திரித்துவம் பாகம் 6

திரித்துவம் என்பதின் விளக்கம்:-

இதுவரை நாம் பார்த்த ஐந்து பாகங்களில் அறிந்து கொள்வது என்னவென்றால்

* "தேவத்துவத்தில்" மூன்று நபர்கள் உள்ளனர். மூவரும் ஒரே தன்மையும் ஒரு
மனமும் ஒற்றுமையும் உடையவர்கள்.

* தனித்தனியே ஒவ்வொருவரையும் தேவன் என்றும் கர்த்தர் என்றும் அழைக்கலாம்.

* மூவரையும் சேர்த்து தேவன் என்றும் கர்த்தர் என்றும் அழைக்கலாம்.

* தனித்தனியே தேவன் என்று அழைக்கப்படும் இடங்களை தவிர, மற்ற பல
பகுதிகளில் ஒரே தேவன் என்பது ஒரே தேவத்துவமாகிய பிதா குமாரன் பரிசுத்த
ஆவியானவரை குறிக்கிறது என்பதாகும்.

* மூவரையும் சேர்த்து தேவன் என்று கூறும் ஏராளமான பகுதிகள் வேதத்தில்
உண்டு. மிகவும் தெளிவாக தெரிகிற ஆதி 1:26; 3:22; 11:7; ஏசா 6:8; யோவா
14:25; 17:11,22,23 போன்ற பகுதிகள் இதற்க்கு எடுத்துகாட்டாக அமைக்கின்றன.

* பல மனிதர்களாலான கிறிஸ்துவின் சரீரமாகிய சபை ஒரு மனிதனாக
கூறப்பட்டுள்ளதை போன்று (எபே 2:14,15; 2தெச 2:7,8) தேவத்துவத்தை ஒரு
நபராக யாத் 20:3; உபா 4:39; 6:4; ஏசா 44:6,8,21; 45:21; 46:9; ஓசி 13:4;
மாற் 12:29 போன்ற பல பகுதிகள் கூறுகின்றன.

* ஒருவரை கூறும் பகுதிகளையும் மூவரையும் கூறும் பகுதிகளையும் கருத்தூன்றி
படிப்பது நமது கடமை ஆகும்.

இந்த கட்டுரையை முழுக்க முழுக்க வேத ஆதாரத்துடன் விளக்கியுள்ளேன்.
ஜெபத்தோடு அனைத்து பாகங்களையும் படியுங்கள் தேவன் உங்களுக்கு காரியங்களை
விளங்கி கொள்ள உதவி செய்வார்.

"சத்தியத்தையும் அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" ஆமென்....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.