மொழி
ஆராய்ச்சியாளர்களின்
கருத்துக்களையும்,
தமிழ் அறிஞர்களின்
கூற்றுக்களையும்
பார்க்கையில், மனிதன்
தோன்றிய இடம்
குமரிக்கண்டம்
என்கின்றனர்.
முதல்
மனிதன் தமிழன். முதல்
மொழி தமிழ் மொழி.
குமரிக்கண்டத்தினில்
தோன்றிய மனிதனே
வடக்கே பயணித்து
சென்று அங்கே சில
நாகரீகங்களை நிறுவி
பின் உலகம் முழுவதும்
பரவுகின்றான் .
இதற்கு
சான்றாக பல விடயங்கள்
உள்ளது.
உதாரணமாக
பாகிஸ்தானிலுள்ள
கொற்கை (Gorkai. Gorkhai),
வஞ்சி (Vanji),
தொண்டி (Tondi),
மத்ரை (Matrai),
உறை (Urai),
கூடல் கட் (Kudal Garh)
மற்றும் கோளி (Koli);
ஆப்கானிஸ்தானிலுள்ள
கொற்கை (Korkay. Gorkay).
பூம்பகார் (Pumbakar)
ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க
இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டுள்ள
தலைநகரங்கள் மற்றும்
துறைமுக நகரங்களின்
பெயர்களான
கொற்கை.
வஞ்சி .
தொண்டி.
மதுரை .
உறையூர்.
கூடல் .
கோழி.
பூம்புகார்
ஆகியவற்றை
நினைவு
படுத்துகின்றன.
மொழியறிஞர்களின்
கூற்றுப்படி ஒரு
மொழி அது தோன்றிய
இடத்திலேயே தான்
செம்மையாக இருக்கும்.
அந்த இடத்தினை விட்டு
தொலைவில் அந்த
மொழி திரியும்
வாய்ப்பு அதிகமாக
இருக்கின்றது .
இதன்
அடிப்படையிலே, வடக்கே
செல்ல செல்ல தமிழ்
வேறு மொழிகளாக
திரிந்து இருப்பதும்,
தெற்கே செல்ல செல்ல
அது செழித்து
இருப்பதும், தமிழ்
தெற்கிலேயே தோன்றிய
மொழி என்பதற்கு நல்ல
சான்று என்று அவர்கள்
கருதுகின்றனர்.
இரண்டாவது, ஒரு
நாகரீத்தில் இருந்து
மற்றொரு நாகரீகத்திற்கு
பெயர்கள் கொண்டு
செல்லப்பட்டு
இருக்கின்றன என்றால்
முதலில் தோன்றிய
நாகரீகம் காலத்தில்
இரண்டாவது
நாகரீகத்திற்கு
முந்தியதாக
இருந்திருக்க வேண்டும்.
எனவே வடக்கில் இருந்து
இந்த பெயர்கள் தெற்கே
வந்தன என்றால் வடக்கில்
உள்ள நாகரீகம் காலத்தில்
தெற்கு நாகரீகங்களுக்கு
முன்னோடியாக
இருந்திருக்க வேண்டும்.
இப்போதைய அறிவியல்
ஆராய்ச்சிகள் உலக
நாகரீகங்கள் சுமார் 5000
ஆண்டுகளுக்கு
முன்னால் சிந்து
சமவெளியிலோ,
சுமேரியாவிலேயோ
அல்லது
மொசபடோ
மியாவிலேயோ
தோன்றி இருக்க
வேண்டும் என்று
கூறுகின்றன .
அதற்கு
முன்னர் நாகரீகங்கள்
இருந்தனவா?
அதற்கு
முன்னர் மக்கள் எவ்வாறு
இருந்தனர் என்று அந்த
ஆராய்ச்சிகள் இன்னும்
பதில் சொல்லவில்லை.
க்ரகம் கேன்க்க் (Graham Hancock)
என்ற ஆங்கிலேய
ஆய்வாளர் உலகமே
சுமேரியாவையும்
மொசபடோ
மியாவையும் சிந்து
சமவெளியையும்
ஆராய்ந்துக் கொண்டு
இருந்த வேளையில் இவர்
இந்தியாவில்
தெற்கினை நோக்கி தன்
ஆராய்ச்சியினை
தொடங்குகின்றார்.
அவரின் ஆராய்ச்சி
பிரம்மிப்பூட்டும் பல
தகவல்களை
வெளியிடுகின்றது.
உதாரணமாக சிந்து
சமவெளிக்கும்
பழமையான நாகரீகம்
ஒன்று குஜராத்
மாநிலத்தில்
கடலோரத்தில்
கண்டுப்பிடிக்கப்பட்டு
உள்ளது .அந்த
நாகரீகதினைத்
தொடர்ந்து அவர் மீண்டும்
தெற்கே நோக்கி
நகர்கின்றார்.
அங்கே
குஜராத் நாகரீகத்தினை
விட பழமையான ஒரு
மாபெரும்
நாகரீகத்தினை
தமிழகத்தினில் அவர்
கண்டுப்பிடிக்கின்றார்.
அந்த இடம் பூம்புகார்
எனப்படும்
காவேரிப்பூம்பட்டினம் .
அவரின் கூற்றுப் படி
இந்த நாகரீகம் மிகப்
பழமையானது என்றும்
அந்த நாகரீகம் கடற் கோளால்
அழிந்தது என்றும் (400
அடி உயர் அலைகளால்)
என்றும்
குறிப்பிடுகின்றார்.
மேலும் அந்த இடங்களை
நன்றாக ஆராய்ந்தோம்
என்றால் பல உண்மைகள்
வெளி வரும் என்றும்
'அந்த இடத்தினை ஏன்
ஆராயாது இது வரை
விட்டு வைத்து
இருக்கின்றார்கள் என்பது
தமக்கு
வியப்பளிப்பதாகவும்'
அவர் கூறுகின்றார்.
இவருடைய இந்தக்
கருத்தினை
இங்கிலாந்தில் உள்ள
துர்கம் பல்கலைக்கழகமும்
(Durham university) ஏற்று
உள்ளது.
ஆனால் அந்த
ஆராய்ச்சிகளை இந்திய
அரசு மேற்கொண்டு
மேற்கொள்ள எவ்வித
நடவடிக்கைகளையும்
எடுக்கவில்லை .
மேலும்
பூம்புகார் பற்றிய இந்தத்
தகவல்கள் மக்களுக்கு
முறைப்படி
அறிவிக்கப்படவும்
இல்லை.
தமிழர்கள்
பூம்புகார் பற்றிக்
கூறும் செய்திகள்
உண்மையென்று சில
ஆராய்ச்சிகள் கூறும்
பொழுது
குமரிக்கண்டதினைப்
பற்றி மட்டும் அவர்கள்
பொய் சொல்லி
இருப்பார்களா?
தொடர்ந்தும் என்னுடன்
இணைந்திருங்கள்.
இது சத்தியத்தை
அறிந்துகொள்ள ஓர்
அருமையான தேடல்.
நீங்கள் அறிந்திராத
தகவல்கள் ஆதாரங்களுடன்
வர இருக்கின்றன.
நன்றி.
