வேதாகம வரலாறு பாகம் 5

தமிழ் வேதாகம சரித்திரம்:-

இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே
கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ்
மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய
மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது.
இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ்
மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு.

தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய கார
ணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக்.
இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய பாராத்தால், எப்படி யாவது
இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தன் அரண்மனை
பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால்
இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு தேசத்தில் ஒருவரும்
முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய ஜெர்மனியின் பக்கம்
திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29
வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு முன் வந்தார்கள்.
சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த
அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும்
சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார் தேசத்திலே
ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ
தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த
வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு
அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம்
இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு
இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார். வீரமும்,
விடாமுயற்ச்சியும் நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின்
சரித்திரம். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த
நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ
சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா
ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு
தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன்
வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று
விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது. சீகன் பால்க் இந்தியாவிற்குப்
போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை

இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு இருவருமே மிசனெரி தகுதித்
தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது. அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை
செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார். இறு தியில்
டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக
குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி
பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே பிரதிஷ்டை
செய்யப்பட்டார்கள். அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் இருவரும்,
இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக
தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள்.

அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு தடைகள் சொந்த நிலத்தில்
மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த
மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக்
கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம்
தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு
மாபெரும் தடை காத்திருந்தது.

ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியானது
தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள
டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள
டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில்
அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும்
விஷயத்தில் இந்த டென்மார்க் கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத்
தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல்
இடைய று செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில்
வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ
னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை
கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன் பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல்
பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு வந்து சோர்ந்தபோது,
கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும்
இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே
காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக அந்தக்
கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை
நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த
கப்பலின் தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான்.
ஆனால் அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள்
இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ
சரித்திரத்திலே பொன் னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள். 1706 ஆம்
ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள்
இறங்கினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.