ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 6

அந்திக்கிறிஸ்து என்ற அக்கிரமக்காரன் அந்த அக்கிரமத்தின் இரகசியம்
உலகத்திலே கிரியைசெய்து கொண்டிருக்கிறது.

ஏழாவது வல்லரசும் எழும்பிவிட்டது அந்தஏழிலிருந்து எட்டாமவனாகிய
அந்திக்கிறிஸ்து எழும்பவேண்டும்.

ஆனால் அவன் வெளிப்படுவதைப் பூமியிலேஇருக்கின்ற ஏதோ ஒரு சக்தி அல்லது
பூமியிலே இருக்கக்கூடிய ஏதோ ஒரு கூட்டம் தடைசெய்து வைத்திருக்கிறது.

தடைசெய்கிற அந்தக்கூட்டம் நீக்கப்படும்போது அந்திக்கிறிஸ்து வெளிப்படுவானாம்.

தடைசெய்து வைத்திருப்பது யார்?

1தெச 4:15 – 17

15.கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச்
சொல்லுகிறதாவது, கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடியிருக்கும் நாம்
நித்திரை யடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை

16.ஏனெனில் கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதானதூதனுடைய
சத்தத்தோடும்,தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்.

பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும்ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து
வானத்திலிருந்து இறங்கிவருவார'.

எந் தவானத்திலிருந்து?

மூன்றாம் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது என்னநடக்கும்?

பூமிக்குவருவார் என்று சொல்லப் பட்டிருக்கிறதா?

1தெச4:16-17 அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்,

17,பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,
மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,இவ்விதமாய்
எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

இது இயேசுகிறிஸ்துவின்
இரகசிய வருகையைத் தெரிவிக்கிறது, என் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூன்றாவது
வானத்திலிருந்து கீழே இறங்கிவரும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும்
மறுரூபமாக்கப்பட மேகங்களோடே எடுத்துக்கொள்ளப்பட்டுஅவரைச்சந்தித்து
அவரோடேகூட இருப்போம் என்றுசொல்லப் பட்டிருக்கிறது.

இந்தநேரத்திலே இயேசு கிறிஸ்துவினுடைய வருகை பிரதானதூதனுடைய சத்தத்தோடும்
தேவஎக்காளத்தோடும்நிறைவேறும்போது பூமியிலிருந்து ஒருசிலர் எடுத்துக்
கொள்ளப்படுவார்கள்.

யார்அவர்கள்?

கிறிஸ்துவுக்குள் ஜீவிப்பவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
எல்லோரும் என்று சொல்லவில்லை உலகத்தின் மக்கள் எல்லோரும் எடுத்துக்
கொள்ளப்படுவார்கள் என்று சொல்லவில்லை

'நாமும்' என்று தெசலோனிக்கேயர் சபைக்குச் சொல்லுகிறார்.

நாமும் என்றுசொல்லும்போது சபையானது எடுத்துக்கொள்ளப்படும்என்றுசொல்லுகிறார்.

எனவே இயேசு கிறிஸ்துவினுடைய
இரகசிய வருகையிலே சபையின் கூட்டம் பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.

பூமியிலிருந்து இது எடுத்துக் கொள்ளப்படுவதினாலேபரிசுத்த ஆவி
பூமியிலிருந்து நீக்கப்படுகிறது. நீக்கப்பட்டவுடனே அக்கிரமக்காரன்
வெளிப்படுவான்.

அக்கிரமக்காரனாகிய அந்திக்கிறிஸ்து பிசாசினுடைய ஆயுதமாக பிசாசினுடைய
மனிதனாக இந்த உலகத்தை ஆளப்போகிறான்;

பிசாசானவன் கிரியை செய்ய முடியாதவாறு அவன் வெளிப்படுவதை தடைசெய்து
வைத்திருப்பது யார்? சபையின் மூலமாக இருந்து சபைக்குள்ளாக இருந்து கிரியை
செய்து கொண்டிருக்கிற பரிசுத்தாவியானவர்.

சபையானது இயேசு கிறிஸ்துவினுடைய இரகசியவருகையிலே
எடுத்துக்கொள்ளப்படும்போது ,உலகமெங்கிலுமுள்ள பரிசுத்தவான்க ளெல்லாம்
எடுத்துக் கொள்ளப்படும் போது அக்கிரமக்காரன் வெளிப்படுவான்.

