ஒருவரா மூவரா?:-
ஒருவரா, மூவரா? என்ற கேள்விக்கு பதில் காண்பதில் பலர் பல கருத்துகளை
கூறியுள்ளனர். அதில் மிக முக்கியமான மூன்று கருத்துகளை இப்பொழுது
காண்போம்.
1. ஒருமை கோட்பாடு:-
"மூவரும் ஒருவர் தான், அவர்தான் பிதா. அதாவது பிதாதான் இயேசுவும்
ஆவியானவரும்" என்று ஒரு குழுவினர் கூறுகின்றனர். "மூவரும் ஒருவர்தான்,
அவர்தான் இயேசு. அதாவது இயேசுதான் பிதா, இயேசுதான் குமாரன், இயேசுதான்
ஆவியானவர்" என்று இன்னொரு குழுவினர் கூறுகின்றனர். இதற்க்கு ஆதாரமாக
(யோவா 10:30; 12:45; 14:7,9-10; 17:22; 1யோவா 5:7) போன்ற பகுதிகளில்
நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம், என்னை கண்டவன் பிதாவை கண்டான்
என்பவைகள் போன்ற கருத்துகளை கூறுகின்றனர். இவர்கள் கூறுவது தவறு என்று
இக்கட்டுரையில் இதற்க்கு முன் பாகங்களில் இருந்து நன்கு தெரிந்து
கொள்ளலாம். ஏனெனில் மூவரும் தனித்தனி நபர்கள் என்று அந்த பாகங்கள்
நிறுவுகிறது.
2. மனிதனால் புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்து:-
மூன்று நபர்கள் இருப்பது உண்மைதான். ஆனால் தேவன் ஒருவரே, கர்த்தர் ஒருவரே
என்று வேதம் கூறுவதால் அதுவும் உண்மையே. எனவே மூவரும் ஒருவர் என்பது
உண்மை. எனினும், இதன் நுணுக்கங்கள் மனிதனின் அறிவிற்க்கு அப்பாற்பட்டவை.
மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. என்பது பெரும்பாலான கிறிஸ்தவர்களின்
கருத்து. இவ்வாறு கூறுவதற்க்கு "மறைவானவைகள் நம்முடை தேவனாகிய
கர்த்தருக்கே உரியவைகள்" (உபா 29:29) என்ற வசனமும் "காரியத்தை மறைப்பது
தேவனுக்கு மகிமை" (நீதி 25:2) என்ற வசனமும் ஆதாரங்களாக அமைகின்றன.
3. மூவரும் ஒருமனதுடனும் மிகுந்த ஒற்றுமையுடனும் செயல்படும் தேவத்துவம்
என்ற கருத்து:-
தேவன் ஒருவரே என்று கூறும் வசனப்பகுதிகளை ஆராய்ந்து பார்போம். ஒன்று
என்றால் என்ன? என்னை கண்டவன் பிதாவனை கண்டான்.... பிதா என்னிலும் நான்
பிதாவிலும் என்று இயேசு கூறியதின் விளக்கம் என்ன? என்பதை இதில் காணலாம்.
அ). ஒன்று என்றால் என்ன பொருள்:-
* ஒன்று என்பது எண்ணிக்கையில் ஒன்று என்பதை குறிக்காமல் ஓற்றுமையில்
ஒன்று என்பதை குறிக்குமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.
* யோவா 17:11 ல் "நீர் எனக்கு தந்தவர்கள் நம்மைபோன்று ஒன்றாய்
இருக்கும்படிக்கு...." என்று இயேசு கூறியுள்ளார். இயேசுவின் சீடர்கள்
எண்ணிக்கையில் ஒன்று அல்ல.
* யோவா 17:22 ல் "நாம் ஒன்றாய் இருக்கிறது போல அவர்களும் ஓன்றாய்
இருக்கும்படிக்கு...." என்று மீண்டும் கூறியுள்ளார். ஒன்று என்பது
சீடர்களின் எண்ணிக்கையை குறிக்காமல் ஒருமனதோடும் ஒற்றுமையோடும் இருப்பதை
குறிக்கிறது.
* யோவான் 10:30; 17:22 ல் "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என
கூறியிருப்பது ஒரே தன்மை உடையவர்களாய் இருப்பதையும் (One in substance
and qualities) ஒற்றுமையாக ஒரே சிந்தனை உள்ளவர்களாய் இருப்பதையும்
குறிப்பிடுகிறது. நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று தான்
கூறினார் "நான் தான் பிதா" என்று கூறவில்லை.
* 1யோவா 5:7 ல் "பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒன்றாய்
இருக்கிறார்கள்" என்பது அவர்கள் மூவர் என்பதையும் அவர்களது தன்மையிலும்
ஒற்றுமையிலும் ஒருமனதிலும் ஒன்றாக இருக்கின்றனர் என்பதையும் தெளிவாக
கூறுகிறது.
* ஒன்று என்ற சொல் இதே பொருளில் 1கொரி 3:6-8 ல் பயன்படுத்தபட்டுள்ளது.
"நான் நாட்டேன், அப்போல்லோ நீ பாய்ச்சினான்" என்று கூறிய பவுல்
"நடுகிறவனும் நீர் பாய்ச்சிகிறவனும் ஒன்றாய் இருக்கிறார்கள்" என்று
கூறியுள்ளார். இந்த இடத்திலும் ஒன்று என்பது எண்ணிக்கையை குறிப்பிடாமல்
ஒருமனதுடன் ஊழியம் செய்வதை குறிபிடுகி* ஒன்று என்ற சொல் இதே பொருளில்
1கொரி 3:6-8 ல் பயன்படுத்தபட்டுள்ளது. "நான் நாட்டேன், அப்போல்லோ நீ
பாய்ச்சினான்" என்று கூறிய பவுல் "நடுகிறவனும் நீர் பாய்ச்சிகிறவனும்
ஒன்றாய் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். இந்த இடத்திலும் ஒன்று
என்பது எண்ணிக்கையை குறிப்பிடாமல் ஒருமனதுடன் ஊழியம் செய்வதை
குறிபிடுகிறது.
* "நீங்கள் யாவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள்" (கலா 3:28)
என்றும் "தேவன் ஒருவரே வாயினால் மகிமைபடுத்தும் படிக்கு (ரோம 15:5)
என்றும் எழுதப்பட்டுள்ள இடங்களிலும் ஒன்று என்பது எண்ணிக்கையை
குறிக்கவில்லை.
இதைபோலவே யோவா 10:30 ல் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பது
எண்ணிக்கையை அல்ல தன்மையிலும் ஒற்றுமையிலும் ஒன்றாய் இருப்பதை
குறிக்கிறது.
