸ்திரங்களிலே நம்பிக்கையுள்ளவர்கள், அவர்கள் கிரகங்களை
கணித்து கடவுளின் செயல் என்று செயற்பட்டார்கள். பாபிலோனிய அநேக
தெய்வங்கள் வானத்திலுள்ள கிரங்களே: சின் (சந்திரன்), ஷமாஷ்(சூரியன்),
இஷ்தார்(வியாழன்).

சில முக்கியமான பாபிலோனிய தெய்வங்கள்:

அனு: மேல் வானத்தின் தெய்வம்
மர்டக்:பாபிலோனின் தேசியக்கடவுள்

தியாமத்: வலுசர்ப்ப தெய்வம் (பெண்)
கிங்கு:தியாமத் தெய்வத்தின் புருஷன்
என்லில்:காலநிலைகளின் தெய்வம்
நபு:கலைத்தெய்வம்

இஷ்தார்: காதல் தெய்வம் (பெண்)
எனுர்தா:யுத்தத்தின் தெய்வம்
அன்ஷார்:வானத்தின் தந்தை

ஷமாஷ்: சூரியன், நீயாயாதிபதி தெய்வம்
அஷீர்

(அசூர்): அசீரியர்களின் தேசியக்கடவுள்

கிஷார்: உலகத்தின் தந்தை

பாபிலோனிய நகரத்தின் தெய்வத்திற்கு கட்டப்பட்ட சிகுரத் கோவிலை படத்தில் காணலாம்.

வேதாகமத்தில்:

2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, சங்கீதம்,
ஏசாயா, எரேமியா, எசேக்கியல், தானியேல், மீகா, சகரியா, மத்தேயு,
அப்போஸ்தலர் நடபடிகள், 1 பேதுரு, வெளிப்படுத்தல் ஆகிய புஸ்தகங்களில்
வாசிக்கலாம். பாபேலைப்பற்றி ஆதியாகம் 10- 11 ஆம் அதிகாரங்களில்
வாசிக்கலாம்

சிறு குறிப்புக்கள்
ஆதி அப்போஸ்தலர் காலத்திலேயே பாபிலோனில் சபை உருவாகிற்று.
1 பேதுரு 5: 13 உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற
பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல்
சொல்லுகிறார்கள்.
இந்த விடயம் ஒரு சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது. ஆதி அப்போஸ்தலர்
காலத்தில் பாபிலோனியா தேசம் ஒரு சிறு பிரதேசமாக இருந்தது. ஆதி
அப்போஸ்தலர் காலத்தில் பாபிலோனியாவில் சபைகள் இருந்ததற்கான ஆதரங்கள்
இல்லை. இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் பாபிலோனியா எனும் வசனம் ரோம
சாம்ராச்சியத்தையே குறிக்கின்றது, என்று பலர் சொல்கின்றனர். ஏனெனில்:
மாற்கு பவுலுடன் அந்தக்கால கட்டத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்தார்
என்று நம்பப்படுகின்ற படியால்.

வெளிப்படுத்தல் புஸ்தகத்தில்வரும் பாபிலோன், அநேக வேத
ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, அது பாபிலோன் நாட்டைக்குறிக்கவில்லை,
மாறாக பாபிலோனின் ஆவியைக்குறிக்கின்றது. பாபிலோனிய ஆவி என்பது விக்கிரக
ஆராதனை, பில்லி சூனியங்கள், சமயங்கள், சாஸ்திரங்கள், மார்க்கங்கள்
என்பவற்றைக்குறிக்கும். அநேகர் இதை ரோம சாம்ராச்சியம் என்கிறார்கள்.
சிலர் அமெரிக்கா என்கின்றனர்.
14:8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது!
தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்
கொடுத்தாளே! என்றான்.
17:18 நீ கண்ட ஸ்திரீயானவள் ப மியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற
மகா நகரமேயாம் என்றான்.

எந்த நாடாக இருக்கும் என்கின்ற ஆராய்ச்சியை விட, எங்களுடைய பெயர் ஜீவ
புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கின்றதா, இல்லையா அல்லது எழுதப்பட்டு
கிறுக்கப்பட்டிருக்கின்றதா என்று ஆராய்தல் மேல்.எல்லா விதத்திலும்
எங்களுடைய இரட்சிப்பை காத்துக்கொள்ள பிரயாசப்படுவோம். எல்லாருக்காகவும்
ஜெபிப்போம். விமர்சகர்களாக இருப்பதை விட, கிறிஸ்துவின் மாதிரியை
பின்பற்றுவோம். தேவன் தாமே எங்கள் எல்லாருடனும் கூட இருப்பாராக. காலம்
சமீபித்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவரது வழியை
பின்பற்றுவோம்.
எனக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.