இந்த பத்துவிரல்கள் யாரைக் குறிக்கின்றன?
கடைசி நாட்களிலே எழும்பப்போகிற பத்து இராட்சியங்களின் கூட்டமைப்பையே குறிக்கின்றன.
இந்தப் பத்துவிரல்கள் தனியான ஒரு வல்லரசு அல்லது தனியான ஒரு சாம்ராஜ்யம்
என்று தானியேல் தெரிவிக்கவில்லை.
ரோம வல்லரசைக் குறிக்கக் கூடிய காலிலிருந்து நீண்டு வந்த பத்து விரல்கள்
இன்றைக்கு எழும்பியிருக்கிற
இந்த ஐரோப்பிய பொதுச்சந்தை, எந்த நாடுகளின் கூட்டாட்சி?
–பழைய ரோமப்பேரரசு எந்த இடத்திலெல்லாம் வியாபித்திருந்ததோ, அந்த
இடத்திலிருந்து எழும்பியுள்ள நாடுகள் தான் இப்பொழுது இந்தக் கூட்டாட்சியை
அமைத்திருக்கின்றன.
பாதத்திற்கு இணையான வல்லரசு தான் ஐரோப்பிய பொதுச்சந்தையாய் எழும்பியிருக்கிறது.
பழைய ரோமப்பேரரசு வியாபித்திருந்த நாடுகள் எல்லாம் இப்போழுது
ஒன்றுசேர்ந்து மறுபடியுமாய் இந்தக் கூட்டாட்சியை ஏற்படுத்தியிருக்
கின்றன.
இந்த நாட்களிலே இயேசு கிறிஸ்துவினுடைய பகிரங்க வருகையும் சம்பவிக்கவேண்டும்.
அந்திக்கிறிஸ்து எழும்பப்போகிற தேசத்தைக் குறித்ததான இன்னொரு
விளக்கத்தையும் நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
தானியேல் தனது தரிசனத்தில் இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா ஒன்றும்,
ஒருகொம்புள்ள வெள்ளாட்டுக்கடா ஒன்றும் சண்டை போடுவதாக ஒரு சமயம்
காண்கிறார்.
இது தானியேல் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் எட்டாவது அதிகாரத்திலே சொல்லப்பட்டுள்ளது.
இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியப்பெர்சிய வல்லரசைக் குறிப்பதாகும்.
அந்த ஆட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளும் மேதியப்பெர்சிய வல்லரசின் இரண்டு
ராஜாக்களைக் குறிப்பதாகும்.
இரண்டு கொம்புகளில் ஒன்று மற்றதைப் பார்க்கிலும் உயர்ந்திருந்தது என்று
தானியேல் 8:3 தெரிவிக்கிறது.
ஆட்டுக்கடாவின் சிறிய கொம்பு மேதியனாகிய தரியுவையும், பின்னால் தோன்றிய
பெரியகொம்பு பெர்சியனாகிய கோரேசையும் குறிப்பதாகும்.
ஒரு கொம்புடன் தோன்றிய வெள்ளாட்டுக் கடா கிரேக்கதேசத்தைக் குறிக்கிறது
என்றும் அதற்கிருந்த ஒரே பெரியகொம்பு அதன்முதலாம் ராஜாவைக் குறிக்கிறது
என்று கபிரியேல் தானியேல் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் எட்டாம் அதிகாரம்
21ம் வசனத்தில் தெரிவிக்கிறான்.
அந்த ஒரு பெரியகொம்பு கிரேக்க தேசத்தின் ராஜாவாகிய மகா அலெக்சாண்டரைக்
குறிப்பதாகும்.
தானியேலின் தரிசனத்தில் கிரேக்க வல்லரசைக் குறிக்கிற ஒருகொம்புள்ள
வெள்ளாட்டுக்கடா மேதியப்பெர்சிய வல்லரசைக் குறிக்கும் இரண்டு கொம்புள்ள
ஆட்டுக்கடாவை மிதித்துப் போடுகிறது.
தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட படியே மகா அலெக்சாண்டர் மேதியப்பெர்சிய
வல்லரசை அழித்து கிரேக்க சாம்ராஜ்யத்தை நிறுவுகிறான். தானியேல் 8:8 ஐப்
பாருங்கள் கிரேக்க சாம்ராஜ்யத்தின் ராஜாவாகிய அலெக்சாண்டருக்குப் பிறகு
என்ன சம்பவிக்கும் என்பதை அங்கே பார்க்கலாம்.
'அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமை கொண்டது அது பலங்
கொண்டிருக்கையில் அந்தப் பெரிய கொம்பு முறிந்து போயிற்று'; என்று அங்கே
நீங்கள் வாசிக்கலாம்.
பெரிய கொம்பு முறிந்துபோனது அலெக்சாண்டரின் மரணத்தைக் குறிக்கிறது.
அப்படியே அலெக்சாண்டர் வல்லமை பெற்று பெலன்கொண்டு எழும்பி வருகிற
சமயத்திலே, தனது 33வது வயதிலே நோய்வாய்ப்பட்டு மரித்துப்போனான்.
'நான் இறந்த பிறகு என்னை எனது சவப்பெட்டியிலே வைக்கும் போது என் கைகள்
விரிக்கப்பட்ட நிலைமையில், என் சவப்பெட்டிக்கு வெளியே என் வெறுமையான
கைகள் தெரியும்படி என்னை அடக்கம் செய்யுங்கள், அலெக்சாண்டர் வெறுங்கையனாக
உலகத்திற்கு வந்து, வெறுங்கையனாக உலகத்தைவிட்டுப் போனான் என்பதை உலகம்
அறியட்டும்' என்று கூறிய அலெக்சாண்டர் இறந்தான்.
அலெக்சாண்டருக்குப் பிறகு அவனுடைய சாம்ராஜ்யம் நான்காகப் பகுக்கப்பட்டது.
அலெக்சாண்டருக்கு ஒப்பான வெள்ளாட்டுக் கடாவின் ஒற்றைக் கொம்பு உடைந்த
உடனே, நான்கு கொம்பு முளைத்தெழும்பின என்பதை தானியேல் 8:8 தெரிவிப்பதைக்
கவனியுங்கள்.
அப்படியே அலெக்சாண்டர் மரித்த பிறகு அவனது தளபதிகளான லைசிமார்க்ஸ்,
கசண்டர்,
செலூக்கஸ்,
ரொலோமி
என்ற அவனது நான்கு தளபதிகளும் நாட்டைப் பகுத்துக்கொண்டனர்.
இவ்வாறு கிரேக்க சாம்ராஜ்யத்தைக் குறித்து தானியேல் உரைத்த இன்னொரு
தீர்க்கதரிசனம் தானியேல் தீர்க்கதரிசனப் புஸ்தகத்தின் 11ம் அதிகாரம் 4ம்
வசனத்தில் உரைக்கப்பட்டிருப்பதைப்பாருங்கள்.
'ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி பிரபலமாய் ஆண்டு தனக்கு
இஷ்டமான படி செய்வான். அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்து
போய், வானத்தின் நாலுதிசைகளிலும் பகுக்கப்பட்டும்; ஆனாலும் அது அவனுடைய
சந்ததியாருக்கு அல்ல, அவன்செய்த ஆளுகையின்படியும் அல்ல அவனுடைய ராஜ்யம்
பிடுங்கப்பட்டு அவனுடைய வர்களல்லாத வேறே பேர்களிடமாய்த் தாண்டிப்போம்'
என்று அங்குநீங்கள் வாசிக்கலாம்.