அக்கிரமக்காரனை வெளிப்படாதவாறு தடைசெய்து வைத்திருப்பது கிறிஸ்துவுக்குள்
ஜீவிக்கிற பரிசுத்தவான்களுடையகூட்டமாகிய நாமே.

நம்மூலமாய்க் கிரியைசெய்கிற பரிசுத்தாவியின் வல்லமையினால்
அந்தஅக்கிரமக்காரன்வெளிப்படாதவாறு தடைசெய்து வைத்திருக்கிறோம்.

இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையிலே பரிசுத்தவான்களாகியநாம்
எடுத்துக்கொள்ளப்பட அக்கிரமக்காரன் வெளிப்படுவான். அவனுடைய கைகளிலே இந்த
உலகம் ஒப்படைக்கப்படும்.

ஏழு வருடங்களுக்கு அவனுடைய ஆட்சி இந்த உலகத்திலே தொடரும்.

கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கிறவர்கள் பூமியின் மேற்பரப்பிலிருந்து
எடுத்துக்கொள்ளப்பட அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்குள்ளாய் இந்த உலகம்
கடந்துசெல்லும்.

கிறிஸ்துவுக்குள் ஜீவிக்காத உலகத்தின் மக்கள் கைவிடப்படுவார்கள்.
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி உலகத்திலே தொடரும் இது உலகத்திற்கு உபத்திரவக்
காலமாயிருக்கும் ,மகா உபத்திரவக் காலமாயிருக்கும்.

என் அன்புச்சகோதரனே, சகோதரியே! ஒருவேளை இக்காரியங்கள்
உங்களுக்குப்புதிதாய் இருக்கலாம் ஒருவேளை இக்காரியங்கள் புரிந்துகொள்ள
முடியாததாய் இருக்கலாம்.

ஆனால் வேதத்தின் தீர்க்கதரிசனங்கள் சரித்திரத்திலே நிறை
வேறியிருக்கின்றன. இந்த எச்சரிப்பை நாம் அறியவில்லை என்று நீங்கள் சொல்ல
முடியாதவாறு, இந்த எச்சரிப்பை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

காலம்
சமீபமாயிற்று,

காலம்
நிறைவேறிற்று,

இனிக்
காலம்செல்லாது.

கடைசி வல்லரசு நமது கண்களுக்கு முன்னதாய் தோன்றிவிட்டது.

இதில் ஒருகுறிப்பை நீங்கள் கவனிக்க வேண்டும் நேபுகாத்நேச்சார்
சொப்பனத்தில் கண்ட சிலைக்குக் கடந்துவாருங்கள்.

அந்தச் சிலையை அவன்பார்த்துக் கொண்டிருந்த போது கைகளினால் பெயர்க்கப்படாத
கல் ஒன்று பெயர்ந்து வந்து அந்தச்சிலையைமோதிதூள்தூளாக்கினது நன்றாய்க்
கவனியுங்கள்

சிலையின் தலையிலே அந்தக்கல் மோதவில்லை;

எனவே பாபிலோனிய வல்லரசின் நாட்களிலே இயேசு கிறிஸ்துவினுடைய
வருகை நடக்க முடியாது.

புயத்திலே மோதவில்லை

எனவே மேதியப்பெர்சிய நாட்களில் இது நடக்கமுடியாது.

தொடையிலே மோதவில்லை,

எனவே கிரேக்க சாம்ராஜ்யத்தின் நாட்களில் இது நடக்கமுடியாது.

அந்தக்கல் சிலையை அதனுடைய கால்களில் மோதவில்லை

எனவே ரோமப்பேரரசின் நாட்களிலே இயேசுக் கிறிஸ்துவினுடைய இரண்டாம்
வருகைசம்பவிக்க முடியாது.

இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களிலே மோதினது விரல்களின் மேலே மோதினது.

கல் புரண்டு வந்துசிலையை நொறுக்கி, பூமியைநிரப்பி பெரியதாயிற்று.

இது எதைக்குறிக்கிறது?

இயேசுகிறிஸ்து இரண்டாவது வருகையிலே இந்த உலகத்துக்குள்ளாய் வந்து,
பகிரங்க வருகையிலே தம்முடைய ஆயிரம்வருட அரசாட்சியை
ஸ்தாபிக்கப்போகின்றதைக்குறிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.