இக்காலக் கட்டத்தில்
குமரிக் கண்டம் உண்மை
என்று சொன்னாலும்
அது வெறும்
நம்பிக்கையே.
குமரிக்கண்டம் இல்லை
என்றாலும் அதுவும்
வெறும் நம்பிக்கையே.
ஏனெனில் குமரிக்கண்டம்
என்ற ஒன்று இருந்ததா?
இல்லையா? என்பதனைப்
பற்றிய முழுவீச்சான
ஆராய்ச்சிகள்
தொடங்கப்படவே இல்லை.
சிறிது தொடங்கப்பட்ட
ஆராய்ச்சிகளும்
பாதியில்
நிறுத்தப்பட்டு உள்ளன.
குமரிக்கண்டம் உண்மை
என்போர் அது உண்மை
என்று அவர்கள்
நம்புவதற்கு சில
காரணிகளைக்
கூறுகின்றனர்.
அவையாவன :-
1.ஆபிரிக்கா,
மடகாசுக்கர் மற்றும்
இந்தியா ஆகிய
நாடுகளில்
காணப்படும் மரங்கள்,
விலங்குகள் மற்றும்
தாவரங்கள் ஒன்றுப்
போல் இருக்கும்
விடயம்.
2.ஆஸ்திரேலிய
பழங்குடி மக்கள்
மற்றும் ஆபிரிக்க
பழங்குடி மக்கள்
பேசும் மொழி
தமிழினை ஒத்து
இருத்தல்.
3.சங்க இலக்கிய
பாடல்களின்
செய்திகள்.
4.பழந்தமிழர்களின்
பழக்க வழக்கங்கள்.
குறிப்பாக
கடலோரத்தில்
வாழும் மக்களின்
பழக்கவழக்கங்கள்.
5.ஆடு மேய்ச்சான்
பாறை என்று
பெயர் கொண்ட
பாறை
கடற்கரையில்
இருந்து ஆறு
கிலோமீட்டர் தள்ளி
கடலின் நடுவில்
இருக்கும் செய்தி.
6..தனுசுக்கோடி
மற்றும்
காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள்
கடலில் மூழ்கிய
வரலாறு.
ஆனால் குமரிக்கண்டம்
என்பது கற்பனையே
என்றுக் கூறுவோர் சில
கூறும் காரணங்கள்
கூறுகின்றார்கள்.
அவையாவன :-
1.இதை
அறிவியல் இன்னும்
உறுதிப்படுத்தவில்லை.
2 .இக் கதைகள் சங்க
இலக்கிய செய்திகளில்
மட்டுமே இருப்பதினால்
இவை வரலாறாக
ஏற்றுக்கொள்ள பட
மாட்டாது . இவை
புராணங்களே. என்கின்றனர்.
இப்பொழுது நாம் சில
விடயங்களை தெளிவு
படுத்திக் கொள்ளலாம்.
அறிவியல்
குமரிக்கண்டதினை
மறுக்கவும் இல்லை
ஆதரிக்கவும் இல்லை.
ஏனெனில் அறிவியல்
அங்கே சென்று
முழுமையாக
ஆராய்ந்தே பார்க்க
வில்லை .ஆராய்ந்து
தெளிவு படுத்தாத
விடயங்களை அறிவியல்
என்று நாம் ஏற்றுக்
கொள்ள முடியாது.
ஆனாலும் இதனால்
குமரிக் கண்டம் ஒன்று
இல்லவே இல்லை என்றும்
கூறிவிட முடியாது.
