இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! பாகம் - 5

1. உபத்திரபகாலத்திற்குமுன்பாக கிறிஸ்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக
வருவார்.(இரகசிகவருகை)

2. பரிசுத்தவான்களோடு நியாயத்தீர்ப்பிற்காக வருதல்.(வெளியரங்கமான வருகை)

இக்கொள்கையுடையவர்கள் சபை அல்லது பரிசுத்த ஆவியானவர் உலகிலிருந்து எடுத்துக்
கொள்ளப்படும்வரையில் அந்திக்கிறிஸ்துவானவன் வெளிப்படமுடியாது என்று
பரிசுத்த பவுலுடைய போதனையை
விசுவாசிக்கிறார்கள்.
(2 Thess 2:6-8);
நியாயத்தீர்ப்பு சம்பந்தமாக வெளிப்படுத்தல் புத்தகத்தில் 3ம்
அதிகாரத்திற்குப்பின்பு சபையைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை, இது
சபையானது
இரகசியவருகையில் எடுத்துக் கொள்ளப்பட்டாயிற்று என்பதையே
சுட்டிக்காண்பிக்கின்றது.

இரகசிய வருகை என்பது இமைப்பொழுதில் இடம்பெற்று முடிந்துவிடும், இதன்
கருத்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக மேற்கொள்ளும் இந்தச் செயற்பாட்டில
எந்த தீர்க்கதரிசனசெயற்பாடுகளும் பாதிக்கப்படாது என்பதேயாகும்.

உபத்திரபவ காலத்திற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படுதல்.

இந்தக் கொள்கையுள்யோர், உபத்திரபகாலம் தொடங்குமுன்பாகவே சபையானது
வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகின்றார்கள்.

உபத்திரப காலம் என்பது கடுங்கோபத்தினதும், நியாயத்தீர்ப்பினதும்,
வெறுப்புக்கொண்ட, இருண்ட,
அழிவுக்கான நாள்களாகும், ஆனால் இயேசுவுடன் வாழ்பவர்களுக்கு
ஆக்கினைத்தீர்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
(றோமர்.8:1
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்ட
வர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு
ஆக்கினைத்தீர்ப்பில்லை. )

சபையானது ஏற்கனவே இயேசுக்கிறிஸ்துவின் இரத்த்த்தினால் கழுவப்பட்டு
பரிசுத்தமாகவுள்ளபடியால், அதனைப்பரிசுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நியாத்தீர்ப்பு, இரகசிகவருகை என்ற இரண்டு வித்தியாசமான நிகழ்வுகள்
கூறப்படுகின்றன. ஆனால் அவை இரண்டும் ஒரேநேரத்தில்
நடைபெறமாட்டாது என்று எப்படி எம்மால்கூறமுடியும்?

மூன்றுவிதமான நிரூபணங்கள் கீழேகொடக்கப்படுகின்றன.

1. முதலாவது தானியேல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எழுபது வாரங்கள்
தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
(Dan. 9:25–27). நாங்கள் தற்போது 69-70 வாரங்களுக்கிடையில்
ஜீவிக்கின்றோம். 70வது வாரம் 7வருடங்களுக்குரிய உபத்திரபகாலமாகும்.
சபையானது 7வருட உபத்திரபகாலத்திற்கு முன்பாக பரலோகத்திற்கு எடுத்துக்
கொள்ளப்படும். (Rom. 5:9; 1 Thess. 1:10; 1 Thess. 5:9; Rev. 3:10). 70
வது வாரத்தின் கடைசியில் கிறிஸ்து அரசாட்சி செய்வதற்காக பூமிக்கு
வருவார். (Dan. 9:24; Matt. 24).

2. இரண்டாவதாக இரகசியவருகைக்கும் 2ம் வருகைக்கும் இடையிலுள்ள காலம்குறித்து
வெளிப்படுத்தலில் தெளிவாக்க்
காணக்கூடியதாகவுள்ளது.

