ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 5

உலகத்தின் நடப்பைக் குறித்து நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும் என்று
வாசியுங்கள் வெளிப்படுத்தல் 17ம் அதி 11ம் வசனத்தை.

'இருந்ததும் இராதது மாகிய மிருகமே எட்டாவதானவனும் அவ்வேழிலிருந்து
தோன்றுகிறவனும், நாசமடையப் போகிறவனு மாயிருக்கிறான்'

'இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும் அவ்வேழிலிருந்து
தோன்றுகிறவனும், நாசமடையப் போகிறவனு மாயிருக்கிறான்'

யார் இந்த மிருகம்?

இவன் தான் இந்த உலகத்தைக் கடைசி நாளில் ஆளப்போகிற அந்திக்கிறிஸ்து.

இவன் மிருகம் என்று வேதவசனத்திலே அழைக்கப்படுகிறான்,

இவன் எதிலிருந்து எழும்புவான் ஏழிலிருந்து எட்டாவதானவன் எழும்புவான்.

ஏழு வல்லரசுகள் உலகத்திலே எழும்பும் என்றும், ஏழு ராஜாக்கள் உலகத்தை
ஆள்வார்கள் என்றும், சொன்ன வேததீர்க்கதரிசனப்படி,எகிப்தியர்,
அசிரியர்,
பாபிலோனியர்,
மேதியபெர்சியர்,
கிரேக்கர்,
ரோமர்
ஆண்டு ஏழாவது வல்லரசு ஏழு குன்றுகளிலிருந்து எழும்பிவிட்டது.

ஏழிலிருந்து எட்டாவதானவனு மாகிய மிருகம் எழும்பப்போகிறான்.

இந்த மிருகத்தை 'அந்திக்கிறிஸ்து என்று நாம் அறிகிறோம்'
அந்திக்கிறிஸ்துவை மிருகம் என்று சொல்லி அவனுடைய குணாதிசயத்தை வைத்து
யோவான் அழைக்கிறார்.

அந்த அந்திக்கிறிஸ்து தான் உலகத்தை கடைசி நாளில் ஆளப்போகிற உலகத்தின்
கடைசி சர்வாதிகாரி.

அவனுடைய ஆளுகைக்கு உலகம் ஆயத்தமாகிவிட்டதா?

அவனுடைய ஆளுகையின் போது உலகத்தில் என்னென்ன சட்டங்கள் கொண்டுவரப்படும்?

அவன் ஆளும் போது பொருளாதார உலகத்திலே, விஞ்ஞான உலகத்திலே என்னென்ன
காரியங்கள் நடக்கும்;

அதற்கு உலகம் ஆயத்தமாகி விட்டதா

என்பதைக் குறித்து தொடர்ந்து ஆதார பூர்வமான செய்திகளை நான்கொடுக்கப் போகிறேன்.

இன்றைக்கு ஏழாவது வல்லரசு நமது கண்களுக்கு முன்னதாய் உருவாகியிருக்கிறது.

இந்த ஏழிலிருந்து எட்டாமவனாகிய அந்திக்கிறிஸ்து எழும்பப்போகிறான் என்ற
வேதத்தின் எச்சரிப்பை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

வாணிபத்துக்காய் ஒன்று கூடின பத்துநாடுகள் இப்பொழுது ஒரு பெரிய வல்லரசாக
உருவாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும்

செய்திகளிலே வெளியானது

'ஐரோப்பிய பொதுச்சந்தையின் நாடுகள் தங்கள் எல்லைக்கு நடுவே எல்லைக்
கட்டுப்பாட்டை நீக்கிவிட்டன' என்று.

காரணம் புது வல்லரசாக, ஒரு பொது வல்லரசாக இவை உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அதுமாத்திரமல்ல சமீப செய்திகளின் படி பொது இராணுவத்தையும் இவர்கள்
நிறுவத் தீர்மானித்து விட்டார்கள்.

தனி ஐரோப்பிய நாடுகளாய் இவை இருந்தாலும் ஒரு கூட்டாட்சியை அமைக்க இவை
ஆரம்பித்திருக்கின்றன.

இந்த ஏழிலிருந்து எட்டாமவனாகிய அந்திக்கிறிஸ்து எழும்பப் போகிறான். எந்த
நேரத்திலும் அவன் வெளிப்படுவான் என்று தீர்க்கதரிசன ஆராய்ச்சியாளர்கள்
எதிர்பார்க்கிறார்கள்.

இன்னும் ஏன் அந்த அந்திக்கிறிஸ்து வெளிப்படவில்லை,

ஏன் அந்த அந்திக்கிறிஸ்து இன்னும் உலகத்தை ஆள ஆரம்பிக்கவில்லை ஏன் அந்த
அந்திக்கிறிஸ்து உலகத்தின் சர்வாதிகார ஆட்சியை இன்னும் நிறுவவில்லை.

2தெசலோனிக்கேயர்2:6அவன் தன் காலத்திலே வெளிப்படும் படிக்கு இப்பொழுது
அவனைத் தடைசெய்திருக்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.

2தெசலோனிக்கேயர்2:7அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது,
ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது
(அவன் வெயிப்படமாட்டான்).

2தெசலோனிக்கேயர்2:8நீக்கப்படும் போது அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்.

அந்திக் கிறிஸ்து என்ற அந்தஅக்கிரமக்காரன்வெளிப்படுவதை யார் தடைசெய்து
வைத்திருக்கிறார்கள்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.