இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! பாகம் - 4

கர்த்தருடைய இரகசிக வருகை எப்படி இருக்கும்?.

*.எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய்
எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ள தாகிய இது
அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்
கொள்ளவேண்டும்.

அழிவுள்ளதாகிய இது அழியாமை யையும், சாவுக்கேது வாகிய இது சாவாமையையும்
தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று
எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

உயிர்த்தெழுதலுக்குப்பிற்பாடு இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் எப்படி
இருந்த்தோ அப்படியெ எங்களுடைய சரீரமும் அழியாமையுடையதாய் மாற்றப்படும்.
1Co 15:52 -55

*.ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும்,
தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,
மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில்
எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட
இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர்
தேற்றுங்கள். 1Th 4:16 -18

*.அவருடைய
கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும்
என்றார்கள். Rev 6:17

*.எங்களுக்குத்
தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல்,
அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும்,
பாவிகளுக்கும், அசுத்தருக்கும்,
சீர்கெட்டவர்களுக்கும்,
தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத்
திருடுகிற வர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
நித்தியானந்த தேவனுடைய மகிமையான
சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு
எதிரிடையா யிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய்
விதிக்கப்பட்டிருக்கிறது.
1Ti 1:9 -11

பரிசுத்த பவுல் தன்னுடைய கடிதங்களில் இரகசிகவருகை பற்றி வேறெங்காவது கூறியுள்ளாரா?

*.இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும்
நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு
நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லா தவர்களாய்
எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 1Co 15:51 -52

*.பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து,
ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன்
மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே
இழுத்துக்கொண்டு போனார்கள். Act 14:19

*.அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப்
புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 2Co 12:4

*.ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்தது
முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும்
சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். Mar 13:19

இரகசிய வருகைபற்றி மூன்றுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவையாவன.

1. உபத்திரபவ காலத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளப்படுதல்.

2. உபத்திரபவ காலத்தின் மத்தியில் எடுத்துக் கொள்ளப்படுதல்

3. உபத்திரபவ காலத்தின்பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல்

உபத்திரப காலத்திற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படும் என்ற
கொள்ளையுடயவர்கள் இயேசுவின் இரகசிக வருகையில் பரிசுத்தவான்களாக
ஜீவிக்கும் மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் வானத்தில் "சேர்த்துக்
கொள்ளப்படல்" எனறபதத்தை உபயோகிக்கின்றனர்.

இதற்காக
1தெசலோனிக்கர் 4: 15-17
(கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச்
சொல்லுகிறதாவது:

கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாமநித்திரையடைந்தவர்களுக்கு
முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான
தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து
இறங்கிவருவார்;

அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,
மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய்
எப்பொழுதும்
கர்த்தருடனேகூட இருப்போம். )

இக்கொள்கையுடையவர்கள் உபத்திரபவகாலத்திற்கு முன்பே இரகசிகவருகை
இடம்பெறும் என்று நம்புகிறார்கள். இவர்கள் கர்த்தருடைய இரண்டாம்வருகையை
இரண்டுவகையாக வகுத்துள்ளார்கள். இக்கருத்தானது சபையையும்
இஸ்ரவேலர்களையும் குறித்து உருவாகியுள்ளது. முடிவுகாலத்தில்
யூதர்களுக்கான செயற்பாடுகளும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றப்படல்
வேண்டும், அதற்கு முன்பாக சபையானது பூமியிலுருந்து அகற்றப்படல் வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.