கடந்த பதிவில்
குமரிக்கண்டம் என்றால்
என்ன? என்று பார்த்தோம்.
இப்போது நோவா
காலத்து வெள்ளம்
கதையாக எப்படி மற்ற
சமயத்தவர்களிடம்
பரவியது? என்பது
பற்றிப் பார்க்கப்
போகிறோம்.
உலகம் இதற்கு முன்னர்
அழிந்து இருக்கின்றதா?
என்ற ஒரு கேள்வியைக்
கேட்டால்?
கிறிஸ்தவர்கள் "ஆம் உலகம்
அழிந்தது.
கடவுள் வெள்ளத்தின்
மூலம் உலகத்தினை
அழித்தார்".
இந்துக்கள்
"ஆம், கிருஷ்ணரின் மச்ச
அவதாரத்தின் போது,
உலகம் வெள்ளத்தால்
அழிந்தது" என்று
சொல்வார்கள்.
தமிழ் அறிஞர்கள் "ஆம்,
குமரிக்கண்டம்
கடற்கோள்களால்
அழிந்தது" என்று
சொல்வார்கள்.
மேலும்,
சுமேரிய
மக்களிடத்திலும்,
மெசொபொடாமிய
மக்களிடத்திலும் உலகம்
வெள்ளத்தால் அழிந்த
கதைகள் உள்ளன.
ஆதாம், ஏவாளுக்குப்
பின்னர் புதிய
மனிதர்களும் பிறந்து
விட்டார்கள். அவர்கள்
இறைவனுக்கு
விரோதமாகத்
தவறுகளும் செய்யத்
தொடங்கி விட்டார்கள்.
இறைவன் அதனைக் கண்டு
திருந்த மனதில்லாத
அவர்களை அழிக்க
முடிவு
எடுத்துவிட்டார்.
உலகினை அழிக்க
வெள்ளம் தயாராக
இருக்கின்றது.
இறுதியில் வெள்ளத்தால்
அழிக்கின்றார். இந்தச்
சம்பவம் மற்ற மற்ற
நாகரிகத்தாரிடையே
பிற்காலத்தில் பல்வேறு
கதைகளாக
பாரப்பப்படுகிறது.
இந்த உலகம் எத்தனை
முறை வெள்ளத்தால்
அழிந்து உள்ளது என்ற
ஒரு கேள்வி எழலாம்?.
"இனி
மாம்சமானவை
களெல்லாம்
ஜலப்பிரளயத்தினால்
சங்கரிக்கப்படுவதில்லை
யென்றும், பூமியை
அழிக்க இனி ஜலப்பிரளயம்
உண்டாவதில்லை
யென்றும், உங்களோடே
என்
உடன்படிக்கையை
ஏற்படுத்துகிறேன்
என்றார்.
(ஆதியாகமம் 9:11)".
ஆகவே ஒரே ஒரு
தடவையே உலகம் நீரினால்
அழிக்கப்பட்டது.
இன்னொரு உலக அழிவு
நீரினால் வந்து இருக்க
வாய்ப்பில்லை.
உலகம்
ஒரே ஒரு முறை
நீரினால் அழிக்கப்பட்டு
இருக்கின்றது.
அந்த வரலாறே
காலப்போக்கில் மனிதன்
சென்ற இடங்களில் எல்லாம்
பல்வேறு கதைகளாக
மாறி இருக்கின்றது
என்றும் புலனாகும்.
நோவா பாவம் செய்து
பெருகி இருந்த
மனிதர்களுள் உத்தமனாக
இருந்தவன். எனவே
இறைவன் அவனைத்
தேர்ந்து எடுத்து
அவனை ஒரு படகினைச்
செய்ய சொல்லுகின்றார்.
அவர் இந்த உலகினை
வெள்ளத்தினைக்
கொண்டு அழிக்கப்
போவதாகவும்,
அவ்வாறு உலகம்
அழியும் போது
நோவா அவன்
குடும்பத்தினரையும்
உலகில் உள்ள மற்ற
உயிரினங்களையும்
அந்தப் படகினில் ஏற்றி
உயிர் பிழைக்குமாறும்
சொல்லுகின்றார்.
அவ்வாறே நோவாவும்
செய்து வெள்ளத்தில்
பிழைக்கின்றான்.
மீண்டும் உலகில் அவன்
வாழ்வினையும்
தொடங்குகின்றான்.
நோவா என்றவன்
படகுடனேயே தொடர்புக்
கொண்டவனாக
வேதாகமத்தில்
அறியப்படுகின்றான்.
நோவா என்றால்
அனைவருக்கும் படகு
தான் நினைவிற்கு
வரும்.
இங்கு தான் ஒரு
தமிழ் வார்த்தையைப்
பற்றிப் பார்க்க வேண்டி
வருகின்றது.
'நாவாய்' என்பது
தமிழில் படகிற்கு
வழங்கும் பல பெயர்களில்
ஒன்று.
இங்கு ஆச்சர்யம்
தருவது என்னவென்றால்
'நாவாய்' என்றச்
சொல்லுக்கும் 'நோவா'
என்ற சொல்லுக்கும் உள்ள
பொருத்தம் தான்.
வரலாற்று அறிஞர்களும்
மொழி அறிஞர்களும் '
நாவாய்' என்றச் சொல்லே
மருவி 'நோவா' என்று
மாறி இருக்கின்றது
என்று கூறுகின்றனர்.
இறைவன் ஒரு மனிதனை
நாவாயினைக்
கட்டச் சொல்லுகின்றார்.
அந்த நாவாயினைக்
கட்டிய மனிதனே
காலப்போக்கில் மருவி
நோவாவாக
மாறி விட்டான் என்பதே
அறிஞர்களின் கருத்து.
மேலும்
வேதாகத்தின்படி
இறைவன் நோவாவிற்கு
படகினைக் கட்ட சில
அறிவுரைகள்
தருகின்றார்.
"நீ கொப்பேர் மரத்தால்
உனக்கு ஒரு பேழையை
உண்டாக்கு; அந்தப்
பேழையிலே அறைகளை
உண்டுபண்ணி, அதை
உள்ளும் புறம்புமாக
கீல்பூசு
(ஆதியாகமம் 6:14)".
இங்கே கொப்பேர் மரம்
என்று ஒரு மரத்தினைக்
குறிப்பிடுகின்றார்.
யாரும் 'கொப்பேர் மரம்'
என்ற ஒன்றினை கேள்விப்
பட்டு இருக்க
வாய்ப்பில்லை.
எனவே
அது கொப்பேர் மரம்
தானா என்பதில் ஒரு ஐயம்
இருக்கின்றது.
அது ஏன்
'காப்பெரு' மரமாக
இருக்கக் கூடாது?.
'காப்பெரு மரம்'
மொழியாக்கத்தின்
போது 'கொப்பேர்
மரமாக'
மாறி இருக்கலாம்.
'காப்பெரு' என்றால்
காட்டில் உள்ள பெரிய
மரம் என்று
அர்த்தம்.
இறைவன்
நோவாவை ஒரு மிகப்
பெரிய கப்பலினைக் கட்டச்
சொல்லுகின்றார்.
அந்தக்
கப்பலின் அளவையும்
வேதாகமத்தின்
படி இறைவனே கூறி
இருக்கின்றார்.
பாகம் - 2 விரைவில்.....
நோவா காலத்து வெள்ளம் கதையாக எப்படி மற்ற சமயத்தவரிடம்பரவியது? பாகம் 1
0
April 11, 2016
Tags