இதில் முதலாவது மூன்று அதிகாரங்களிலும், சபையானது
பூமியிலுள்ளதாக்க் காட்டப்படுகின்றது. நான்காம் அதிகாரம் தொடங்கி 19: 10
இல் உபத்திரபகாலம் சம்பந்தமாக விபரிக்கின்றது, கர்த்தருடைய கோபம்
மனுஷகுமாரனை ஏற்றுக்கொள்ளாத உலகத்தின்மீது
ஊற்றப்படுவதாக்க் காண்பிக்கப்படுகின்றது.

இந்தக்காலத்தில் சபை உலகத்திலுள்ளதாக இங்கு கூறப்படவில்லை. மூன்றாம்
அதிகாரத்தின்முடிவில் சபையானது பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
உபத்திரபத்தின் முடிவுகாலத்தில்,
கிறிஸதுவானவர் தன்னுடைய எதிரிகளைச்
சங்கரிப்பதற்காகவும் தன்னுடைய இராஜ்ஜியத்தைச் ஸ்தாபிப்பதற்காகவும்
வருகிறார் என்று வெளிப்படுத்தல் 19:11இல் கூறப்பட்டுள்ளது.

3. மூன்றாவதாக நாம் கவனிக்கவேண்டிய மிகமுக்கிய விடயமானது, கிறிஸ்துவானவர்
தன்னுடைய பரிசுத்தவான்னளுக்காக வருகிறார் என்பதற்கும் தன்னுடைய
பரிசுத்தவான்களிற்காகவும் வருகிறார்
என்பதற்குமிடையில் காணப்படும் இடைவெளியை நாம் கணக்கிலெடுக்க
வேண்டும்.

இரகசிக வருகையில் பரிசுத்தவான்கள் யாவரும் ஒன்றுசேர்க்கப்பட்டு
பரலோகத்திற்குள் சேர்க்கப்பட்டு மகிமையான சரீரம்
கொடுக்கப்படுகின்றார்கள்.

ஆனால் கிறிஸ்து அரசாட்சிக்காக வரும்போது, மகமையின் சரீரம் கொடுக்கப்படாத
விசுவாசிகள்
பூமியிலிருப்பார்கள், ஆயிரம்வருட அரசாட்சியில் அவர்கள்திருமணம்செய்து
பிள்ளைகள்பெற்று வளர்ப்பார்கள், (Isa. 11:6, 8).

இந்தவிசுவாசிகள் எங்கிருந்து வந்தவர்கள், ? இவர்கள் இரகசிய வருகைக்கும்
வெளிப்படுத்தல் காலத்திற்குமிடையி
லுள்ளவர்கள் என்றும் அந்தக்காலத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டவர்க
ளாயிருக்கலமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள
உபத்திரப காலத்தின் மத்தியில் சபைஎடுத்துக் கொள்ளப்படும்
உபத்திரப காலத்தின் மத்தியில் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்ற
கொள்கையுடையோர், உபத்திரப காலத்தின் மத்தியில் சபை எடுத்துக்
கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள்.

இவர்கள் 42 மாதம் உபத்திரபகாலம் என்று தானியல் (e.g., Dan 7, 9, and 12;
Rev 11 and 12)புத்தகத்தில் கூறிய 7வாரங்கள் எனபதை விசுவாசித்து அதன் ½
பகுதியாகிய காலத்தை ஏற்றுக்கொள்ளிறார்கள். முழு

உபத்திரபகாலத்தில் இறுதி அரைப்பகுதியே மகா உபத்திரப காலம் என்
நம்புகிறார்கள். (Rev 16—18)
7 வாரத்தில் முதல் அரைப்பகுதியில், சபையானது உலகத்தில் இருக்கும்
என்றும், அவர்கள் அந்திக்கிறிஸ்த்துவுக்கு சாட்சியாக
இருப்பார்களென்றும், அவனுடையகையின்கீழ் உபத்திரப்ப் படுவார்கள் என்றும்
நம்புகிறார்கள்,

ஆனால் சபையானது நியாயத்தீர்ப்புக்காலத்திற்கு
முன்பு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள்.

அதன்பின்பதான் கர்த்தருடைய கோபம் உலகத்தின்மீது ஊற்றப்படும் என்று நம்புகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.